குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௬௦
Qur'an Surah Al-Baqarah Verse 160
ஸூரத்துல் பகரா [௨]: ௧௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِلَّا الَّذِيْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَبَيَّنُوْا فَاُولٰۤىِٕكَ اَتُوْبُ عَلَيْهِمْ ۚ وَاَنَا التَّوَّابُ الرَّحِيْمُ (البقرة : ٢)
- illā alladhīna
- إِلَّا ٱلَّذِينَ
- Except those
- தவிர/எவர்கள்
- tābū
- تَابُوا۟
- who repent[ed]
- மன்னிப்புக் கோரினார்கள்
- wa-aṣlaḥū
- وَأَصْلَحُوا۟
- and reform[ed]
- இன்னும் சீர்திருத்தினார்கள்
- wabayyanū
- وَبَيَّنُوا۟
- and openly declar[ed]
- இன்னும் தெளிவுபடுத்தினார்கள்
- fa-ulāika
- فَأُو۟لَٰٓئِكَ
- Then those
- இன்னும் அவர்கள்
- atūbu
- أَتُوبُ
- I will accept repentance
- மன்னிப்பேன்
- ʿalayhim
- عَلَيْهِمْۚ
- from them
- அவர்களை
- wa-anā
- وَأَنَا
- and I (am)
- நான்
- l-tawābu
- ٱلتَّوَّابُ
- the Acceptor of Repentance
- மகா மன்னிப்பாளன்
- l-raḥīmu
- ٱلرَّحِيمُ
- the Most Merciful
- மகா கருணையாளன்
Transliteration:
Illal lazeena taaboo wa aslahoo wa baiyanoo fa ulaaa'ika atoobu 'alaihim; wa Anat Tawwaabur Raheem(QS. al-Baq̈arah:160)
English Sahih International:
Except for those who repent and correct themselves and make evident [what they concealed]. Those – I will accept their repentance, and I am the Accepting of Repentance, the Merciful. (QS. Al-Baqarah, Ayah ௧௬௦)
Abdul Hameed Baqavi:
ஆயினும், அவர்களில் எவர்கள் வருந்தி வேதனைப்பட்டு, (தங்கள் வேதங்களில் மறைத்தவற்றை) சீர்திருத்தி, அவற்றை (மனிதர்களுக்குத்) தெளிவாக எடுத்துரைக்கின்றனரோ அவர்களை நான் மன்னித்துவிடுவேன். நானோ மிக்க மன்னிப்பாளன்; நிகரற்ற அன்புடையவன். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௬௦)
Jan Trust Foundation
எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவர்கள் மன்னிப்புக்கோரி, சீர்திருத்தி, (தாங்கள் மறைத்ததை) தெளிவுபடுத்தினார்களோ அவர்களைத் தவிர. அவர்களை மன்னிப்பேன். நான் மகா மன்னிப்பாளன்; மகா கருணையாளன்.