Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௨௯

Qur'an Surah Al-Baqarah Verse 229

ஸூரத்துல் பகரா [௨]: ௨௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلطَّلَاقُ مَرَّتٰنِ ۖ فَاِمْسَاكٌۢ بِمَعْرُوْفٍ اَوْ تَسْرِيْحٌۢ بِاِحْسَانٍ ۗ وَلَا يَحِلُّ لَكُمْ اَنْ تَأْخُذُوْا مِمَّآ اٰتَيْتُمُوْهُنَّ شَيْـًٔا اِلَّآ اَنْ يَّخَافَآ اَلَّا يُقِيْمَا حُدُوْدَ اللّٰهِ ۗ فَاِنْ خِفْتُمْ اَلَّا يُقِيْمَا حُدُوْدَ اللّٰهِ ۙ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيْمَا افْتَدَتْ بِهٖ ۗ تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَعْتَدُوْهَا ۚوَمَنْ يَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَاُولٰۤىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ (البقرة : ٢)

al-ṭalāqu
ٱلطَّلَٰقُ
The divorce
விவாகரத்து
marratāni
مَرَّتَانِۖ
(is) twice
இருமுறை
fa-im'sākun
فَإِمْسَاكٌۢ
Then to retain
தடுத்து வைத்தல்
bimaʿrūfin
بِمَعْرُوفٍ
in a reasonable manner
நல்ல முறையில்
aw
أَوْ
or
அல்லது
tasrīḥun
تَسْرِيحٌۢ
to release (her)
விட்டுவிடுதல்
bi-iḥ'sānin
بِإِحْسَٰنٍۗ
with kindness
அழகிய முறையில்
walā yaḥillu
وَلَا يَحِلُّ
And (it is) not lawful
ஆகுமானதல்ல
lakum
لَكُمْ
for you
உங்களுக்கு
an takhudhū
أَن تَأْخُذُوا۟
that you take (back)
நீங்கள் எடுத்துக்கொள்வது
mimmā
مِمَّآ
whatever
எவற்றிலிருந்து
ātaytumūhunna
ءَاتَيْتُمُوهُنَّ
you have given them (wives)
அவர்களுக்கு கொடுத்தீர்கள்
shayan illā
شَيْـًٔا إِلَّآ
anything except
எதையும்/தவிர
an yakhāfā
أَن يَخَافَآ
if both fear
இருவரும் அஞ்சுவது
allā yuqīmā
أَلَّا يُقِيمَا
that not they both (can) keep
(இருவர்) நிலைநிறுத்த மாட்டார்கள் என
ḥudūda
حُدُودَ
(the) limits
சட்டங்களை
l-lahi
ٱللَّهِۖ
(of) Allah
அல்லாஹ்வின்
fa-in khif'tum
فَإِنْ خِفْتُمْ
But if you fear
நீங்கள் பயந்தால்
allā yuqīmā
أَلَّا يُقِيمَا
that not they both (can) keep
இருவரும் நிலைநிறுத்த மாட்டார்கள்
ḥudūda
حُدُودَ
(the) limits
சட்டங்களை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
falā junāḥa
فَلَا جُنَاحَ
then (there is) no sin
குற்றமே இல்லை
ʿalayhimā
عَلَيْهِمَا
on both of them
அவ்விருவர் மீது
fīmā
فِيمَا
in what
எதில்
if'tadat
ٱفْتَدَتْ
she ransoms
விடுவித்தாள்
bihi
بِهِۦۗ
concerning it
அதன் மூலம்
til'ka
تِلْكَ
These
இவை
ḥudūdu
حُدُودُ
(are the) limits
சட்டங்கள்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
falā taʿtadūhā
فَلَا تَعْتَدُوهَاۚ
so (do) not transgress them
எனவே இவற்றை மீறாதீர்கள்
waman
وَمَن
And whoever
இன்னும் எவர்(கள்)
yataʿadda
يَتَعَدَّ
transgresses
மீறுகிறார்(கள்)
ḥudūda
حُدُودَ
(the) limits
சட்டங்களை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
then those they
அவர்கள்தான்
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
(are) the wrongdoers
அநியாயக்காரர்கள்

