Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௭௧

Qur'an Surah Al-Baqarah Verse 271

ஸூரத்துல் பகரா [௨]: ௨௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْ تُبْدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا هِيَۚ وَاِنْ تُخْفُوْهَا وَتُؤْتُوْهَا الْفُقَرَاۤءَ فَهُوَ خَيْرٌ لَّكُمْ ۗ وَيُكَفِّرُ عَنْكُمْ مِّنْ سَيِّاٰتِكُمْ ۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ (البقرة : ٢)

in tub'dū
إِن تُبْدُوا۟
If you disclose
நீங்கள் வெளிப்படுத்தினால்
l-ṣadaqāti
ٱلصَّدَقَٰتِ
the charities
தர்மங்களை
faniʿimmā
فَنِعِمَّا
then well
நன்றே
hiya wa-in tukh'fūhā
هِىَۖ وَإِن تُخْفُوهَا
it (is) But if you keep it secret
அவை/நீங்கள் அவற்றை மறைத்தால்
watu'tūhā
وَتُؤْتُوهَا
and give it
இன்னும் அவற்றை நீங்கள் கொடுத்தால்
l-fuqarāa
ٱلْفُقَرَآءَ
(to) the poor
ஏழைகளுக்கு
fahuwa
فَهُوَ
then it
அது
khayrun
خَيْرٌ
(is) better
சிறந்தது
lakum
لَّكُمْۚ
for you
உங்களுக்கு
wayukaffiru
وَيُكَفِّرُ
And He will remove
அது அகற்றிவிடும்
ʿankum
عَنكُم
from you
உங்களை விட்டு
min sayyiātikum
مِّن سَيِّـَٔاتِكُمْۗ
[of] your evil deeds
உங்கள் பாவங்களில் சிலவற்றை
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
bimā
بِمَا
with what
எவற்றை
taʿmalūna
تَعْمَلُونَ
you do
செய்கிறீர்கள்
khabīrun
خَبِيرٌ
(is) All-Aware
ஆழ்ந்தறிபவன்

Transliteration:

In tubdus sadaqaati fani'immaa hiya wa in tukhfoohaa wa tu'toohal fuqaraaa'a fahuwa khayrul lakum; wa yukaffiru 'ankum min saiyi aatikum; wallaahu bimaa ta'maloona Khabeer (QS. al-Baq̈arah:271)

English Sahih International:

If you disclose your charitable expenditures, they are good; but if you conceal them and give them to the poor, it is better for you, and He will remove from you some of your misdeeds [thereby]. And Allah, of what you do, is [fully] Aware. (QS. Al-Baqarah, Ayah ௨௭௧)

Abdul Hameed Baqavi:

(நீங்கள் செய்யும்) தர்மங்களை நீங்கள் வெளிப்படையாக செய்தால் அதுவும் நன்றே. (ஏனெனில், அது பிறரையும் தர்மம் செய்யும்படி தூண்டக்கூடும்.) ஆயினும், அதனை நீங்கள் மறைத்தே கொடுப்பது, அதுவும் அதனை ஏழைகளுக்குக் கொடுப்பது உங்களுக்கு மிகவும் நன்மை (பயக்கும்.) மேலும், அது (அதாவது இருவகை தர்மமும்) உங்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாகவும் ஆகும். நீங்கள் செய்யும் (வெளிப்படையான மற்றும்) மறைவான அனைத்தையும் அல்லாஹ் மிகவும் நன்கறிவான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௭௧)

Jan Trust Foundation

தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தர்மங்களை நீங்கள் வெளிப்படுத்தினால் அவை நன்றே. அவற்றை நீங்கள் மறைத்து, அவற்றை ஏழைகளுக்குத் தருவது அதுவும் உங்களுக்குச் சிறந்ததுதான். உங்கள் பாவங்களில் சிலவற்றை உங்களை விட்டு அது அகற்றி விடும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன்.