Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௮௩

Qur'an Surah Al-Baqarah Verse 283

ஸூரத்துல் பகரா [௨]: ௨௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَاِنْ كُنْتُمْ عَلٰى سَفَرٍ وَّلَمْ تَجِدُوْا كَاتِبًا فَرِهٰنٌ مَّقْبُوْضَةٌ ۗفَاِنْ اَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِى اؤْتُمِنَ اَمَانَتَهٗ وَلْيَتَّقِ اللّٰهَ رَبَّهٗ ۗ وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَۗ وَمَنْ يَّكْتُمْهَا فَاِنَّهٗٓ اٰثِمٌ قَلْبُهٗ ۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ ࣖ (البقرة : ٢)

wa-in kuntum
وَإِن كُنتُمْ
And if you are
இன்னும் நீங்கள்இருந்தால்
ʿalā safarin
عَلَىٰ سَفَرٍ
on a journey
பயணத்தில்
walam tajidū
وَلَمْ تَجِدُوا۟
and not you find
இன்னும் நீங்கள்பெறவில்லை
kātiban
كَاتِبًا
a scribe
ஓர் எழுதுபவரை
farihānun
فَرِهَٰنٌ
then pledge
அடமானங்கள்
maqbūḍatun
مَّقْبُوضَةٌۖ
in hand
கைப்பற்றப்பட்டது
fa-in amina
فَإِنْ أَمِنَ
Then if entrusts
நம்பினால்
baʿḍukum
بَعْضُكُم
one of you
உங்களில் சிலர்
baʿḍan
بَعْضًا
(to) another
சிலரை
falyu-addi
فَلْيُؤَدِّ
then let discharge
நிறைவேற்றவும்
alladhī
ٱلَّذِى
the one who
எவர்
u'tumina
ٱؤْتُمِنَ
is entrusted
நம்பப்பட்டார்
amānatahu
أَمَٰنَتَهُۥ
his trust
அவருடைய நம்பிக்கையை
walyattaqi
وَلْيَتَّقِ
And let him fear
இன்னும் அவர் அஞ்சவும்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
rabbahu
رَبَّهُۥۗ
his Lord
அவருடையஇறைவன்
walā taktumū
وَلَا تَكْتُمُوا۟
And (do) not conceal
இன்னும் மறைக்காதீர்கள்
l-shahādata
ٱلشَّهَٰدَةَۚ
the evidence
சாட்சியத்தை
waman
وَمَن
And whoever
இன்னும் யார்
yaktum'hā
يَكْتُمْهَا
conceals it
அதை மறைப்பார்
fa-innahu
فَإِنَّهُۥٓ
then indeed he
நிச்சயமாக அவர்
āthimun
ءَاثِمٌ
(is) sinful -
பாவியாகிவிடும்
qalbuhu
قَلْبُهُۥۗ
his heart
அவனுடைய உள்ளம்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
bimā
بِمَا
of what
எதை
taʿmalūna
تَعْمَلُونَ
you do
செய்கிறீர்கள்
ʿalīmun
عَلِيمٌ
(is) All-Knower
நன்கறிந்தவன்

Transliteration:

Wa in kuntum 'alaa safarinw wa lam tajidoo kaatiban farihaanum maqboodatun fa in amina ba'dukum ba'dan falyu'addil lazi tumina amaa natahoo walyattaqil laaha Rabbah; wa laa taktumush shahaadah; wa mai yaktumhaa fa innahooo aasimun qalbuh; wallaahu bimaa ta'maloona 'Aleem (QS. al-Baq̈arah:283)

English Sahih International:

And if you are on a journey and cannot find a scribe, then a security deposit [should be] taken. And if one of you entrusts another, then let him who is entrusted discharge his trust [faithfully] and let him fear Allah, his Lord. And do not conceal testimony, for whoever conceals it – his heart is indeed sinful, and Allah is Knowing of what you do. (QS. Al-Baqarah, Ayah ௨௮௩)

Abdul Hameed Baqavi:

அன்றி, நீங்கள் பிரயாணத்திலிருந்து (அது சமயம் கொடுக்கல் வாங்கல் செய்ய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளரையும் நீங்கள் பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) அடமானமாக (ஏதேனும் ஒரு பொருளைப்) பெற்றுக் கொள்ளுங்கள். (இதில்) உங்களில் ஒருவர் (ஈடின்றிக் கடன் கொடுக்கவோ விலை உயர்ந்த பொருளை சொற்பத் தொகைக்காக அடமானம் வைக்கவோ) ஒருவரை நம்பினால், நம்பப்பட்டவர் தன்னிடம் இருக்கும் அடமானத்தை (ஒழுங்காக)க் கொடுத்து விடவும். மேலும், தன்னுடைய இறைவனாகிய அல்லாஹ்வுக்கு (மிகவும்) பயந்து (நீதமாக நடந்து) கொள்ளவும். தவிர (அடமானத்தை எவரேனும் மோசம் செய்யக்கருதினால் உங்களுடைய) சாட்சியத்தை நீங்கள் மறைக்க வேண்டாம். எவரேனும் அதனை மறைத்தால், அவருடைய உள்ளம் நிச்சயமாக பாவத்திற்குள்ளாகி விடுகின்றது. (மனிதர்களே!) நீங்கள் செய்யும் அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௮௩)

Jan Trust Foundation

இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்பட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பயணத்தில் நீங்கள் இருந்து, (கடன் பத்திரம்) எழுதுபவரை பெறா விட்டால் கைப்பற்றப்பட்ட அடமானங்கள் (அதற்கு பகரமாகும்). உங்களில் சிலர் சிலரை நம்பினால், நம்பப்பட்டவர் தம் நம்பிக்கையை நிறைவேற்றவும்! தம் இறைவனான அல்லாஹ்வை அஞ்சவும்! சாட்சியத்தை மறைக்காதீர்கள்! யார் அதை மறைப்பாரோ நிச்சயமாக அவருடைய உள்ளம் பாவியாகிவிடும். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.