Transliteration:

Attalaaqu marrataani fa imsaakum bima'roofin aw tasreehum bi ihsaan; wa laa yahillu lakum an taakhuzoo mimmaaa aataitumoohunna shai'an illaaa ai yakhaafaaa alla yuqeemaa hudoodallahi fa in khiftum allaa yuqeemaa budoodal laahi falaa junaaha 'Alaihimaa feemaf tadat bihee tilka hudoodul laahi falaa ta'tadoohaa; wa mai yata'adda hudoodal laahi fa ulaaa'ika humuzzaa limoon (QS. al-Baq̈arah:229)

English Sahih International:

Divorce is twice. Then [after that], either keep [her] in an acceptable manner or release [her] with good treatment. And it is not lawful for you to take anything of what you have given them unless both fear that they will not be able to keep [within] the limits of Allah. But if you fear that they will not keep [within] the limits of Allah, then there is no blame upon either of them concerning that by which she ransoms herself. These are the limits of Allah, so do not transgress them. And whoever transgresses the limits of Allah – it is those who are the wrongdoers [i.e., the unjust]. (QS. Al-Baqarah, Ayah ௨௨௯)

Abdul Hameed Baqavi:

(ரஜயியாகிய) இந்தத் தலாக்(கை) இருமுறைதான் (கூறலாம்). பின்னும் (தவணைக்குள்) முறைப்படி தடுத்து (மனைவிகளாக) வைத்துக் கொள்ளலாம். அல்லது (அவர்கள் மீது யாதொரு குற்றமும் சுமத்தாமல்) நன்றியுடன் விட்டுவிடலாம். தவிர, நீங்கள் அவர்களுக்கு (வெகுமதியாகவோ, மஹராகவோ) கொடுத்தவைகளிலிருந்து யாதொன்றையும் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. (அன்றி இருவரும் சேர்ந்து வாழ்க்கை நடத்த முற்பட்டபோதிலும்) அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புக்குள் நிலைத்திருக்க முடியாதென்று இருவருமே பயப்படும் சமயத்தில் (இதற்குப் பஞ்சாயத்தாக இருக்கும்) நீங்களும் அவ்வாறு மெய்யாக பயந்தால் அவள் (கணவனிடமிருந்து) பெற்றுக் கொண்டதிலிருந்து எதையும் (விவாகரத்து நிகழ) பிரதியாகக் கொடுப்பதிலும் (அவன் அதைப் பெற்றுக் கொள்வதிலும்) அவ்விருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். ஆதலால் நீங்கள் இவற்றை மீறாதீர்கள். எவரேனும் அல்லாஹ்வுடைய வரம்புகளை மீறினால் நிச்சயமாக அவர்கள்தான் அநியாயக்காரர்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௨௯)

Jan Trust Foundation

(இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் - பின் (தவணைக்குள் முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;; அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர, நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை; இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்; ஆகையால் அவற்றை மீறாதீர்கள்; எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

விவாகரத்து இருமுறை ஆகும். (தவணைக்குள்) நல்ல முறையில் தடுத்து (மனைவிகளாக) வைத்தல் அல்லது அழகிய முறையில் விட்டுவிடுதல் (கடமையாகும்). நீங்கள் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து எதையும் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. (ஆனால்,) அல்லாஹ்வின் சட்டங்களை தாங்கள் நிலைநிறுத்த முடியாது என்று அவ்விருவரும் பயந்தாலே தவிர. அவ்விருவரும் அல்லாஹ்வின் சட்டங்களை நிலைநிறுத்தமாட்டார்கள் என (நடுவர்களாகிய) நீங்கள் பயந்தால், அவள் எதன் மூலம் (தன்னை) விடுவித்தாளோ அதில் அவ்விருவர் மீதும் குற்றமே இல்லை. இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். எனவே இவற்றை மீறாதீர்கள். எவர்(கள்) அல்லாஹ்வின் சட்டங்களை மீறுகிறார்களோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.