Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௮௫

Qur'an Surah Al-Baqarah Verse 285

ஸூரத்துல் பகரா [௨]: ௨௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اٰمَنَ الرَّسُوْلُ بِمَآ اُنْزِلَ اِلَيْهِ مِنْ رَّبِّهٖ وَالْمُؤْمِنُوْنَۗ كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰۤىِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖۗ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْ رُّسُلِهٖ ۗ وَقَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ (البقرة : ٢)

āmana
ءَامَنَ
Believed
நம்பிக்கை கொண்டார்
l-rasūlu
ٱلرَّسُولُ
the Messenger
தூதர்
bimā unzila
بِمَآ أُنزِلَ
in what was revealed
இறக்கப்பட்டதை
ilayhi
إِلَيْهِ
to him
தமக்கு
min
مِن
from
இருந்து
rabbihi
رَّبِّهِۦ
his Lord
தமது இறைவன்
wal-mu'minūna
وَٱلْمُؤْمِنُونَۚ
and the believers
இன்னும் நம்பிக்கையாளர்கள்
kullun
كُلٌّ
All
எல்லோரும்
āmana
ءَامَنَ
believed
நம்பிக்கை கொண்டார்
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
wamalāikatihi
وَمَلَٰٓئِكَتِهِۦ
and His Angels
இன்னும் அவனுடைய வானவர்கள்
wakutubihi
وَكُتُبِهِۦ
and His Books
இன்னும் அவனுடைய வேதங்கள்
warusulihi
وَرُسُلِهِۦ
and His Messengers
இன்னும் அவனுடைய தூதர்கள்
lā nufarriqu
لَا نُفَرِّقُ
"Not we make distinction
பிரிவினை காட்டமாட்டோம்
bayna aḥadin
بَيْنَ أَحَدٍ
between any
எவருக்கு மத்தியிலும்
min
مِّن
of
இருந்து
rusulihi
رُّسُلِهِۦۚ
His Messengers
அவனுடையதூதர்கள்
waqālū
وَقَالُوا۟
And they said
இன்னும் கூறினார்கள்
samiʿ'nā
سَمِعْنَا
"We heard
செவியுற்றோம்
wa-aṭaʿnā
وَأَطَعْنَاۖ
and we obeyed
இன்னும் கட்டுப்பட்டோம்
ghuf'rānaka
غُفْرَانَكَ
(Grant) us Your forgiveness
உன் மன்னிப்பை
rabbanā
رَبَّنَا
our Lord
எங்கள் இறைவா
wa-ilayka
وَإِلَيْكَ
and to You
இன்னும் உன் பக்கமே
l-maṣīru
ٱلْمَصِيرُ
(is) the return"
மீளுமிடம்

Transliteration:

Aamanar-Rasoolu bimaaa unzila ilaihi mir-Rabbihee walmu'minoon; kullun aamana billaahi wa Malaaa'ikathihee wa Kutubhihee wa Rusulih laa nufarriqu baina ahadim-mir-Rusulihee wa qaaloo sami'naa wa ata'naa ghufraanaka Rabbanaa wa ilaikal-maseer (QS. al-Baq̈arah:285)

English Sahih International:

The Messenger has believed in what was revealed to him from his Lord, and [so have] the believers. All of them have believed in Allah and His angels and His books and His messengers, [saying], "We make no distinction between any of His messengers." And they say, "We hear and we obey. [We seek] Your forgiveness, our Lord, and to You is the [final] destination." (QS. Al-Baqarah, Ayah ௨௮௫)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே! நம்முடைய) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்ட (வேதத்)தை மெய்யாகவே நம்பிக்கை கொள்கின்றார். (அவ்வாறே மற்ற) நம்பிக்கையாளர்களும் (நம்பிக்கை கொள்கின்றனர். இவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். தவிர அவனுடைய தூதர்களில் எவரையும் (தூதர் அல்லவென்று) நாங்கள் பிரித்து (நிராகரித்து) விடமாட்டோம் என்றும், "(இறைவனே! உன் வேத வசனங்களை) நாங்கள் செவியுற்றோம். (உன் கட்டளைக்கு) நாங்கள் வழிப்பட்டோம். எங்கள் இறைவனே! நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகின்றோம். உன்னிடமேதான் நாங்கள் சேர வேண்டியதிருக்கின்றது" என்றும் கூறுகிறார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௮௫)

Jan Trust Foundation

(இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்| “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தூதர் தமது இறைவனிடமிருந்து தமக்கு இறக்கப்பட்டதை நம்பிக்கை கொண்டார், நம்பிக்கையாளர்களும் (நம்பிக்கை கொண்டனர்). எல்லோரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டார்கள். அவர்கள் கூறினார்கள்: அவனுடைய தூதர்களில் எவருக்கு மத்தியிலும் பிரிவினை காட்டமாட்டோம்; செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்; எங்கள் இறைவா! உன் மன்னிப்பை(க் கேட்கிறோம்). உன் பக்கமே (எங்கள்) மீளுமிடம் இருக்கிறது.