Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௩௨

Qur'an Surah Al-Baqarah Verse 132

ஸூரத்துல் பகரா [௨]: ௧௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَوَصّٰى بِهَآ اِبْرٰهٖمُ بَنِيْهِ وَيَعْقُوْبُۗ يٰبَنِيَّ اِنَّ اللّٰهَ اصْطَفٰى لَكُمُ الدِّيْنَ فَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْتُمْ مُّسْلِمُوْنَ ۗ (البقرة : ٢)

wawaṣṣā
وَوَصَّىٰ
And enjoined
இன்னும் உபதேசித்தார்
bihā
بِهَآ
[it]
அதை
ib'rāhīmu
إِبْرَٰهِۦمُ
Ibrahim
இப்ராஹீம்
banīhi
بَنِيهِ
(upon) his sons
பிள்ளைகளுக்கு/தன்
wayaʿqūbu
وَيَعْقُوبُ
and Yaqub
இன்னும் யஃகூப்
yābaniyya
يَٰبَنِىَّ
"O my sons!
என் பிள்ளைகளே
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
iṣ'ṭafā
ٱصْطَفَىٰ
has chosen
தேர்ந்தெடுத்தான்
lakumu
لَكُمُ
for you
உங்களுக்கு
l-dīna
ٱلدِّينَ
the religion
மார்க்கத்தை
falā tamūtunna
فَلَا تَمُوتُنَّ
so not (should) you die
எனவே, கண்டிப்பாக நீங்கள் மரணித்து விடாதீர்கள்
illā
إِلَّا
except
தவிர
wa-antum
وَأَنتُم
while you
நீங்கள் இருக்கவே
mus'limūna
مُّسْلِمُونَ
(are) submissive"
முஸ்லிம்களாக

Transliteration:

Wa wassaa bihaaa Ibraaheemu baneehi wa Ya'qoob, yaa baniyya innal laahas tafaa lakumud deena falaa tamootunna illaa wa antum muslimoon (QS. al-Baq̈arah:132)

English Sahih International:

And Abraham instructed his sons [to do the same] and [so did] Jacob, [saying], "O my sons, indeed Allah has chosen for you this religion, so do not die except while you are Muslims." (QS. Al-Baqarah, Ayah ௧௩௨)

Abdul Hameed Baqavi:

அவ்வாறே இப்ராஹீம் தன்னுடைய சந்ததிகளுக்கும் உபதேசித்தார். யஃகூபும் (தன்னுடைய சந்ததிகளை நோக்கி) "என் சந்ததிகளே! உங்களுக்காக அல்லாஹ் இ(ஸ்லா)ம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்திருக்கின்றான். ஆதலால் நீங்கள் உண்மையான முஸ்லிம்களாக அன்றி இறந்துவிட வேண்டாம்" (என்றே கூறினார்). (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௩௨)

Jan Trust Foundation

இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்| “என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இப்ராஹீமும், யஅகூபும் அதையே தன் பிள்ளைகளுக்கு உபதேசித்தார்கள்: "என் பிள்ளைகளே! நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்காக (இஸ்லாம்) மார்க்கத்தை தேர்ந்தெடுத்தான். எனவே, நீங்கள் முஸ்லிம்களாக இருக்கவே தவிர கண்டிப்பாக நீங்கள் மரணித்து விடாதீர்கள்."