Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௩௨

Qur'an Surah Al-Baqarah Verse 232

ஸூரத்துல் பகரா [௨]: ௨௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا طَلَّقْتُمُ النِّسَاۤءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوْهُنَّ اَنْ يَّنْكِحْنَ اَزْوَاجَهُنَّ اِذَا تَرَاضَوْا بَيْنَهُمْ بِالْمَعْرُوْفِ ۗ ذٰلِكَ يُوْعَظُ بِهٖ مَنْ كَانَ مِنْكُمْ يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ ۗ ذٰلِكُمْ اَزْكٰى لَكُمْ وَاَطْهَرُ ۗ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ (البقرة : ٢)

wa-idhā ṭallaqtumu
وَإِذَا طَلَّقْتُمُ
And when you divorce
நீங்கள் விவாகரத்து செய்தால்
l-nisāa
ٱلنِّسَآءَ
[the] women
பெண்களை
fabalaghna
فَبَلَغْنَ
and they reached
அடைந்தார்கள்
ajalahunna
أَجَلَهُنَّ
their (waiting) term
தங்கள் தவணையை
falā taʿḍulūhunna
فَلَا تَعْضُلُوهُنَّ
then (do) not hinder them
அவர்களைத் தடுக்காதீர்கள்
an yankiḥ'na
أَن يَنكِحْنَ
[that] (from) marrying
அவர்கள் மணப்பதை
azwājahunna
أَزْوَٰجَهُنَّ
their husbands
தங்கள் கணவர்களை
idhā tarāḍaw
إِذَا تَرَٰضَوْا۟
when they agree
அவர்கள் திருப்தியடைந்தால்
baynahum
بَيْنَهُم
between themselves
தங்களுக்கு மத்தியில்
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِۗ
in a fair manner
நல்ல முறையில்
dhālika
ذَٰلِكَ
That
இது
yūʿaẓu
يُوعَظُ
is admonished
உபதேசிக்கப்படுகிறார்
bihi
بِهِۦ
with it
இதன் மூலம்
man
مَن
whoever
எவர்
kāna
كَانَ
[is]
ஆகிவிட்டார்
minkum
مِنكُمْ
among you
உங்களிலிருந்து
yu'minu
يُؤْمِنُ
believes
நம்பிக்கைகொள்கிறார்
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
wal-yawmi l-ākhiri
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِۗ
and the Day [the] Last
இன்னும் இறுதி நாள்
dhālikum
ذَٰلِكُمْ
that
இதுதான்
azkā
أَزْكَىٰ
(is) more virtuous
மிகத் தூய்மையானது
lakum
لَكُمْ
for you
உங்களுக்கு
wa-aṭharu
وَأَطْهَرُۗ
and more purer
இன்னும் மிகப்பரிசுத்தமானது
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
knows
அறிவான்
wa-antum
وَأَنتُمْ
and you
நீங்கள்
lā taʿlamūna
لَا تَعْلَمُونَ
(do) not know
அறியமாட்டீர்கள்

Transliteration:

Wa izaa tallaqtumun nisaaa'a fabalaghna ajalahunna falaa ta'duloo hunna ai yankihna azwaaja humna izaa taraadaw bainahum bilma' roof; zaalika yoo'azu bihee man kaana minkum yu'minu billaahi wal yawmil aakhir; zaalikum azkaa lakum wa athar; wallaahu ya'lamu wa antum laa ta'lamu wa antum laa ta'lamoon (QS. al-Baq̈arah:232)

English Sahih International:

And when you divorce women and they have fulfilled their term, do not prevent them from remarrying their [former] husbands if they [i.e., all parties] agree among themselves on an acceptable basis. That is instructed to whoever of you believes in Allah and the Last Day. That is better for you and purer, and Allah knows and you know not. (QS. Al-Baqarah, Ayah ௨௩௨)

Abdul Hameed Baqavi:

நீங்கள் தலாக்குக் கூறிய பெண்கள், தங்களுடைய (இத்தாவின்) தவணையை முழுமைப்படுத்திவிட்ட பின்னர் அவர்கள் தாங்கள் விரும்பிய ஆண்களுடன் ஒழுங்கான முறையில் திருமணம் செய்துகொள்வதை நீங்கள் தடுக்காதீர்கள். உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறாரோ அவர் இதனைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறார். இது உங்களை மிக தூய்மைப்படுத்துவதாகவும், மிக பரிசுத்தமாக்குவதாகவும் இருக்கிறது. (இதிலுள்ள நன்மைகளை) அல்லாஹ்வே அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௩௨)

Jan Trust Foundation

இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள்; உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது; இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து, அவர்கள் தங்கள் தவணையை (முழுமையாக) அடைந்தால் அவர்கள் தங்கள் கணவர்களை மணப்பதை தடுக்காதீர்கள், அவர்கள் தங்களுக்கு மத்தியில் (ஒருவருக்கொருவர்) திருப்தியடைந்தால். உங்களில் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் இதன் மூலம் உபதேசிக்கப்படுகிறார். இதுதான் உங்களுக்கு மிகத் தூய்மையானது; மிகப் பரிசுத்தமானது. அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.