Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௪௨

Qur'an Surah Al-Baqarah Verse 142

ஸூரத்துல் பகரா [௨]: ௧௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ سَيَقُوْلُ السُّفَهَاۤءُ مِنَ النَّاسِ مَا وَلّٰىهُمْ عَنْ قِبْلَتِهِمُ الَّتِيْ كَانُوْا عَلَيْهَا ۗ قُلْ لِّلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُۗ يَهْدِيْ مَنْ يَّشَاۤءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ (البقرة : ٢)

sayaqūlu
سَيَقُولُ
Will say
கூறுவார்கள்
l-sufahāu
ٱلسُّفَهَآءُ
the foolish ones
அறிவீனர்கள்
mina l-nāsi
مِنَ ٱلنَّاسِ
from the people
மக்களில்
مَا
"What
எது
wallāhum
وَلَّىٰهُمْ
(has) turned them
திருப்பியது/அவர்களை
ʿan
عَن
from
விட்டு
qib'latihimu
قِبْلَتِهِمُ
their direction of prayer
கிப்லா/அவர்களின்
allatī
ٱلَّتِى
which
எது
kānū
كَانُوا۟
they were used to
இருந்தார்கள்
ʿalayhā
عَلَيْهَاۚ
[on it]"
அதன் மீது
qul
قُل
Say
கூறு(வீராக)
lillahi
لِّلَّهِ
"For Allah
அல்லாஹ்வுக்குரியன
l-mashriqu
ٱلْمَشْرِقُ
(is) the east
கிழக்கு
wal-maghribu
وَٱلْمَغْرِبُۚ
and the west
இன்னும் மேற்கு
yahdī
يَهْدِى
He guides
நேர்வழிகாட்டுகிறான்
man yashāu
مَن يَشَآءُ
whom He wills
எவர்/நாடுகிறான்
ilā ṣirāṭin
إِلَىٰ صِرَٰطٍ
to a path
பாதைக்கு
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
straight"
நேரான

Transliteration:

Sayaqoolus sufahaaa'u minan naasi maa wallaahum 'an Qiblatihimul latee kaanoo 'alaihaa; qulo lillaahil mashriqu walmaghrib; yahdee mai yashaaa'u ilaa Siraatim Mustaqeem (QS. al-Baq̈arah:142)

English Sahih International:

The foolish among the people will say, "What has turned them away from their qiblah, which they used to face?" Say, "To Allah belongs the east and the west. He guides whom He wills to a straight path." (QS. Al-Baqarah, Ayah ௧௪௨)

Abdul Hameed Baqavi:

(நபியே! "முஸ்லிம்கள் முன்னர்) முன்நோக்கி வந்த கிப்லாவிலிருந்து அவர்களைத் திருப்பிவிட்டது எது?" என மனிதர்களில் சில அறிவீனர்கள் கேட்க ஆரம்பிப்பார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "கிழக்குத் திசையும் மேற்குத் திசையும் அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்புபவர்களை நேரான வழியில் செலுத்துவான்." (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௪௨)

Jan Trust Foundation

மக்களில் அறிவீனர்கள் கூறுவார்கள்| “(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பிவிட்டது எது?” என்று. (நபியே!) நீர் கூறும் “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை; தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான்” என்று.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"அவர்கள் (தொழுது கொண்டு) இருந்த அவர்களின் கிப்லாவை விட்டு அவர்களைத் திருப்பியது எது?" என (முஸ்லிம்களைப் பற்றி) மக்களில் உள்ள அறிவீனர்கள் கூறுவார்கள். (அதற்கு) கூறுவீராக! "கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்குரியனவே! அவன் நாடுகிறவர்களை நேரான பாதைக்கு நேர்வழி காட்டுகிறான்."