Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௮௦

Qur'an Surah Al-Baqarah Verse 180

ஸூரத்துல் பகரா [௨]: ௧௮௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كُتِبَ عَلَيْكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ اِنْ تَرَكَ خَيْرًا ۖ ۨالْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ بِالْمَعْرُوْفِۚ حَقًّا عَلَى الْمُتَّقِيْنَ ۗ (البقرة : ٢)

kutiba
كُتِبَ
Prescribed
கடமையாக்கப்பட்டது
ʿalaykum
عَلَيْكُمْ
for you
உங்கள் மீது
idhā ḥaḍara
إِذَا حَضَرَ
when approaches
வந்தால்
aḥadakumu
أَحَدَكُمُ
any of you
உங்களில் ஒருவருக்கு
l-mawtu
ٱلْمَوْتُ
[the] death
மரணம்
in taraka
إِن تَرَكَ
if he leaves
அவர் விட்டுச் சென்றால்
khayran
خَيْرًا
good
செல்வத்தை
l-waṣiyatu
ٱلْوَصِيَّةُ
(making) the will
மரணசாசனம்
lil'wālidayni
لِلْوَٰلِدَيْنِ
for the parents
பெற்றோருக்கு
wal-aqrabīna
وَٱلْأَقْرَبِينَ
and the near relatives
இன்னும் உறவினர்களுக்கு
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِۖ
with due fairness
நல்ல முறையில்
ḥaqqan
حَقًّا
a duty
அவசியமாக
ʿalā
عَلَى
on
மீது
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
the righteous ones
அல்லாஹ்வை அஞ்சுபவர்கள்

Transliteration:

Kutiba 'alaikum izaa hadara ahadakumul mawtu in taraka khairanil wasiyyatu lilwaalidaini wal aqrabeena bilma'roofi haqqan 'alalmut taqeen (QS. al-Baq̈arah:180)

English Sahih International:

Prescribed for you when death approaches [any] one of you if he leaves wealth [is that he should make] a bequest for the parents and near relatives according to what is acceptable – a duty upon the righteous. (QS. Al-Baqarah, Ayah ௧௮௦)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) உங்களில் எவருக்கும் மரணம் சமீபித்து அவர் பொருளை விட்டுவிட்டு இறப்பவராகவும் இருந்தால், (அவர் தன்னுடைய) தாய் தந்தைக்கும், பந்துக்களுக்கும், நியாயமான முறைப்படி (பொருள் சேர்வதற்காக) மரண சாசனம் (கூற) விதிக்கப்பட்டிருக்கிறது. (இது) இறை அச்சமுடையவர்கள் மீது கடமையாகும். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௮௦)

Jan Trust Foundation

உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர் (தம்) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து (மரண சாஸனம்)செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது; (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது) முத்தகீன்கள்(பயபக்தியுடையோர்) மீது கடமையாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களில் ஒருவருக்கு மரணம் வந்தால்; (மேலும்) அவர் செல்வத்தை விட்டுச் சென்றால் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் நல்ல முறையில் (நீங்கள்) மரணசாசனம் கூறுவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டது. (இது) அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் மீது அவசியமாகும்.