குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௦௪
Qur'an Surah Al-Baqarah Verse 104
ஸூரத்துல் பகரா [௨]: ௧௦௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقُوْلُوْا رَاعِنَا وَقُوْلُوا انْظُرْنَا وَاسْمَعُوْا وَلِلْكٰفِرِيْنَ عَذَابٌ اَلِيْمٌ (البقرة : ٢)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- O you who believe[d]!
- நம்பிக்கையாளர்களே!
- lā taqūlū
- لَا تَقُولُوا۟
- "(Do) not say
- கூறாதீர்கள்
- rāʿinā
- رَٰعِنَا
- "Raina"
- ராஇனா
- waqūlū
- وَقُولُوا۟
- and say
- இன்னும் கூறுங்கள்
- unẓur'nā
- ٱنظُرْنَا
- "Unzurna"
- உன்ளுர்னா (பாருங்கள்/எங்களை)
- wa-is'maʿū
- وَٱسْمَعُوا۟ۗ
- and listen
- இன்னும் செவிமடுங்கள்
- walil'kāfirīna
- وَلِلْكَٰفِرِينَ
- And for the disbelievers
- நிராகரிப்பாளர்களுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- (is) a punishment
- வேதனை
- alīmun
- أَلِيمٌ
- painful
- துன்புறுத்தக் கூடியது
Transliteration:
Yaaa ayyuhal lazeena aamanoo laa taqooloo raa'inaa wa qoolun zurnaa wasma'oo; wa lilkaafireena 'azaabun aleem(QS. al-Baq̈arah:104)
English Sahih International:
O you who have believed, say not [to Allah's Messenger], "Ra’ina" but say, "Unzurna" and listen. And for the disbelievers is a painful punishment. (QS. Al-Baqarah, Ayah ௧௦௪)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (நபியை நோக்கி) "ராயினா" எனக் கூறாதீர்கள். (அதற்குப் பதிலாக "எங்களைப் பாருங்கள்!" என்ற பொருளைத் தரும்) "உன்ளுர்னா" எனக் கூறுங்கள். (மேலும் நபி கூறுவதை முழுமையாக) செவிமடுங்கள். (இதற்கு மாறாகக் கூறும்) நிராகரிப்பவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௦௪)
Jan Trust Foundation
ஈமான் கொண்டோரே! நீங்கள் (நம் ரஸூலைப் பார்த்து இரண்டு அர்த்தம் கொடுக்கும் சொல்லாகிய) “ராயினா” என்று சொல்லாதீர்கள். (இதற்குப் பதிலாக அன்புடன் நோக்குவீர்களாக என்னும் பொருளைத் தரும் சொல்லாகிய) “உன்ளுர்னா” என்று கூறுங்கள். இன்னும், அவர் சொல்வதைக் கேளுங்கள். மேலும் காஃபிர்களுக்குத் துன்பம் தரும் வேதனையும் உண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (நபியை நோக்கி) "ராஇனா' என்று கூறாதீர்கள். "உன்ளுர்னா' என்று கூறுங்கள். (நபியின் கூற்றை முழுமையாகச்) செவிமடுங்கள். நிராகரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தக்கூடிய வேதனை உண்டு.