Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௮௯

Qur'an Surah Al-Baqarah Verse 189

ஸூரத்துல் பகரா [௨]: ௧௮௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ يَسـَٔلُوْنَكَ عَنِ الْاَهِلَّةِ ۗ قُلْ هِيَ مَوَاقِيْتُ لِلنَّاسِ وَالْحَجِّ ۗ وَلَيْسَ الْبِرُّ بِاَنْ تَأْتُوا الْبُيُوْتَ مِنْ ظُهُوْرِهَا وَلٰكِنَّ الْبِرَّ مَنِ اتَّقٰىۚ وَأْتُوا الْبُيُوْتَ مِنْ اَبْوَابِهَا ۖ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ (البقرة : ٢)

yasalūnaka
يَسْـَٔلُونَكَ
They ask you
உம்மிடம் கேட்கிறார்கள்
ʿani
عَنِ
about
பற்றி
l-ahilati
ٱلْأَهِلَّةِۖ
the new moons
பிறைகள்
qul
قُلْ
Say
கூறுவீராக
hiya
هِىَ
"They
அவை
mawāqītu
مَوَٰقِيتُ
(are) indicators of periods
காலங்களை அறிவிக்கக்கூடியவை
lilnnāsi
لِلنَّاسِ
for the people
மக்களுக்கு
wal-ḥaji
وَٱلْحَجِّۗ
and (for) the Hajj
இன்னும் ஹஜ்ஜு
walaysa
وَلَيْسَ
And it is not
இன்னும் இல்லை
l-biru
ٱلْبِرُّ
[the] righteousness
நன்மை
bi-an tatū
بِأَن تَأْتُوا۟
that you come
நீங்கள் வருவது
l-buyūta
ٱلْبُيُوتَ
(to) the houses
வீடுகளுக்கு
min
مِن
from
இருந்து
ẓuhūrihā
ظُهُورِهَا
their backs
அவற்றின்பின்வழிகள்
walākinna
وَلَٰكِنَّ
[and] but
எனினும்
l-bira
ٱلْبِرَّ
[the] righteous
நன்மை
mani ittaqā
مَنِ ٱتَّقَىٰۗ
(is one) who fears (Allah)
எவர்/அல்லாஹ்வை அஞ்சினார்
watū
وَأْتُوا۟
And come
வாருங்கள்
l-buyūta
ٱلْبُيُوتَ
(to) the houses
வீடுகளுக்கு
min abwābihā
مِنْ أَبْوَٰبِهَاۚ
from their doors
அவற்றின் தலைவாசல்களிலிருந்து
wa-ittaqū l-laha
وَٱتَّقُوا۟ ٱللَّهَ
And fear Allah
இன்னும் அல்லாஹ்வை அஞ்சுங்கள்
laʿallakum tuf'liḥūna
لَعَلَّكُمْ تُفْلِحُونَ
so that you may (be) successful
நீங்கள் வெற்றி அடைவதற்காக

Transliteration:

Yas'aloonaka 'anil ahillati qul hiya mawaaqeetu linnaasi wal Hajj; wa laisal birru bi an taatul buyoota min zuhoorihaa wa laakinnal birra manit taqaa; waatul buyoota min abwaa bihaa; wattaqullaaha la'allakum tuflihoon (QS. al-Baq̈arah:189)

English Sahih International:

They ask you, [O Muhammad], about the crescent moons. Say, "They are measurements of time for the people and for Hajj [pilgrimage]." And it is not righteousness to enter houses from the back, but righteousness is [in] one who fears Allah. And enter houses from their doors. And fear Allah that you may succeed. (QS. Al-Baqarah, Ayah ௧௮௯)

Abdul Hameed Baqavi:

(நபியே! மாதந்தோறும் பிறந்து, வளர்ந்து, தேயும்) பிறைகளைப் பற்றி உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அவை மனிதர்களுக்கு (ஒவ்வொரு மாதத்தையும்) ஹஜ்ஜுடைய காலங்களை(யும்) அறிவிக்கக் கூடியவை." மேலும் (நம்பிக்கையாளர்களே! இஹ்ராம் கட்டிய) நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் பின்புறமாக வந்து விடுவதனால் நல்லவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். எனினும், எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றாரோ அவரே நல்லவர். ஆதலால் நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் தலைவாசல்களின் வழியாக(வே) வாருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்தும் நடந்துகொள்ளுங்கள். இதனால் நீங்கள் வெற்றியடையலாம். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௮௯)

Jan Trust Foundation

(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்| “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை; ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்; நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறைகளைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: "அவை மக்களுக்கும் ஹஜ்ஜுக்கும் காலங்களை அறிவிக்கக்கூடியவை." நீங்கள் வீடுகளுக்கு அவற்றின் பின்வழிகளில் இருந்து வருவது நன்மை இல்லை. எனினும், நன்மை அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்(களில்)தான் இருக்கிறது. நீங்கள் வீடுகளுக்கு அவற்றின் தலைவாசல்களில் இருந்து வாருங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள், நீங்கள் வெற்றியடைவதற்காக.