Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௨௨

Qur'an Surah Al-Baqarah Verse 222

ஸூரத்துல் பகரா [௨]: ௨௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَسْـَٔلُوْنَكَ عَنِ الْمَحِيْضِ ۗ قُلْ هُوَ اَذًىۙ فَاعْتَزِلُوا النِّسَاۤءَ فِى الْمَحِيْضِۙ وَلَا تَقْرَبُوْهُنَّ حَتّٰى يَطْهُرْنَ ۚ فَاِذَا تَطَهَّرْنَ فَأْتُوْهُنَّ مِنْ حَيْثُ اَمَرَكُمُ اللّٰهُ ۗ اِنَّ اللّٰهَ يُحِبُّ التَّوَّابِيْنَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِيْنَ (البقرة : ٢)

wayasalūnaka
وَيَسْـَٔلُونَكَ
And they ask you
இன்னும் உம்மிடம் கேட்கிறார்கள்
ʿani l-maḥīḍi
عَنِ ٱلْمَحِيضِۖ
about [the] menstruation
மாதவிடாய் பற்றி
qul
قُلْ
Say
கூறுவீராக
huwa
هُوَ
"It
அது
adhan
أَذًى
(is) a hurt
ஓர் இடையூறு
fa-iʿ'tazilū
فَٱعْتَزِلُوا۟
so keep away (from)
எனவே விலகிவிடுங்கள்
l-nisāa
ٱلنِّسَآءَ
[the] women
பெண்களைவிட்டு
fī l-maḥīḍi
فِى ٱلْمَحِيضِۖ
during (their) [the] menstruation
மாதவிடாயில்
walā taqrabūhunna
وَلَا تَقْرَبُوهُنَّ
And (do) not approach them
இன்னும் அவர்களுடன் உறவுகொள்ளாதீர்கள்
ḥattā yaṭhur'na
حَتَّىٰ يَطْهُرْنَۖ
until they are cleansed
அவர்கள் தூய்மையாகும் வரை
fa-idhā taṭahharna
فَإِذَا تَطَهَّرْنَ
Then when they are purified
அவர்கள் முழுமையாக சுத்தமாகிவிட்டால்
fatūhunna
فَأْتُوهُنَّ
then come to them
அவர்களிடம் வாருங்கள்
min ḥaythu
مِنْ حَيْثُ
from where
முறைப்படி
amarakumu
أَمَرَكُمُ
has ordered you
உங்களை ஏவினான்
l-lahu
ٱللَّهُۚ
Allah"
அல்லாஹ்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
yuḥibbu
يُحِبُّ
loves
நேசிக்கிறான்
l-tawābīna
ٱلتَّوَّٰبِينَ
those who turn in repentance
பாவத்திலிருந்து மீளுபவர்களை
wayuḥibbu
وَيُحِبُّ
and loves
இன்னும் நேசிக்கிறான்
l-mutaṭahirīna
ٱلْمُتَطَهِّرِينَ
those who purify themselves
பரிசுத்தமானவர்களை

Transliteration:

Wa yas'aloonaka 'anil maheedi qul huwa azan fa'tazilun nisaaa'a fil maheedi wa laa taqraboo hunna hattaa yathurna fa-izaa tathharna faatoohunna min haisu amarakumul laah; innallaaha yuhibbut Tawwaabeena wa yuhibbul mutatahhireen (QS. al-Baq̈arah:222)

English Sahih International:

And they ask you about menstruation. Say, "It is harm, so keep away from wives during menstruation. And do not approach them until they are pure. And when they have purified themselves, then come to them from where Allah has ordained for you. Indeed, Allah loves those who are constantly repentant and loves those who purify themselves." (QS. Al-Baqarah, Ayah ௨௨௨)

Abdul Hameed Baqavi:

(நபியே!) மாதவிடாயைப் பற்றியும் உங்களிடம் கேட்கின்றார்கள். நீங்கள் கூறுங்கள்: "அது (அசுத்தமான) ஓர் இடையூறு. எனவே, மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டு விலகி, அவர்கள் சுத்தமாகும் வரையில் அவர்களை அணுகாதீர்கள். சுத்தமாகிவிட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்தை விட்டு) வருத்தப்பட்டு மீளுகிறவர்களையும், பரிசுத்தவான்களையும் விரும்புகிறான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௨௨)

Jan Trust Foundation

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்| “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: "அது ஓர் இடையூறாகும். எனவே, மாதவிடாயில் பெண்களை விட்டு விலகிவிடுங்கள். அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களுடன் உறவு கொள்ளாதீர்கள். அவர்கள் முழுமையாகச் சுத்தமாகிவிட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் வாருங்கள்." நிச்சயமாக அல்லாஹ் பாவத்திலிருந்து மீளுபவர்களை நேசிக்கிறான்; பரிசுத்தமானவர்களை நேசிக்கிறான்.