Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௦௬

Qur'an Surah Al-Baqarah Verse 206

ஸூரத்துல் பகரா [௨]: ௨௦௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا قِيْلَ لَهُ اتَّقِ اللّٰهَ اَخَذَتْهُ الْعِزَّةُ بِالْاِثْمِ فَحَسْبُهٗ جَهَنَّمُ ۗ وَلَبِئْسَ الْمِهَادُ (البقرة : ٢)

wa-idhā qīla
وَإِذَا قِيلَ
And when it is said
கூறப்பட்டால்
lahu
لَهُ
to him
அவனுக்கு
ittaqi
ٱتَّقِ
"Fear
அஞ்சிக்கொள்
l-laha
ٱللَّهَ
Allah"
அல்லாஹ்வை
akhadhathu
أَخَذَتْهُ
takes him
அவனைப் பிடித்துக் கொள்கிறது
l-ʿizatu
ٱلْعِزَّةُ
(his) pride
பெருமை
bil-ith'mi
بِٱلْإِثْمِۚ
to [the] sins
பாவத்தைக் கொண்டு
faḥasbuhu
فَحَسْبُهُۥ
Then enough for him
எனவே அவனுக்குப்போதும்
jahannamu
جَهَنَّمُۚ
(is) Hell -
நரகம்
walabi'sa
وَلَبِئْسَ
[and] surely an evil
இன்னும் திட்டமாக கெட்டுவிட்டது
l-mihādu
ٱلْمِهَادُ
[the] resting-place
தங்குமிடம்

Transliteration:

Wa izaa qeela lahuttaqil laaha akhazathul izzatu bil-ism; fahasbuhoo jahannam; wa labi'sal mihaad (QS. al-Baq̈arah:206)

English Sahih International:

And when it is said to him, "Fear Allah," pride in the sin takes hold of him. Sufficient for him is Hellfire, and how wretched is the resting place. (QS. Al-Baqarah, Ayah ௨௦௬)

Abdul Hameed Baqavi:

தவிர, "நீ அல்லாஹ்வுக்குப் பயந்துகொள். (விஷமம் செய்யாதே)" என அவனுக்குக் கூறப்பட்டால் (அவனுடைய) பெருமை அவனை (விஷமம் செய்து) பாவத்தைச் செய்யும்படியே (இழுத்துப்) பிடித்துக் கொள்கிறது. ஆகவே, அவனுக்கு நரகமே தகுதியாகும். நிச்சயமாக (அது) தங்குமிடங்களில் மிகக் கெட்டது. (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௦௬)

Jan Trust Foundation

“அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்” என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது; அவனுக்கு நரகமே போதுமானது நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"அல்லாஹ்வை அஞ்சிக் கொள்" என அவனுக்குக் கூறப்பட்டால், பெருமை அவனைப் பாவத்தைக் கொண்டு பிடித்துக் கொள்கிறது. எனவே, அவனுக்கு நரகமே போதும். (அந்தத்) தங்குமிடம் திட்டமாக கெட்டுவிட்டது.