Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௭௦

Qur'an Surah Al-Baqarah Verse 270

ஸூரத்துல் பகரா [௨]: ௨௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اَنْفَقْتُمْ مِّنْ نَّفَقَةٍ اَوْ نَذَرْتُمْ مِّنْ نَّذْرٍ فَاِنَّ اللّٰهَ يَعْلَمُهٗ ۗ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ (البقرة : ٢)

wamā anfaqtum
وَمَآ أَنفَقْتُم
And whatever you spend
நீங்கள் எதை தர்மம் புரிந்தாலும்
min nafaqatin
مِّن نَّفَقَةٍ
(out) of (your) expenditures
தர்மத்தில்
aw
أَوْ
or
அல்லது
nadhartum
نَذَرْتُم
you vow
நேர்ந்து கொண்டீர்கள்
min nadhrin
مِّن نَّذْرٍ
of vow(s)
நேர்ச்சையில்
fa-inna
فَإِنَّ
then indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
yaʿlamuhu
يَعْلَمُهُۥۗ
knows it
அதை நன்கறிவான்
wamā
وَمَا
and not
இல்லை
lilẓẓālimīna
لِلظَّٰلِمِينَ
for the wrongdoers
அநியாயக்காரர்களுக்கு
min anṣārin
مِنْ أَنصَارٍ
any helpers
உதவியாளர்களில்

Transliteration:

Wa maaa anfaqtum min nafaqatin aw nazartum min nazrin fa innal laaha ya'lamuh; wa maa lizzaalimeena min ansaar (QS. al-Baq̈arah:270)

English Sahih International:

And whatever you spend of expenditures or make of vows – indeed, Allah knows of it. And for the wrongdoers there are no helpers. (QS. Al-Baqarah, Ayah ௨௭௦)

Abdul Hameed Baqavi:

(நன்மைக்காக உங்கள்) பொருளிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தபோதிலும் அல்லது நீங்கள் என்ன நேர்ச்சை செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிகின்றான். அன்றி (நேர்ச்சை செய்தபின் அதை நிறைவேற்றாத) அநியாயக் காரர்களுக்கு உதவி செய்பவர்கள் (ஒருவருமே) இல்லை. (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௭௦)

Jan Trust Foundation

இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தர்மத்தில் எதை நீங்கள் தர்மம் புரிந்தாலும் அல்லது நேர்ச்சையில் எதை நேர்ந்து கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிவான். அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்களில் ஒருவருமே இல்லை.