Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௯௧

Qur'an Surah Al-Baqarah Verse 191

ஸூரத்துல் பகரா [௨]: ௧௯௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاقْتُلُوْهُمْ حَيْثُ ثَقِفْتُمُوْهُمْ وَاَخْرِجُوْهُمْ مِّنْ حَيْثُ اَخْرَجُوْكُمْ وَالْفِتْنَةُ اَشَدُّ مِنَ الْقَتْلِ ۚ وَلَا تُقَاتِلُوْهُمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ حَتّٰى يُقٰتِلُوْكُمْ فِيْهِۚ فَاِنْ قٰتَلُوْكُمْ فَاقْتُلُوْهُمْۗ كَذٰلِكَ جَزَاۤءُ الْكٰفِرِيْنَ (البقرة : ٢)

wa-uq'tulūhum
وَٱقْتُلُوهُمْ
And kill them
இன்னும் அவர்களைக் கொல்லுங்கள்
ḥaythu thaqif'tumūhum
حَيْثُ ثَقِفْتُمُوهُمْ
wherever you find them
இடம்/அவர்களைப் பார்த்தீர்கள்
wa-akhrijūhum
وَأَخْرِجُوهُم
and drive them out
இன்னும் அவர்களை வெளியேற்றுங்கள்
min ḥaythu akhrajūkum
مِّنْ حَيْثُ أَخْرَجُوكُمْۚ
from wherever they drove you out
அவர்கள் உங்களை வெளியேற்றியவாறே
wal-fit'natu
وَٱلْفِتْنَةُ
and [the] oppression
இன்னும் இணைவைத்தல்
ashaddu
أَشَدُّ
(is) worse
மிகக் கடுமையானது
mina
مِنَ
than
விட
l-qatli
ٱلْقَتْلِۚ
[the] killing
கொலை
walā tuqātilūhum
وَلَا تُقَٰتِلُوهُمْ
And (do) not fight them
போர் புரியாதீர்கள்/அவர்களிடம்
ʿinda l-masjidi
عِندَ ٱلْمَسْجِدِ
near Al-Masjid
மஸ்ஜிதின் அருகில்
l-ḥarāmi
ٱلْحَرَامِ
Al-Haraam
புனிதமான
ḥattā yuqātilūkum
حَتَّىٰ يُقَٰتِلُوكُمْ
until they fight you
அவர்கள் உங்களிடம் போர் புரியும் வரை
fīhi fa-in qātalūkum
فِيهِۖ فَإِن قَٰتَلُوكُمْ
in it Then if they fight you
அதில்/அவர்கள் உங்களிடம் போரிட்டால்
fa-uq'tulūhum
فَٱقْتُلُوهُمْۗ
then kill them
அவர்களைக் கொல்லுங்கள்
kadhālika jazāu
كَذَٰلِكَ جَزَآءُ
Such (is the) reward
இப்படித்தான்/கூலி
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
(of) the disbelievers
நிராகரிப்பவர்களின்

Transliteration:

Waqtuloohum haisu saqif tumoohum wa akhrijoohum min haisu akhrajookum; walfitnatu ashaddu minal qatl; wa laa tuqaatiloohum 'indal Majidil Haraami hattaa yaqaatilookum feehi fa in qaatalookum faqtuloohum; kazaalika jazaaa'ul kaafireen (QS. al-Baq̈arah:191)

English Sahih International:

And kill them [in battle] wherever you overtake them and expel them from wherever they have expelled you, and fitnah is worse than killing. And do not fight them at al-Masjid al-Haram until they fight you there. But if they fight you, then kill them. Such is the recompense of the disbelievers. (QS. Al-Baqarah, Ayah ௧௯௧)

Abdul Hameed Baqavi:

ஆகவே (உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்ட) அவர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள். உங்களை (உங்கள் ஊரிலிருந்து) அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை வெளியேற்றி விடுங்கள். (அவர்கள் செய்யும்) கலகம் கொலையை விட மிகக் கொடியது. ஆனால் (அவர்களில்) எவரேனும் அபயம் தேடி மஸ்ஜிதுல் ஹராமில் இருந்தால், அங்கு அவர்கள் உங்களை எதிர்த்து போர் புரிய முற்படும் வரையில் நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள். (அவ்விடத்திலும்) அவர்கள் உங்களை எதிர்த்து போர் புரிந்தால் நீங்களும் அவர்களை வெட்டுங்கள். அந்த நிராகரிப்பவர்களுக்கு (உரிய) கூலி இதுவே! (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௯௧)

Jan Trust Foundation

(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களை நீங்கள் பார்த்த இடத்தில் அவர்களைக் கொல்லுங்கள். உங்களை அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள். இணைவைத்தல் கொலையைவிட மிகக் கடுமையானது. அல்மஸ்ஜிதுல் ஹராமின் அருகில் அவர்களிடம் போர் புரியாதீர்கள், அதில் அவர்கள், உங்களிடம் போர்புரியும் வரை. அவர்கள் உங்களிடம் போரிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள். இப்படித்தான் நிராகரிப்பவர்களின் கூலி.