Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௩௯

Qur'an Surah Al-Baqarah Verse 239

ஸூரத்துல் பகரா [௨]: ௨௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِنْ خِفْتُمْ فَرِجَالًا اَوْ رُكْبَانًا ۚ فَاِذَآ اَمِنْتُمْ فَاذْكُرُوا اللّٰهَ كَمَا عَلَّمَكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ (البقرة : ٢)

fa-in khif'tum
فَإِنْ خِفْتُمْ
And if you fear
நீங்கள் பயந்தால்
farijālan
فَرِجَالًا
then (pray) on foot
நடந்தவர்களாக
aw
أَوْ
or
அல்லது
ruk'bānan
رُكْبَانًاۖ
riding
வாகனித்தவர்களாக
fa-idhā amintum
فَإِذَآ أَمِنتُمْ
Then when you are secure
நீங்கள் பாதுகாப்புப் பெற்றால்
fa-udh'kurū
فَٱذْكُرُوا۟
then remember
நினைவு கூருங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
kamā ʿallamakum
كَمَا عَلَّمَكُم
as He (has) taught you
அவன் உங்களுக்கு கற்பிப்பதற்காக
mā lam takūnū
مَّا لَمْ تَكُونُوا۟
what not you were
எவற்றை/நீங்கள்இல்லை
taʿlamūna
تَعْلَمُونَ
knowing
அறிகிறீர்கள்

Transliteration:

Fa in khiftum farijaalan aw rukbaanan fa izaaa amintum fazkurul laaha kamaa 'allamakum maa lam takoonoo ta'lamoon (QS. al-Baq̈arah:239)

English Sahih International:

And if you fear [an enemy, then pray] on foot or riding. But when you are secure, then remember Allah [in prayer], as He has taught you that which you did not [previously] know. (QS. Al-Baqarah, Ayah ௨௩௯)

Abdul Hameed Baqavi:

ஆனால், (தொழுகையின் நேரம் வந்து, எதிரி போன்ற ஏதேனும் ஒரு காரணத்தால் ஓரிடத்தில் நின்று தொழ) நீங்கள் பயந்தால், நடந்து கொண்டேனும் அல்லது வாகனத்தின் மீது இருந்துகொண்டேனும் (தொழுங்கள்.) தவிர (உங்களுடைய பயம் நீங்கி) நீங்கள் அச்சம் தீர்ந்தவர்களாகிவிட்டால் நீங்கள் (தொழுகையை) அறியாமலிருந்த சமயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் (தொழுகையை) கற்றுக்கொடுத்தபடி (தொழுது) அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௩௯)

Jan Trust Foundation

ஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்; பின்னர் நீங்கள் அச்சம் தீர்ந்ததும், நீங்கள் அறியாமல் இருந்ததை அவன் உங்களுக்கு அறிவித்ததைப் போன்று, (நிறைவுடன் தொழுது) அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் பயந்தால், நடந்தவர்களாக அல்லது வாகனித்தவர்களாக (தொழுங்கள்). நீங்கள் பாதுகாப்புப் பெற்றால் நீங்கள் அறிந்திருக்காதவற்றை அவன் உங்களுக்குக் கற்பித்ததற்காக அல்லாஹ்வை நினைவு கூருங்கள்.