Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௬௦

Qur'an Surah Al-Baqarah Verse 260

ஸூரத்துல் பகரா [௨]: ௨௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِيْ كَيْفَ تُحْيِ الْمَوْتٰىۗ قَالَ اَوَلَمْ تُؤْمِنْ ۗقَالَ بَلٰى وَلٰكِنْ لِّيَطْمَىِٕنَّ قَلْبِيْ ۗقَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّيْرِفَصُرْهُنَّ اِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلٰى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِيْنَكَ سَعْيًا ۗوَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِيْزٌحَكِيْمٌ ࣖ (البقرة : ٢)

wa-idh qāla
وَإِذْ قَالَ
And when said
கூறிய சமயத்தை
ib'rāhīmu
إِبْرَٰهِۦمُ
Ibrahim
இப்றாஹீம்
rabbi
رَبِّ
"My Lord
என் இறைவா!
arinī
أَرِنِى
show me
எனக்குக் காட்டு
kayfa
كَيْفَ
how
எப்படி
tuḥ'yī
تُحْىِ
You give life
உயிர்ப்பிக்கிறாய்
l-mawtā
ٱلْمَوْتَىٰۖ
(to) the dead"
இறந்தவர்களை
qāla
قَالَ
He said
கூறினான்
awalam tu'min
أَوَلَمْ تُؤْمِنۖ
"Have not you believed?"
நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?
qāla
قَالَ
He said
கூறினார்
balā
بَلَىٰ
"Yes
அவ்வாறில்லை
walākin
وَلَٰكِن
[and] but
எனினும்
liyaṭma-inna
لِّيَطْمَئِنَّ
to satisfy
நிம்மதி பெறுவதற்காக
qalbī
قَلْبِىۖ
my heart"
என் உள்ளம்
qāla
قَالَ
He said
கூறினான்
fakhudh
فَخُذْ
"Then take
எனவே பிடிப்பீராக
arbaʿatan
أَرْبَعَةً
four
நான்கை
mina
مِّنَ
of
இல்
l-ṭayri
ٱلطَّيْرِ
the birds
பறவைகள்
faṣur'hunna
فَصُرْهُنَّ
and incline them
அவற்றைப் பழக்குவீராக
ilayka
إِلَيْكَ
towards you
உம் பக்கம்
thumma
ثُمَّ
then
பிறகு
ij'ʿal
ٱجْعَلْ
put
ஆக்குவீராக
ʿalā
عَلَىٰ
on
மீது
kulli
كُلِّ
each
எல்லா
jabalin
جَبَلٍ
hill
மலை
min'hunna
مِّنْهُنَّ
of them
அவற்றிலிருந்து
juz'an
جُزْءًا
a portion
ஒரு பாகத்தை
thumma ud'ʿuhunna
ثُمَّ ٱدْعُهُنَّ
then call them
பிறகு/அவற்றை கூப்பிடுவீராக
yatīnaka
يَأْتِينَكَ
they will come to you
அவை உம்மிடம் வரும்
saʿyan
سَعْيًاۚ
(in) haste
விரைந்து
wa-iʿ'lam
وَٱعْلَمْ
And know
இன்னும் அறிந்துகொள்வீராக
anna
أَنَّ
that
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
(is) All-Mighty
மிகைத்தவன்
ḥakīmun
حَكِيمٌ
All-Wise
ஞானவான்

Transliteration:

Wa iz qaala Ibraaheemu Rabbi arinee kaifa tuhyil mawtaa qaala awa lam tu'min qaala balaa wa laakil liyatma'inna qalbee qaala fakhuz arab'atam minal tairi fasurhunna ilaika summaj 'al a'alaa kulli jabalim minhunna juz'an sumaad 'uhunna yaateenaka sa'yaa; wa'lam annal laaha 'Azeezun Hakeem (QS. al-Baq̈arah:260)

English Sahih International:

And [mention] when Abraham said, "My Lord, show me how You give life to the dead." [Allah] said, "Have you not believed?" He said, "Yes, but [I ask] only that my heart may be satisfied." [Allah] said, "Take four birds and commit them to yourself. Then [after slaughtering them] put on each hill a portion of them; then call them – they will come [flying] to you in haste. And know that Allah is Exalted in Might and Wise." (QS. Al-Baqarah, Ayah ௨௬௦)

Abdul Hameed Baqavi:

அன்றி, இப்ராஹீம் (இறைவனை நோக்கி) "என் இறைவனே! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கின்றாய். (அதை) நீ எனக்குக் காண்பி" எனக் கூறியபோது, அவன் (இதை) "நீங்கள் நம்பவில்லையா?" என்று கேட்டான். (அதற்கு) அவர் "நான் நம்பியே இருக்கின்றேன். ஆயினும், (அதனை என் கண்ணால் கண்டு) என்னுடைய உள்ளம் திருப்தியடைவதற்காக (அதனைக் காண்பி)" எனக் கூறினார். (அதற்கவன்) "நான்கு பறவைகளைப் பிடித்து நீங்கள் அவைகளைப் பழக்கி, பின்னர் (அவைகளைத் துண்டு துண்டாக ஆக்கி) அவற்றில் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்துவிட்டு (நடுவில் இருந்துகொண்டு) அவைகளை நீங்கள் கூப்பிடுங்கள். அவை உங்களிடம் பறந்துவந்து சேரும் (எனக் கூறி, அவ்வாறு செய்து காண்பித்து) "நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும், மிக்க நுண்ணறிவுடையவனுமாக இருக்கின்றான் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்" என்றான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௬௦)

Jan Trust Foundation

இன்னும், இப்ராஹீம்| “என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!” எனக் கோரியபோது, அவன்,“நீர் (இதை) நம்ப வில்லையா?” எனக் கேட்டான்; “மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)” என்று கூறினார் “(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்; பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்” என்று (அல்லாஹ்) கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இப்றாஹீம் "என் இறைவா! இறந்தவர்களை எப்படி உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டு" எனக் கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக! "நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?" எனக் கூறினான். அவ்வாறில்லை. "(நான் நம்பியே இருக்கிறேன்.) எனினும், என் உள்ளம் நிம்மதி பெறுவதற்காக (அதைக் காட்டு)" எனக் கூறினார். பறவைகளில் நான்கைப் பிடித்து, அவற்றை உம் பக்கம் பழக்குவீராக! பிறகு (அவற்றைப் பல துண்டுகளாக்கி) அவற்றிலிருந்து ஒரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீதும் ஆக்குவீராக! பிறகு அவற்றைக் கூப்பிடுவீராக! அவை உம்மிடம் விரைந்து வரும். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான் என்பதை அறிந்து கொள்வீராக!" என்று கூறினான்.