Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௨௪

Qur'an Surah Al-Baqarah Verse 124

ஸூரத்துல் பகரா [௨]: ௧௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَاِذِ ابْتَلٰٓى اِبْرٰهٖمَ رَبُّهٗ بِكَلِمٰتٍ فَاَتَمَّهُنَّ ۗ قَالَ اِنِّيْ جَاعِلُكَ لِلنَّاسِ اِمَامًا ۗ قَالَ وَمِنْ ذُرِّيَّتِيْ ۗ قَالَ لَا يَنَالُ عَهْدِى الظّٰلِمِيْنَ (البقرة : ٢)

wa-idhi ib'talā
وَإِذِ ٱبْتَلَىٰٓ
And when tried
இன்னும் சமயம்/சோதித்தான்
ib'rāhīma
إِبْرَٰهِۦمَ
Ibrahim
இப்ராஹீமை
rabbuhu
رَبُّهُۥ
his Lord
அவருடைய இறைவன்
bikalimātin
بِكَلِمَٰتٍ
with words
கட்டளைகளைக் கொண்டு
fa-atammahunna
فَأَتَمَّهُنَّۖ
and he fulfilled them
ஆகவே நிறைவு செய்தார்/அவற்றை
qāla
قَالَ
He said
கூறினான்
innī
إِنِّى
"Indeed I
நிச்சயமாக நான்
jāʿiluka
جَاعِلُكَ
(am) the One to make you
ஆக்குகிறேன்/ உன்னை
lilnnāsi
لِلنَّاسِ
for the mankind
மனிதர்களுக்கு
imāman
إِمَامًاۖ
a leader"
தலைவராக
qāla
قَالَ
He said
கூறினார்
wamin
وَمِن
"And from
இன்னும் இருந்து
dhurriyyatī
ذُرِّيَّتِىۖ
my offspring?"
என் சந்ததிகள்
qāla
قَالَ
He said
கூறினான்
lā yanālu
لَا يَنَالُ
"(Does) not reach
அடையாது
ʿahdī
عَهْدِى
My Covenant
என் வாக்குறுதி
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
(to) the wrongdoers"
அநியாயக்காரர்களை

Transliteration:

Wa izib talaaa Ibraaheema Rabbuho bi Kalimaatin fa atammahunna qaala Innee jaa'iluka linnaasi Imaaman qaala wa min zurriyyatee qaala laa yanaalu 'ahdiz zaalimeen (QS. al-Baq̈arah:124)

English Sahih International:

And [mention, O Muhammad], when Abraham was tried by his Lord with words [i.e., commands] and he fulfilled them. [Allah] said, "Indeed, I will make you a leader for the people." [Abraham] said, "And of my descendants?" [Allah] said, "My covenant does not include the wrongdoers." (QS. Al-Baqarah, Ayah ௧௨௪)

Abdul Hameed Baqavi:

தவிர, இப்ராஹீமை அவருடைய இறைவன் (பெரும் சோதனையான) பல கட்டளைகளையிட்டு சோதித்த சமயத்தில் அவர் அவை யாவையும் நிறைவு செய்தார். (ஆதலால் இறைவன்) "நிச்சயமாக நான் உங்களை மனிதர்களுக்கு (நேர்வழி காட்டக் கூடிய) தலைவராக ஆக்கினேன்" எனக் கூறினான். அதற்கு (இப்ராஹீம்) "என்னுடைய சந்ததிகளையுமா (தலைவர்களாக ஆக்குவாய்?)" எனக் கேட்டார். (அதற்கு "உங்கள் சந்ததியிலுள்ள) அநியாயக்காரரை என்னுடைய (இந்த) உறுதிமொழி சாராது" எனக் கூறினான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௨௪)

Jan Trust Foundation

(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இப்ராஹீமை அவருடைய இறைவன் (பல) கட்டளைகளைக் கொண்டு சோதித்த சமயத்தை நினைவு கூருங்கள். ஆகவே அவற்றை (அவர்) நிறைவு செய்தார். "நிச்சயமாக நான் உம்மை மனிதர்களுக்கு (நேர்வழி காட்டுகிற) தலைவராக ஆக்குகிறேன்" எனக் கூறினான். என் சந்ததிகளிலிருந்தும் (ஆக்கு) என (இப்ராஹீம்) கூறினார். "அநியாயக்காரர்களை என் (இந்த) வாக்குறுதி அடையாது" என (அல்லாஹ்) கூறினான்.