Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௧௯

Qur'an Surah Al-Baqarah Verse 119

ஸூரத்துல் பகரா [௨]: ௧௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّآ اَرْسَلْنٰكَ بِالْحَقِّ بَشِيْرًا وَّنَذِيْرًاۙ وَّلَا تُسْـَٔلُ عَنْ اَصْحٰبِ الْجَحِيْمِ (البقرة : ٢)

innā
إِنَّآ
Indeed We!
நிச்சயமாக நாம்
arsalnāka
أَرْسَلْنَٰكَ
[We] have sent you
அனுப்பினோம்/ உம்மை
bil-ḥaqi
بِٱلْحَقِّ
with the truth
உண்மையைக் கொண்டு
bashīran
بَشِيرًا
(as) a bearer of good news
நற்செய்தி கூறுபவராக
wanadhīran
وَنَذِيرًاۖ
and (as) a warner
இன்னும் எச்சரிப்பவராக
walā tus'alu
وَلَا تُسْـَٔلُ
And not you will be asked
இன்னும் விசாரிக்கப்பட மாட்டீர்
ʿan
عَنْ
about
பற்றி
aṣḥābi l-jaḥīmi
أَصْحَٰبِ ٱلْجَحِيمِ
(the) companions (of) the blazing Fire
நரகவாசிகள்

Transliteration:

Innaaa arsalnaaka bilhaqqi basheeranw wa nazeeranw wa laa tus'alu 'am Ashaabil Jaheem (QS. al-Baq̈arah:119)

English Sahih International:

Indeed, We have sent you, [O Muhammad], with the truth as a bringer of good tidings and a warner, and you will not be asked about the companions of Hellfire. (QS. Al-Baqarah, Ayah ௧௧௯)

Abdul Hameed Baqavi:

(நபியே! நன்மை செய்பவர்களுக்கு) இவ்வேதத்தின் மூலம் நீங்கள் நற்செய்தி கூறுபவராகவும், (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் (மட்டுமே) நாம் உங்களை அனுப்பி வைத்திருக்கிறோம். ஆகவே (அவர்கள் உங்களுடைய சொல்லை நிராகரித்து நரகம் சென்றால், அந்)நரகவாசிகளைப் பற்றி உங்களிடம் கேட்கப்பட மாட்டாது. (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௧௯)

Jan Trust Foundation

(நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) நிச்சயமாக நாம் உம்மை நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும் உண்மையைக் கொண்டு அனுப்பினோம். நரகவாசிகளைப் பற்றி (நீர்) விசாரிக்கப்பட மாட்டீர்.