Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௧௧

Qur'an Surah Al-Baqarah Verse 111

ஸூரத்துல் பகரா [௨]: ௧௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالُوْا لَنْ يَّدْخُلَ الْجَنَّةَ اِلَّا مَنْ كَانَ هُوْدًا اَوْ نَصٰرٰى ۗ تِلْكَ اَمَانِيُّهُمْ ۗ قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ (البقرة : ٢)

waqālū
وَقَالُوا۟
And they said
கூறினார்கள்
lan yadkhula
لَن يَدْخُلَ
"Never will enter
நுழையவே மாட்டார்
l-janata
ٱلْجَنَّةَ
the Paradise
சொர்க்கத்தில்
illā man
إِلَّا مَن
except who
தவிர/எவர்(கள்)
kāna
كَانَ
is
இருக்கிறார்(கள்)
hūdan
هُودًا
(a) Jew[s]
யூதர்களாக
aw
أَوْ
or
அல்லது
naṣārā
نَصَٰرَىٰۗ
(a) Christian[s]"
கிறித்துவர்களாக
til'ka
تِلْكَ
That
அவை
amāniyyuhum
أَمَانِيُّهُمْۗ
(is) their wishful thinking
வீண் நம்பிக்கைகள்/அவர்களுடைய
qul
قُلْ
Say
கூறுவீராக
hātū
هَاتُوا۟
"Bring
கொண்டு வாருங்கள்
bur'hānakum
بُرْهَٰنَكُمْ
your proof
ஆதாரத்தை/உங்கள்
in kuntum
إِن كُنتُمْ
if you are
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
[those who are] truthful"
உண்மையாளர்களாக

Transliteration:

Wa qaaloo lai yadkhulal jannata illaa man kaana Hoodan aw Nasaaraa; tilka ammniyyuhum; qul haatoo burhaa nakum in kuntum saadiqeen (QS. al-Baq̈arah:111)

English Sahih International:

And they say, "None will enter Paradise except one who is a Jew or a Christian." That is [merely] their wishful thinking. Say, "Produce your proof, if you should be truthful." (QS. Al-Baqarah, Ayah ௧௧௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) கிறிஸ்தவராகவோ யூதராகவோ இருப்பவரைத் தவிர (மற்ற எவரும்) சுவர்க்கம் நுழையவே மாட்டார்கள் என அவ(ரவ)ர்கள் கூறுகிறார்கள். இது அவர்களுடைய வீண் நம்பிக்கையே(யன்றி உண்மையல்ல. ஆதலால் அவர்களை நோக்கி நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் உங்களுடைய (இவ்வார்த்தைக்குரிய) ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்." (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௧௧)

Jan Trust Foundation

“யூதர்கள், கிறிஸ்தவர்களைத் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள்; இது அவர்களின் வீணாசையேயாகும்; “நீங்கள் உண்மையுடையோராக இருந்தால் உங்களுடைய சான்றை சமர்ப்பியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

யூதர்களாக, அல்லது கிறித்துவர்களாக இருக்கிறவர்களைத் தவிர (மற்ற எவரும்) சொர்க்கத்தில் நுழையவே மாட்டார் என (அவர்கள்) கூறினார்கள். அவை அவர்களுடைய வீண் நம்பிக்கைகளாகும்! (நபியே) கூறுவீராக! "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் ஆதாரத்தைக் கொண்டுவாருங்கள்.