குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௫௬
Qur'an Surah Al-Baqarah Verse 256
ஸூரத்துல் பகரா [௨]: ௨௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَآ اِكْرَاهَ فِى الدِّيْنِۗ قَدْ تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ ۚ فَمَنْ يَّكْفُرْ بِالطَّاغُوْتِ وَيُؤْمِنْۢ بِاللّٰهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰى لَا انْفِصَامَ لَهَا ۗوَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ (البقرة : ٢)
- lā ik'rāha
- لَآ إِكْرَاهَ
- (There is) no compulsion
- அறவே நிர்பந்தமில்லை
- fī l-dīni
- فِى ٱلدِّينِۖ
- in the religion
- இஸ்லாமில்
- qad tabayyana
- قَد تَّبَيَّنَ
- Surely has become distinct
- தெளிவாகி விட்டது
- l-rush'du
- ٱلرُّشْدُ
- the right (path)
- சத்தியவழி
- mina l-ghayi
- مِنَ ٱلْغَىِّۚ
- from the wrong
- வழிகேட்டிலிருந்து
- faman
- فَمَن
- Then whoever
- எனவே எவர்
- yakfur
- يَكْفُرْ
- disbelieves
- நிராகரிக்கிறார்
- bil-ṭāghūti
- بِٱلطَّٰغُوتِ
- in false deities
- ஷைத்தானை
- wayu'min
- وَيُؤْمِنۢ
- and believes
- இன்னும் நம்பிக்கை கொள்கிறார்
- bil-lahi
- بِٱللَّهِ
- in Allah
- அல்லாஹ்வை
- faqadi is'tamsaka
- فَقَدِ ٱسْتَمْسَكَ
- then surely he grasped
- பற்றிப் பிடித்துக் கொண்டார்
- bil-ʿur'wati
- بِٱلْعُرْوَةِ
- the handhold
- வளையத்தை
- l-wuth'qā
- ٱلْوُثْقَىٰ
- [the] firm
- மிக உறுதியானது
- lā infiṣāma
- لَا ٱنفِصَامَ
- (which) not (will) break
- அறவே துண்டிப்பு இல்லை
- lahā
- لَهَاۗ
- [for it]
- அதற்கு
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- இன்னும் அல்லாஹ்
- samīʿun
- سَمِيعٌ
- (is) All-Hearing
- நன்கு செவியுறுபவன்
- ʿalīmun
- عَلِيمٌ
- All-Knowing
- மிக அறிந்தவன்
Transliteration:
Laaa ikraaha fid deeni qat tabiyanar rushdu minal ghayy; famai yakfur bit Taaghooti wa yu'mim billaahi faqadis tamsaka bil'urwatil wusqaa lan fisaama lahaa; wallaahu Samee'un 'Aleem(QS. al-Baq̈arah:256)
English Sahih International:
There shall be no compulsion in [acceptance of] the religion. The right course has become distinct from the wrong. So whoever disbelieves in Taghut and believes in Allah has grasped the most trustworthy handhold with no break in it. And Allah is Hearing and Knowing. (QS. Al-Baqarah, Ayah ௨௫௬)
Abdul Hameed Baqavi:
(இஸ்லாம்) மார்க்கத்தில் நிர்ப்பந்தமேயில்லை. ஏனென்றால் வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி (அடைவது எவ்வாறென்று) தெளிவாகிவிட்டது. ஆகவே, எவர் ஷைத்தானை நிராகரித்துவிட்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ, அவர் நிச்சயமாக அறுபடாத பலமானதொரு கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ், (அனைத்தையும்) நன்கு செவியுறுபவனாகவும், மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௫௬)
Jan Trust Foundation
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இஸ்லாமில் (இணைவதில்) அறவே நிர்பந்தமில்லை. வழிகேட்டிலிருந்து சத்தியவழி தெளிவாகி விட்டது. எனவே, எவர் ஷைத்தானை நிராகரித்து, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறாரோ அவர் மிக உறுதியான வளையத்தை பற்றிப் பிடித்துக் கொண்டார். அறவே அதற்குத் துண்டிப்பு இல்லை. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன்.