Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௭௮

Qur'an Surah Al-Baqarah Verse 178

ஸூரத்துல் பகரா [௨]: ௧௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِى الْقَتْلٰىۗ اَلْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْاُنْثٰى بِالْاُنْثٰىۗ فَمَنْ عُفِيَ لَهٗ مِنْ اَخِيْهِ شَيْءٌ فَاتِّبَاعٌ ۢبِالْمَعْرُوْفِ وَاَدَاۤءٌ اِلَيْهِ بِاِحْسَانٍ ۗ ذٰلِكَ تَخْفِيْفٌ مِّنْ رَّبِّكُمْ وَرَحْمَةٌ ۗفَمَنِ اعْتَدٰى بَعْدَ ذٰلِكَ فَلَهٗ عَذَابٌ اَلِيْمٌ (البقرة : ٢)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O you who believe[d]!
நம்பிக்கையாளர்களே!
kutiba
كُتِبَ
Prescribed
கடமையாக்கப் பட்டுள்ளது
ʿalaykumu
عَلَيْكُمُ
for you
உங்கள் மீது
l-qiṣāṣu
ٱلْقِصَاصُ
(is) the legal retribution
பழிவாங்குதல்
fī l-qatlā
فِى ٱلْقَتْلَىۖ
in (the matter of) the murdered
கொலை செய்யப்பட்டவர்களுக்காக
l-ḥuru
ٱلْحُرُّ
the freeman
சுதந்திரமானவன்
bil-ḥuri
بِٱلْحُرِّ
for the freeman
சுதந்திரமான வனுக்குப் பதிலாக
wal-ʿabdu
وَٱلْعَبْدُ
and the slave
இன்னும் அடிமை
bil-ʿabdi
بِٱلْعَبْدِ
for the slave
அடிமைக்குப்பதிலாக
wal-unthā
وَٱلْأُنثَىٰ
and the female
இன்னும் பெண்
bil-unthā
بِٱلْأُنثَىٰۚ
for the female
பெண்ணுக்குப்பதிலாக
faman
فَمَنْ
But whoever
எவர்
ʿufiya
عُفِىَ
is pardoned
மன்னிக்கப்பட்டது
lahu
لَهُۥ
[for it]
அவருக்கு
min
مِنْ
from
இருந்து
akhīhi
أَخِيهِ
his brother
தன் சகோதரன்
shayon
شَىْءٌ
anything
ஏதேனும்
fa-ittibāʿun
فَٱتِّبَاعٌۢ
then follows up
பின்பற்றுதல்
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِ
with suitable
கண்ணியமான முறையில்
wa-adāon
وَأَدَآءٌ
[and] payment
இன்னும் நிறைவேற்றுதல்
ilayhi
إِلَيْهِ
to him
அவரிடம்
bi-iḥ'sānin
بِإِحْسَٰنٍۗ
with kindness
நன்றி அறிதலுடன்
dhālika
ذَٰلِكَ
That (is)
அது
takhfīfun
تَخْفِيفٌ
a concession
சலுகை
min
مِّن
from
இருந்து
rabbikum
رَّبِّكُمْ
your Lord
உங்கள் இறைவன்
waraḥmatun
وَرَحْمَةٌۗ
and mercy
இன்னும் அருள்
famani
فَمَنِ
Then whoever
இன்னும் எவர்
iʿ'tadā
ٱعْتَدَىٰ
transgresses
வரம்பு மீறினார்
baʿda dhālika
بَعْدَ ذَٰلِكَ
after that
அதற்குப் பின்னர்
falahu
فَلَهُۥ
then for him
அவருக்கு
ʿadhābun
عَذَابٌ
(is) a punishment
வேதனை
alīmun
أَلِيمٌ
painful
துன்புறுத்தக் கூடியது

Transliteration:

