குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௩௩
Qur'an Surah Al-Baqarah Verse 33
ஸூரத்துல் பகரா [௨]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ يٰٓاٰدَمُ اَنْۢبِئْهُمْ بِاَسْمَاۤىِٕهِمْ ۚ فَلَمَّآ اَنْۢبَاَهُمْ بِاَسْمَاۤىِٕهِمْۙ قَالَ اَلَمْ اَقُلْ لَّكُمْ اِنِّيْٓ اَعْلَمُ غَيْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِۙ وَاَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا كُنْتُمْ تَكْتُمُوْنَ (البقرة : ٢)
- qāla
- قَالَ
- He said
- கூறினான்
- yāādamu
- يَٰٓـَٔادَمُ
- "O Adam!
- ஆதமே
- anbi'hum
- أَنۢبِئْهُم
- Inform them
- அறிவிப்பீராக/அவர்களுக்கு
- bi-asmāihim
- بِأَسْمَآئِهِمْۖ
- of their names"
- பெயர்களை/அவற்றின்
- falammā
- فَلَمَّآ
- And when
- போது/அறிவித்தார்
- anba-ahum
- أَنۢبَأَهُم
- he had informed them
- அவர்களுக்கு
- bi-asmāihim
- بِأَسْمَآئِهِمْ
- of their names
- பெயர்களை/அவற்றின்
- qāla
- قَالَ
- He said
- கூறினான்
- alam aqul
- أَلَمْ أَقُل
- "Did not I say
- நான் கூறவில்லையா?
- lakum
- لَّكُمْ
- to you
- உங்களுக்கு
- innī
- إِنِّىٓ
- Indeed, I
- நிச்சயமாக நான்
- aʿlamu
- أَعْلَمُ
- [I] know
- அறிவேன்
- ghayba
- غَيْبَ
- (the) unseen
- மறைவானவற்றை
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- (of) the heavens
- வானங்கள்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- and the earth
- இன்னும் பூமி
- wa-aʿlamu
- وَأَعْلَمُ
- and I know
- இன்னும் அறிவேன்
- mā tub'dūna
- مَا تُبْدُونَ
- what you reveal
- எதை/ வெளிப்படுத்துகிறீர்கள்
- wamā kuntum taktumūna
- وَمَا كُنتُمْ تَكْتُمُونَ
- and what you [were] conceal"
- இன்னும் எதை/இருந்தீர்கள்/மறைக்கிறீர்கள்
Transliteration:
Qaala yaaa Aadamu ambi' hum biasmaaa'ihimfalammaaa amba ahum bi asmaaa'ihim qaala alam aqul lakum inneee a'lamu ghaibas samaawaati wal ardi wa a'lamu maa tubdoona wa maa kuntum taktumoon(QS. al-Baq̈arah:33)
English Sahih International:
He said, "O Adam, inform them of their names." And when he had informed them of their names, He said, "Did I not tell you that I know the unseen [aspects] of the heavens and the earth? And I know what you reveal and what you have concealed." (QS. Al-Baqarah, Ayah ௩௩)
Abdul Hameed Baqavi:
(பின்னர் இறைவன்) "ஆதமே! நீங்கள் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவியுங்கள்" எனக் கூறினான். அவர் அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அறிவித்தபொழுது அவன் (மலக்குகளை நோக்கி) "பூமியிலும் வானங்களிலும் (உங்களுக்கு) மறைவானவைகளை நிச்சயமாக நான் நன்கறிபவன் என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா? ஆகவே, நீங்கள் (ஆதமை பற்றி) வெளியிட்டதையும், மறைத்துக் கொண்டதையும் நிச்சயமாக நான் (நன்கு) அறிவேன்" என்றான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௩௩)
Jan Trust Foundation
“ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?” என்று (இறைவன்) கூறினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
"ஆதமே! அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக" எனக் கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் அறிவித்தபோது, "வானங்கள் இன்னும் பூமியின் மறைவானவற்றை நிச்சயமாக நான் அறிவேன்; இன்னும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் நீங்கள் மறைத்திருந்ததையும் அறிவேன்" என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா? எனக் கூறினான்.