Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௬

Qur'an Surah Al-Baqarah Verse 26

ஸூரத்துல் பகரா [௨]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ اِنَّ اللّٰهَ لَا يَسْتَحْيٖٓ اَنْ يَّضْرِبَ مَثَلًا مَّا بَعُوْضَةً فَمَا فَوْقَهَا ۗ فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا فَيَعْلَمُوْنَ اَنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ۚ وَاَمَّا الَّذِيْنَ كَفَرُوْا فَيَقُوْلُوْنَ مَاذَآ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ۘ يُضِلُّ بِهٖ كَثِيْرًا وَّيَهْدِيْ بِهٖ كَثِيْرًا ۗ وَمَا يُضِلُّ بِهٖٓ اِلَّا الْفٰسِقِيْنَۙ (البقرة : ٢)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
lā yastaḥyī
لَا يَسْتَحْىِۦٓ
(is) not ashamed
வெட்கப்படமாட்டான்
an yaḍriba
أَن يَضْرِبَ
to set forth
அவன் கூறுவதற்கு
mathalan
مَثَلًا
an example
உதாரணமாக
mā baʿūḍatan
مَّا بَعُوضَةً
(like) even (of) a mosquito
கொசுவைக் கூட
famā fawqahā
فَمَا فَوْقَهَاۚ
and (even) something above it
இன்னும் /எது/மேல்/அதற்கு
fa-ammā
فَأَمَّا
Then as for
ஆகவே
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
those who believed
நம்பிக்கையாளர்கள்
fayaʿlamūna
فَيَعْلَمُونَ
[thus] they will know
அறிவார்கள்
annahu
أَنَّهُ
that it
நிச்சயமாக அது
l-ḥaqu
ٱلْحَقُّ
(is) the truth
உண்மைதான்
min
مِن
from
இருந்து
rabbihim
رَّبِّهِمْۖ
their Lord
இறைவன்/தங்கள்
wa-ammā
وَأَمَّا
And as for
ஆகவே
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
those who disbelieved
நிராகரிப்பாளர்கள்
fayaqūlūna
فَيَقُولُونَ
[thus] they will say
கூறுவார்கள்
mādhā arāda
مَاذَآ أَرَادَ
what (did) intend
என்ன/நாடினான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
bihādhā
بِهَٰذَا
by this
இதன் மூலம்
mathalan
مَثَلاًۘ
example?
உதாரணத்தை
yuḍillu
يُضِلُّ
He lets go astray
வழிகெடுக்கிறான்
bihi
بِهِۦ
by it
இதன் மூலம்
kathīran
كَثِيرًا
many
அதிகமானோரை
wayahdī
وَيَهْدِى
and He guides
இன்னும் நேர்வழி நடத்துகிறான்
bihi
بِهِۦ
by it
இதன் மூலம்
kathīran
كَثِيرًاۚ
many
அதிகமானோரை
wamā yuḍillu
وَمَا يُضِلُّ
And not He lets go astray
இன்னும் வழிகெடுக்க மாட்டான்
bihi
بِهِۦٓ
by it
இதன் மூலம்
illā
إِلَّا
except
தவிர
l-fāsiqīna
ٱلْفَٰسِقِينَ
the defiantly disobedient
பாவிகளை

Transliteration:

Innal laaha laa yastahyeee ai yadriba masalam maa ba'oodatan famaa fawqahaa; faammal lazeena aamanoo faya'lamoona annahul haqqu mir rabbihim wa ammal lazeena kafaroo fayaqooloona maazaaa araadal laahu bihaazaa masalaa; yudillu bihee kaseeranw wa yahdee bihee kaseeraa; wa maa yudillu biheee illal faasiqeen (QS. al-Baq̈arah:26)

English Sahih International:

Indeed, Allah is not timid to present an example – that of a mosquito or what is smaller than it. And those who have believed know that it is the truth from their Lord. But as for those who disbelieve, they say, "What did Allah intend by this as an example?" He misleads many thereby and guides many thereby. And He misleads not except the defiantly disobedient, (QS. Al-Baqarah, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

கொசு அல்லது அதைவிட (அற்பத்தில்) மேலான எதையும் உதாரணமாகக் கூறுவதற்கு அல்லாஹ் நிச்சயமாக வெட்கப்பட மாட்டான். ஆதலால் எவர்கள் (உண்மையாக) நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்கள் (அவ்வுதாரணம்) தங்கள் இறைவனால் கூறப்பட்ட உண்மையான உதாரணம்தான் என்று உறுதியாக அறிந்து கொள்வார்கள். எனினும், (இவ்வேதத்தை) நிராகரிப்பவர்களோ இதை உதாரணமாக்குவதைக் கொண்டு அல்லாஹ் என்னதான் நாடுகிறான்? எனக் கூறுவார்கள். இதைக் கொண்டு பலரை வழிகெடும்படியும் செய்கிறான். இதைக் கொண்டு பலரை நேர்வழி பெறும்படியும் செய்கிறான். (ஆனால், இவ்வேதத்தை மனமுரண்டாக நிராகரிக்கும்) பாவிகளைத் தவிர (மற்றவர்களை) இதைக் கொண்டு வழிகெடும்படி அவன் செய்யமாட்டான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௬)

Jan Trust Foundation

நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, “இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?” என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கொசு இன்னும் (அற்பத்தில்) அதற்கு மேலுள்ளதையும் கூட உதாரணமாக கூறுவதற்கு நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். ஆகவே, நம்பிக்கை யாளர்கள் நிச்சயமாக அது தங்கள் இறைவனிடமிருந்து (கூறப்பட்ட) உண்மைதான் என அறிவார்கள். ஆகவே, நிராகரிப்பாளர்கள் அல்லாஹ் இதன் மூலம் என்ன உதாரணத்தை நாடினான்? எனக் கூறுவார்கள். இதன் மூலம் அதிகமானோரை வழிகெடுக்கிறான். இன்னும் இதன் மூலம் அதிகமானோரை நேர்வழி நடத்துகிறான். பாவிகளைத் தவிர (மற்றவர்களை) இதன் மூலம் வழிகெடுக்க மாட்டான்.