Yaaa ayyuhal lazeena aamanoo kutiba alaikumul qisaasu fil qatlaa alhurru bilhurri wal'abdu bil'abdi wal unsaa bil unsaa; faman 'ufiya lahoo min akheehi shai'un fattibaa'um bilma'roofi wa adaaa'un ilaihi bi ihsaan; zaalika takhfeefum mir rahbikum wa rahmah; famani' tadaa ba'da zaalika falahoo 'azaabun aleem (QS. al-Baq̈arah:178)

English Sahih International:

O you who have believed, prescribed for you is legal retribution for those murdered – the free for the free, the slave for the slave, and the female for the female. But whoever overlooks from his brother [i.e., the killer] anything, then there should be a suitable follow-up and payment to him [i.e., the deceased's heir or legal representative] with good conduct. This is an alleviation from your Lord and a mercy. But whoever transgresses after that will have a painful punishment. (QS. Al-Baqarah, Ayah ௧௭௮)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! கொலை செய்யப்பட்டவர்களுக்காக பழிவாங்குவது உங்கள்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. (ஆகவே, கொலை செய்யப்பட்டவன்) சுதந்திரமானவனாயின் (அவனை கொலை செய்த) சுதந்திரமானவனையே, (கொலை செய்யப்பட்டவன்) அடிமையாயின் (அவனை கொலை செய்த அந்த) அடிமையையே, (கொலை செய்யப்பட்டவள்) பெண்ணாயின் (கொலை செய்த அந்தப்) பெண்ணையே நீங்கள் கொலை செய்துவிடுங்கள். (ஆயினும், பழிவாங்கும் விஷயத்தில்) ஒரு சிறிதேனும் அ(க் கொலையுண்ட) வனுடைய சகோதரரால் மன்னிக்கப்பட்டுவிட்டால், மிக்க கண்ணியமான முறையைப் பின்பற்றி (அவனைக் கொலை செய்யாது விட்டு) விடவேண்டும். (பழிவாங்குவதற்குப் பதிலாகக் கொலையாளி ஒரு தொகையைத் தருவதாக ஒப்புக் கொண்டிருந்தால், அந்த நஷ்டஈட்டைத்) தயக்கமின்றி நன்றியோடு அவன் செலுத்திவிட வேண்டும். இ(வ்வாறு நஷ்டஈட்டை அனுமதித்திருப்ப)து உங்கள் இறைவனுடைய சலுகையும், அருளுமாகும். இ(வ்வாறு நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொண்ட)தற்குப் பின் எவரேனும் வரம்பு மீறி (நஷ்டஈடு கொடுத்த கொலையாளியைத் துன்புறுத்தி)னால் அவனுக்கு (மறுமையில்) மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௭௮)

Jan Trust Foundation

ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! கொலை செய்யப்பட்டவர்களுக்காக பழிவாங்குவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. (கொல்லப்பட்ட) சுதந்திரமானவனுக்குப் பதிலாக (கொலையாளியான) சுதந்திரமானவனை, (கொல்லப்பட்ட) அடிமைக்குப் பதிலாக (கொலையாளியான) அடிமையை, (கொல்லப்பட்ட) பெண்ணுக்குப் பதிலாக (கொலையாளியான) பெண்ணைத்தான் (கொல்ல வேண்டும்). எவருக்கு தன் சகோதரனிடமிருந்து (பரிகாரத் தொகையில்) ஏதேனும் மன்னிக்கப்பட்டால், கண்ணியமான முறையில் (அதைப்) பின்பற்றுதல் வேண்டும். நன்றி அறிதலுடன் (பரிகாரத் தொகையை) அவரிடம் நிறைவேற்றுதல் வேண்டும். இது உங்கள் இறைவனிடமிருந்து (வந்த) சலுகையும் அருளுமாகும். எவர் அதற்குப் பின்னர் வரம்பு மீறுவாரோ அவருக்குத் துன்புறுத்தக்கூடிய வேதனை உண்டு.