குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௦௧
Qur'an Surah Al-Baqarah Verse 201
ஸூரத்துல் பகரா [௨]: ௨௦௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ (البقرة : ٢)
- wamin'hum
- وَمِنْهُم
- And from those
- அவர்களில்
- man
- مَّن
- who
- எவர்
- yaqūlu
- يَقُولُ
- say
- கூறுகிறார்
- rabbanā
- رَبَّنَآ
- "Our Lord!
- எங்கள் இறைவா
- ātinā
- ءَاتِنَا
- Grant us
- எங்களுக்குத் தா
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَا
- in the world
- இம்மையில்
- ḥasanatan
- حَسَنَةً
- good
- அழகியதை
- wafī l-ākhirati
- وَفِى ٱلْءَاخِرَةِ
- and in the Hereafter
- இன்னும் மறுமையில்
- ḥasanatan
- حَسَنَةً
- good
- அழகியதை
- waqinā
- وَقِنَا
- and save us
- இன்னும் காத்துக்கொள்/ எங்களை
- ʿadhāba
- عَذَابَ
- (from the) punishment
- வேதனையிலிருந்து
- l-nāri
- ٱلنَّارِ
- (of) the Fire"
- (நரக) நெருப்பின்
Transliteration:
Wa minhum mai yaqoolu rabbanaaa aatina fid dunyaa hasanatawn wa fil aakhirati hasanatanw wa qinaa azaaban Naar(QS. al-Baq̈arah:201)
English Sahih International:
But among them is he who says, "Our Lord, give us in this world [that which is] good and in the Hereafter [that which is] good and protect us from the punishment of the Fire." (QS. Al-Baqarah, Ayah ௨௦௧)
Abdul Hameed Baqavi:
அன்றி "எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை அளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!" எனக் கோருபவர்களும் மனிதர்களில் உண்டு. (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௦௧)
Jan Trust Foundation
இன்னும் அவர்களில் சிலர், “ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
"எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் அழகியதைத் தா! மறுமையிலும் அழகியதைத் தா! (நரக) நெருப்பின் வேதனையி-ருந்தும் எங்களைக் காத்துக்கொள்" எனக் கூறுபவரும் அவர்களில் உண்டு.