குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௦
Qur'an Surah Al-Baqarah Verse 20
ஸூரத்துல் பகரா [௨]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ اَبْصَارَهُمْ ۗ كُلَّمَآ اَضَاۤءَ لَهُمْ مَّشَوْا فِيْهِ ۙ وَاِذَآ اَظْلَمَ عَلَيْهِمْ قَامُوْا ۗوَلَوْ شَاۤءَ اللّٰهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَاَبْصَارِهِمْ ۗ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ࣖ (البقرة : ٢)
- yakādu
- يَكَادُ
- Almost
- நெருங்குகிறது
- l-barqu
- ٱلْبَرْقُ
- the lightning
- மின்னல்
- yakhṭafu
- يَخْطَفُ
- snatches away
- பறிக்கிறது
- abṣārahum
- أَبْصَٰرَهُمْۖ
- their sight
- பார்வைகளை அவர்களின்
- kullamā aḍāa
- كُلَّمَآ أَضَآءَ
- Whenever it flashes
- அது வெளிச்சம் தரும் போதெல்லாம்
- lahum
- لَهُم
- for them
- அவர்களுக்கு
- mashaw
- مَّشَوْا۟
- they walk
- நடக்கிறார்கள்
- fīhi
- فِيهِ
- in it
- அதில்
- wa-idhā aẓlama
- وَإِذَآ أَظْلَمَ
- and when it darkens
- இன்னும் இருள் சூழ்ந்தால்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- on them
- அவர்கள் மீது
- qāmū
- قَامُوا۟ۚ
- they stand (still)
- நிற்கிறார்கள்
- walaw shāa
- وَلَوْ شَآءَ
- And if had willed
- நாடினால்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- ladhahaba
- لَذَهَبَ
- He would certainly have taken away
- திட்டமாக சென்றுவிடுவான்
- bisamʿihim
- بِسَمْعِهِمْ
- their hearing
- கேள்விப்புலனைக் கொண்டு/அவர்களின்
- wa-abṣārihim
- وَأَبْصَٰرِهِمْۚ
- and their sight
- பார்வைகளை அவர்களின்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- ʿalā
- عَلَىٰ
- (is) on
- மீது
- kulli shayin
- كُلِّ شَىْءٍ
- every thing
- எல்லாம்/பொருள்
- qadīrun
- قَدِيرٌ
- All-Powerful
- பேராற்றலுடையவன்
Transliteration:
Yakaadul barqu yakhtafu absaarahum kullamaaa adaaa'a lahum mashaw feehi wa izaaa azlama 'alaihim qaamoo; wa law shaaa'al laahu lazahaba bisam'ihim wa absaarihim; innal laaha 'alaa kulli shai'in Qadeer(QS. al-Baq̈arah:20)
English Sahih International:
The lightning almost snatches away their sight. Every time it lights [the way] for them, they walk therein; but when darkness comes over them, they stand [still]. And if Allah had willed, He could have taken away their hearing and their sight. Indeed, Allah is over all things competent. (QS. Al-Baqarah, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
(தவிர) அந்த மின்னல் இவர்களின் பார்வைகளைப் பறிக்கப் பார்க்கின்றது. அது இவர்களுக்கு வெளிச்சம் தரும்போதெல்லாம் அ(ந்த வெளிச்சத்)தில் நடக்(க விரும்பு)கிறார்கள். (ஆனால், அம்மின்னல் மறைந்து) அவர்களை இருள் சூழ்ந்து கொண்டால் (வழி தெரியாது திகைத்து) நின்று விடுகிறார்கள். இன்னும் அல்லாஹ் விரும்பினால் இவர்களுடைய கேள்விப் புலனையும் பார்வைகளையும் போக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் (எவ்விதமும் செய்ய) பேராற்றலுடையவன். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௦)
Jan Trust Foundation
அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அ(ம் மின்னலான)து அவர்களுக்கு ஒளி தரும் போதெல்லாம், அவர்கள் அத(ன் துணையினா)ல் நடக்கிறார்கள்; அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது (வழியறியாது) நின்றுவிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது. அது அவர்களுக்கு வெளிச்சம் தரும்போதெல்லாம் அதில் அவர்கள் நடக்கிறார்கள். அவர்கள் மீது இருள் சூழ்ந்து கொண்டால் நிற்கிறார்கள். அல்லாஹ் நாடினால் அவர்களின் கேள்விப்புலனையும் அவர்களின் பார்வைகளையும் திட்டமாக கொண்டு சென்று விடுவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீது பேராற்றலுடையவன்.