Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௩௭

Qur'an Surah Al-Baqarah Verse 237

ஸூரத்துல் பகரா [௨]: ௨௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنْ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيْضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ اِلَّآ اَنْ يَّعْفُوْنَ اَوْ يَعْفُوَا الَّذِيْ بِيَدِهٖ عُقْدَةُ النِّكَاحِ ۗ وَاَنْ تَعْفُوْٓا اَقْرَبُ لِلتَّقْوٰىۗ وَلَا تَنْسَوُا الْفَضْلَ بَيْنَكُمْ ۗ اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ (البقرة : ٢)

wa-in ṭallaqtumūhunna
وَإِن طَلَّقْتُمُوهُنَّ
And if you divorce them
அவர்களை நீங்கள் விவாகரத்து செய்தால்
min qabli
مِن قَبْلِ
from before
முன்னர்
an
أَن
[that]
நீங்கள் தொடுவதற்கு
tamassūhunna
تَمَسُّوهُنَّ
you (have) touched them
நீங்கள் தொடுவதற்கு அவர்களை
waqad faraḍtum
وَقَدْ فَرَضْتُمْ
while already you have specified
நிர்ணயித்துவிட்டீர்கள்
lahunna
لَهُنَّ
for them
அவர்களுக்கு
farīḍatan
فَرِيضَةً
an obligation (dower)
மஹ்ரை
faniṣ'fu
فَنِصْفُ
then (give) half
ஆகவே, பாதி
mā faraḍtum
مَا فَرَضْتُمْ
(of) what you have specified
நீங்கள் நிர்ணயித்ததில்
illā
إِلَّآ
unless
தவிர
an yaʿfūna
أَن يَعْفُونَ
[that] they (women) forgo (it)
அவர்கள் மன்னிப்பது
aw
أَوْ
or
அல்லது
yaʿfuwā
يَعْفُوَا۟
forgoes
மன்னிப்பான்
alladhī
ٱلَّذِى
the one
எவன்
biyadihi
بِيَدِهِۦ
in whose hands
அவனுடைய கையில்
ʿuq'datu
عُقْدَةُ
(is the) knot
ஒப்பந்தம்
l-nikāḥi
ٱلنِّكَاحِۚ
(of) the marriage
திருமணம்
wa-an taʿfū
وَأَن تَعْفُوٓا۟
And that you forgo
நீங்கள் மன்னிப்பது
aqrabu
أَقْرَبُ
(is) nearer
மிக நெருக்கமானது
lilttaqwā
لِلتَّقْوَىٰۚ
to [the] righteousness
அல்லாஹ்வை அஞ்சுவதற்கு
walā tansawū
وَلَا تَنسَوُا۟
And (do) not forget
மறக்காதீர்கள்
l-faḍla
ٱلْفَضْلَ
the graciousness
சிறப்பு உபகாரம் செய்வதை
baynakum
بَيْنَكُمْۚ
among you
உங்களுக்கு மத்தியில்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
of what you do
நீங்கள் செய்வதை
baṣīrun
بَصِيرٌ
(is) All-Seer
உற்று நோக்குபவன்

Transliteration:

Wa in tallaqtumoohunna min qabli an tamassoohunna wa qad farad tum lahunna fareedatan fanisfu maa faradtum illaaa ai ya'foona aw ya'fuwallazee biyadihee 'uqdatunnikaah; wa an ta'foona aw ya'fuwallazee biyadihee 'uqdatunnikaah; wa an ta'fooo aqrabu littaqwaa; wa laa tansawulfadla bainakum; innal laaha bimaa ta'maloona Baseer (QS. al-Baq̈arah:237)

English Sahih International:

And if you divorce them before you have touched them and you have already specified for them an obligation, then [give] half of what you specified – unless they forego the right or the one in whose hand is the marriage contract foregoes it. And to forego it is nearer to righteousness. And do not forget graciousness between you. Indeed Allah, of whatever you do, is Seeing. (QS. Al-Baqarah, Ayah ௨௩௭)

Abdul Hameed Baqavi:

ஆனால் அவர்களுடைய மஹரை நீங்கள் குறிப்பிட்டிருந்து, அவர்களைத் தீண்டுவதற்கு முன்னதாகவே தலாக்குக் கூறிவிட்டால் நீங்கள் (மஹராகக்) குறிப்பிட்டிருந்ததில் பாதி அப்பெண்களுக்கு உண்டு. எனினும், யாருடைய கையில் திருமண தொடர்பு இருக்கின்றதோ அவன் (கணவன்) அல்லது அவள் (மனைவி) விட்டுக் கொடுத்தாலன்றி (அதாவது கணவன் முழு மஹரையும் கொடுத்திடலாம் அல்லது மனைவி பாதி மஹரையும் வாங்காமல் விட்டுக்கொடுத்திடலாம்.) ஆயினும், நீங்கள் (ஆண்கள்) விட்டுக் கொடுப்பது இறையச்சத்திற்கு மிக நெருக்கமானதாகும். ஆதலால், உங்களுக்குள் உபகாரம் செய்து கொள்வதை மறந்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கினவனாக இருக்கின்றான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௩௭)

Jan Trust Foundation

ஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன் - ஆனால் மஹர் நிச்சயித்த பின் நீங்கள் தலாக் சொல்வீர்களாயின், நீங்கள் குறிப்பட்டிருந்த மஹர் தொகையில் பாதி(அவர்களுக்கு) உண்டு- அப்பெண்களோ அல்லது எவர் கையில் (அத்)திருமணம் பற்றிய பிடி இருக்கிறதோ அவர்களோ முழுமையும்) மன்னித்து விட்டாலன்றி; - ஆனால், (இவ்விஷயத்தில்) விட்டுக் கொடுப்பது தக்வாவுக்கு (பயபக்திக்கு) மிக்க நெருக்கமானதாகும்; இன்னும், உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உபகாரம் செய்து கொள்வதையும் மறவாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்(த்துக் கூலி கொடு)ப்பவனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு மஹ்ரை நீங்கள் நிர்ணயித்து விட்டிருக்க, அவர்களைத் தொடுவதற்கு முன்னதாகவே அவர்களை நீங்கள் விவாகரத்து செய்தால் நீங்கள் நிர்ணயித்ததில் பாதி (அப்பெண்களுக்கு கொடுக்க வேண்டும்). அவர்கள் (மனைவிகள்) மன்னித்தால் அல்லது எவனுடைய கையில் திருமண ஒப்பந்தம் இருக்கிறதோ அவன் (கணவன்) மன்னித்தால் தவிர. (கணவன் முழு மஹ்ரையும் கொடுக்கலாம் அல்லது மனைவி பாதி மஹ்ரையும் வாங்காமல் விடலாம்.) ஆயினும், நீங்கள் (ஆண்கள்) மன்னிப்பது அல்லாஹ்வை அஞ்சுவதற்கு மிக நெருக்கமானதாகும். உங்களுக்கு மத்தியில் உபகாரம் செய்வதை மறக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்குபவன்.