குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௨௮
Qur'an Surah Al-Baqarah Verse 128
ஸூரத்துல் பகரா [௨]: ௧௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَآ اُمَّةً مُّسْلِمَةً لَّكَۖ وَاَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ (البقرة : ٢)
- rabbanā
- رَبَّنَا
- Our Lord!
- இறைவா/எங்கள்
- wa-ij'ʿalnā
- وَٱجْعَلْنَا
- [and] Make us
- ஆக்கு/இன்னும் எங்களை
- mus'limayni
- مُسْلِمَيْنِ
- both submissive
- பணிபவர்களாக
- laka
- لَكَ
- to You
- உனக்கு
- wamin
- وَمِن
- And from
- இன்னும் இருந்து
- dhurriyyatinā
- ذُرِّيَّتِنَآ
- our offspring
- சந்ததி/எங்கள்
- ummatan
- أُمَّةً
- a community
- சமுதாயம்
- mus'limatan laka
- مُّسْلِمَةً لَّكَ
- submissive to You
- பணியக்கூடிய/உனக்கு
- wa-arinā
- وَأَرِنَا
- And show us
- இன்னும் காண்பித்துக் கொடு / எங்களுக்கு
- manāsikanā
- مَنَاسِكَنَا
- our ways of worship
- எங்கள் ஹஜ்ஜு கிரியைகளை
- watub ʿalaynā
- وَتُبْ عَلَيْنَآۖ
- and turn to us
- இன்னும் மன்னித்திடு/ எங்களை
- innaka anta
- إِنَّكَ أَنتَ
- Indeed You! [You] (are)
- நிச்சயமாக நீதான்
- l-tawābu
- ٱلتَّوَّابُ
- the Oft-returning
- தவ்பாவை அங்கீகரிப்பவன்
- l-raḥīmu
- ٱلرَّحِيمُ
- the Most Merciful
- பேரன்பாளன்
Transliteration:
Rabbanaa waj'alnaa muslimaini laka wa min zurriyyatinaaa ummatam muslimatal laka wa arinaa manaasikanaa wa tub 'alainaa innaka antat Tawwaabur Raheem(QS. al-Baq̈arah:128)
English Sahih International:
Our Lord, and make us Muslims [in submission] to You and from our descendants a Muslim nation [in submission] to You. And show us our rites [of worship] and accept our repentance. Indeed, You are the Accepting of Repentance, the Merciful. (QS. Al-Baqarah, Ayah ௧௨௮)
Abdul Hameed Baqavi:
எங்கள் இறைவனே! எங்களிருவரையும் உனக்கு (முற்றிலும்) வழிப்படும் முஸ்லிம்களாகவும், எங்களுடைய சந்ததியிலிருந்தும் ஒரு கூட்டத்தினரை உனக்கு (முற்றிலும்) வழிப்படும் முஸ்லிம்களாகவும் ஆக்கிவைப்பாயாக! ("ஹஜ்ஜு" காலத்தில்) நாங்கள் புரிய வேண்டிய வணக்கங்களையும் அறிவிப்பாயாக! (நாங்கள் தவறிழைத்து விட்டாலும்) எங்களை நீ மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றாய். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௨௮)
Jan Trust Foundation
“எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எங்கள் இறைவா! எங்களிருவரையும் உனக்குப் பணிபவர்களாகவும் (முஸ்லிம்களாகவும்), எங்கள் சந்ததியிலிருந்தும் உனக்குப் பணியக்கூடிய (முஸ்லிம்) சமுதாயத்தை ஆக்கு! எங்கள் ஹஜ் கிரியைகளை எங்களுக்குக் காண்பித்துக் கொடு! எங்களை மன்னித்திடு! நிச்சயமாக நீதான் தவ்பாவை அங்கீகரிப்பவன், பேரன்பாளன்.