குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௫௦
Qur'an Surah Al-Baqarah Verse 250
ஸூரத்துல் பகரா [௨]: ௨௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَمَّا بَرَزُوْا لِجَالُوْتَ وَجُنُوْدِهٖ قَالُوْا رَبَّنَآ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ ۗ (البقرة : ٢)
- walammā barazū
- وَلَمَّا بَرَزُوا۟
- And when they went forth
- அவர்கள் முன்னால் வந்தபோது
- lijālūta
- لِجَالُوتَ
- to (face) Jalut
- ஜாலூத்திற்கு
- wajunūdihi
- وَجُنُودِهِۦ
- and his troops
- இன்னும் அவனுடைய படைகள்
- qālū
- قَالُوا۟
- they said
- கூறினார்கள்
- rabbanā
- رَبَّنَآ
- "Our Lord!
- எங்கள் இறைவா
- afrigh
- أَفْرِغْ
- Pour
- இறக்கு
- ʿalaynā
- عَلَيْنَا
- on us
- எங்கள் மீது
- ṣabran
- صَبْرًا
- patience
- பொறுமையை
- wathabbit
- وَثَبِّتْ
- and make firm
- இன்னும் உறுதிப்படுத்து
- aqdāmanā
- أَقْدَامَنَا
- our feet
- எங்கள் பாதங்களை
- wa-unṣur'nā
- وَٱنصُرْنَا
- and help us
- இன்னும் எங்களுக்கு உதவு
- ʿalā
- عَلَى
- against
- எதிராக
- l-qawmi
- ٱلْقَوْمِ
- the people
- மக்களுக்கு
- l-kāfirīna
- ٱلْكَٰفِرِينَ
- (who are) disbelieving"
- நிராகரிப்பாளர்கள்
Transliteration:
Wa lammaa barazoo liJaaloota wa junoodihee qaaloo Rabbanaaa afrigh 'alainaa sabranw wa sabbit aqdaamanaa wansurnaa 'alal qawmil kaafireen(QS. al-Baq̈arah:250)
English Sahih International:
And when they went forth to [face] Goliath and his soldiers, they said, "Our Lord, pour upon us patience and plant firmly our feet and give us victory over the disbelieving people." (QS. Al-Baqarah, Ayah ௨௫௦)
Abdul Hameed Baqavi:
மேலும், அவர்கள் ஜாலூத்தையும் அவனுடைய படைகளையும் (போர்க்களத்தில்) எதிர்த்தபொழுது "எங்கள் இறைவனே! நீ எங்கள்மீது பொறுமையைச் சொரிவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்தி வைப்பாயாக! அன்றி, நிராகரிக்கும் இந்த மக்கள் மீது (வெற்றி பெற) எங்களுக்கு நீ உதவி புரிவாயாக!" என்றும் பிரார்த்தனை செய்தார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௫௦)
Jan Trust Foundation
மேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்ற போது, “எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!” எனக் கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் ஜாலூத்திற்கும் அவனுடைய படைகளுக்கும் முன்னால் வந்தபோது, "எங்கள் இறைவா! எங்கள் மீது பொறுமையை இறக்கு! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து! நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவு" என்று கூறினார்கள்.