Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௮௪

Qur'an Surah Al-Baqarah Verse 184

ஸூரத்துல் பகரா [௨]: ௧௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَيَّامًا مَّعْدُوْدٰتٍۗ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ ۗ وَعَلَى الَّذِيْنَ يُطِيْقُوْنَهٗ فِدْيَةٌ طَعَامُ مِسْكِيْنٍۗ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهٗ ۗ وَاَنْ تَصُوْمُوْا خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ (البقرة : ٢)

ayyāman
أَيَّامًا
(Fasting for) days
நாட்களில்
maʿdūdātin
مَّعْدُودَٰتٍۚ
numbered
எண்ணப்பட்ட(வை)
faman
فَمَن
So whoever
எவர்
kāna
كَانَ
is
இருந்தார்
minkum
مِنكُم
among you
உங்களில்
marīḍan
مَّرِيضًا
sick
நோயாளியாக
aw
أَوْ
or
அல்லது
ʿalā safarin
عَلَىٰ سَفَرٍ
on a journey
பயணத்தில்
faʿiddatun
فَعِدَّةٌ
then a prescribed number
கணக்கிடவும்
min ayyāmin
مِّنْ أَيَّامٍ
of days
நாட்களில்
ukhara
أُخَرَۚ
other
மற்ற(வை)
waʿalā
وَعَلَى
And on
இன்னும் மீது
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
yuṭīqūnahu
يُطِيقُونَهُۥ
can afford it
அதற்கு சிரமப்படுகிறார்கள்
fid'yatun
فِدْيَةٌ
a ransom
பரிகாரம்
ṭaʿāmu
طَعَامُ
(of) feeding
உணவு
mis'kīnin
مِسْكِينٍۖ
a poor
ஓர் ஏழையின்
faman
فَمَن
And whoever
எவர்
taṭawwaʿa
تَطَوَّعَ
volunteers
உபரியாகச் செய்வார்
khayran
خَيْرًا
good
நன்மையை
fahuwa
فَهُوَ
then it
அது
khayrun
خَيْرٌ
(is) better
நன்மை
lahu
لَّهُۥۚ
for him
அவருக்கு
wa-an taṣūmū
وَأَن تَصُومُوا۟
And to fast
இன்னும் நீங்கள் நோன்பு நோற்பது
khayrun
خَيْرٌ
(is) better
மிகச் சிறந்தது
lakum
لَّكُمْۖ
for you
உங்களுக்கு
in kuntum
إِن كُنتُمْ
if you
நீங்கள் இருந்தால்
taʿlamūna
تَعْلَمُونَ
know
அறிந்தவர்களாக (அறிவீர்கள்)

Transliteration:

Ayyaamam ma'doodaat; faman kaana minkum mareedan aw'alaa safarin fa'iddatum min ayyaamin ukhar; wa 'alal lazeena yuteeqoonahoo fidyatun ta'aamu miskeenin faman tatawwa'a khairan fahuwa khairulo lahoo wa an tasoomoo khairul lakum in kuntum ta'lamoon (QS. al-Baq̈arah:184)

English Sahih International:

[Fasting for] a limited number of days. So whoever among you is ill or on a journey [during them] – then an equal number of other days [are to be made up]. And upon those who are able [to fast, but with hardship] – a ransom [as substitute] of feeding a poor person [each day]. And whoever volunteers good [i.e., excess] – it is better for him. But to fast is best for you, if you only knew. (QS. Al-Baqarah, Ayah ௧௮௪)

Abdul Hameed Baqavi:

குறிப்பிட்ட நாள்களில்தான் (நோன்பு நோற்பது கடமையாகும்.) ஆயினும் (அந்நாள்களில்) உங்களில் யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (அவர் நோன்பு நோற்க வேண்டியதில்லை. அதை ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் கணக்கி(ட்டு நோற்றுவி)டவும். தவிர, (எக்காரணத் தினாலாவது நோன்பு நோற்கக் கஷ்டப்படுபவர்கள் அதற்குப்) பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும். எவரேனும் நன்மையை நாடி (பரிகாரத்திற்குரிய அளவைவிட அதிகமாகத்) தானம் செய்தால் அது அவருக்கே நன்மை. ஆயினும், (பரிகாரமாகத் தானம் கொடுப்பதைவிட நோன்பின் நன்மையை) நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது (என்பதை தெரிந்து கொள்வீர்கள்). (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௮௪)

Jan Trust Foundation

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்; எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எண்ணப்பட்ட (ரமழான் மாத) நாட்களில் (நோன்பிருத்தல் கடமையாகும்). உங்களில் நோயாளியாக அல்லது பிரயாணத்தில் (பயணியாக) இருந்தவர் மற்ற நாட்களில் (விடுபட்ட நாட்களை) கணக்கிடவும். அதற்கு சிரமப்படுபவர்கள் மீது ஓர் ஏழையின் உணவு பரிகாரம் (கொடுத்தல்) கடமையாகும். எவர் நன்மையை உபரியாகச் செய்வாரோ அது அவருக்கு நன்மை. நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்பது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.