Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௯௫

Qur'an Surah Al-Baqarah Verse 195

ஸூரத்துல் பகரா [௨]: ௧௯௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَنْفِقُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ ۛ وَاَحْسِنُوْا ۛ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ (البقرة : ٢)

wa-anfiqū
وَأَنفِقُوا۟
And spend
இன்னும் தர்மம் புரியுங்கள்
fī sabīli l-lahi
فِى سَبِيلِ ٱللَّهِ
in (the) way (of) Allah
அல்லாஹ்வின் பாதையில்
walā tul'qū
وَلَا تُلْقُوا۟
and (do) not throw (yourselves)
இன்னும் போடாதீர்கள்
bi-aydīkum
بِأَيْدِيكُمْ
[with your hands]
உங்கள் கரங்களை
ilā l-tahlukati
إِلَى ٱلتَّهْلُكَةِۛ
into [the] destruction
அழிவில்
wa-aḥsinū
وَأَحْسِنُوٓا۟ۛ
And do good;
இன்னும் நல்லறம் புரியுங்கள்
inna
إِنَّ
indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
yuḥibbu
يُحِبُّ
loves
நேசிக்கிறான்
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
the good-doers
நல்லறம் புரிவோரை

Transliteration:

Wa anfiqoo fee sabeelil laahi wa laa tulqoo bi aydeekum ilat tahlukati wa ahsinoo; innal laaha yuhibbul muhsineen (QS. al-Baq̈arah:195)

English Sahih International:

And spend in the way of Allah and do not throw [yourselves] with your [own] hands into destruction [by refraining]. And do good; indeed, Allah loves the doers of good. (QS. Al-Baqarah, Ayah ௧௯௫)

Abdul Hameed Baqavi:

நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தாராளமாகச்) செலவு செய்யுங்கள். தவிர, (போர் சமயத்தில் செலவு செய்யாது) உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள். அன்றி (பிறருக்கு உதவியும்) நன்மையும் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பிறருக்கு) நன்மை செய்பவர்களை நேசிக்கின்றான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௯௫)

Jan Trust Foundation

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் புரியுங்கள்; உங்கள் கரங்களை அழிவில் போடாதீர்கள்; நல்லறம் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நல்லறம் புரிவோரை நேசிக்கிறான்.