குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௪௫
Qur'an Surah Al-Baqarah Verse 245
ஸூரத்துல் பகரா [௨]: ௨௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَنْ ذَا الَّذِيْ يُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَيُضٰعِفَهٗ لَهٗٓ اَضْعَافًا كَثِيْرَةً ۗوَاللّٰهُ يَقْبِضُ وَيَبْصُۣطُۖ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ (البقرة : ٢)
- man
- مَّن
- Who
- எவர்
- dhā
- ذَا
- (is) the one
- அவர்
- alladhī
- ٱلَّذِى
- who
- எப்படிப்பட்டவர்
- yuq'riḍu
- يُقْرِضُ
- will lend
- கடன் கொடுப்பார்
- l-laha
- ٱللَّهَ
- (to) Allah
- அல்லாஹ்விற்கு
- qarḍan ḥasanan
- قَرْضًا حَسَنًا
- a loan good
- கடன் / அழகிய
- fayuḍāʿifahu
- فَيُضَٰعِفَهُۥ
- so (that) He multiplies it
- அதை பெருக்குவான்
- lahu
- لَهُۥٓ
- for him
- அவனுக்கு
- aḍʿāfan
- أَضْعَافًا
- manifolds
- மடங்குகள்
- kathīratan
- كَثِيرَةًۚ
- many
- பல
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- இன்னும் அல்லாஹ்
- yaqbiḍu
- يَقْبِضُ
- withholds
- சுருக்கிக் கொள்கிறான்
- wayabṣuṭu
- وَيَبْصُۜطُ
- and grants abundance
- இன்னும் விசாலமாக கொடுக்கிறான்
- wa-ilayhi
- وَإِلَيْهِ
- and to Him
- இன்னும் அவனிடமே
- tur'jaʿūna
- تُرْجَعُونَ
- you will be returned
- மீட்கப்படுவீர்கள்
Transliteration:
Man zal lazee yuqridul laaha qardan hasanan fayudaa 'ifahoo lahoo ad'aafan kaseerah; wallaahu yaqbidu wa yabsut-u wa ilaihi turja'oon(QS. al-Baq̈arah:245)
English Sahih International:
Who is it that would loan Allah a goodly loan so He may multiply it for him many times over? And it is Allah who withholds and grants abundance, and to Him you will be returned. (QS. Al-Baqarah, Ayah ௨௪௫)
Abdul Hameed Baqavi:
(கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு) அழகான முறையில் அல்லாஹ்விற்காகக் கடன் கொடுப்பவர் யார்? அதை அவன் அவர்களுக்கு பன்மடங்கு அதிகரிக்கும்படிச் செய்வான். அல்லாஹ் (பொருளை சிலருக்குச்) சுருக்கியும் கொடுப்பான். (சிலருக்குப்) பெருக்கியும் கொடுப்பான். அன்றி அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௪௫)
Jan Trust Foundation
(கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் - அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான்; (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான்; அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அழகிய கடனாக அல்லாஹ்விற்குக் கடன் கொடுப்பவர் யார்? (அல்லாஹ்) அவருக்கு அதைப் பலமடங்குகளாக பெருக்குவான். அல்லாஹ் சுருக்கியும் கொடுக்கிறான், விசாலமாகவும் கொடுக்கிறான். அவனிடமே மீட்கப்படுவீர்கள்.