Skip to content

ஸூரா ஸூரத்து இப்ராஹீம் - Page: 3

Ibrahim

(ʾIbrāhīm)

௨௧

وَبَرَزُوْا لِلّٰهِ جَمِيْعًا فَقَالَ الضُّعَفٰۤؤُا لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْٓا اِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَ عَنَّا مِنْ عَذَابِ اللّٰهِ مِنْ شَيْءٍ ۗقَالُوْا لَوْ هَدٰىنَا اللّٰهُ لَهَدَيْنٰكُمْۗ سَوَاۤءٌ عَلَيْنَآ اَجَزِعْنَآ اَمْ صَبَرْنَا مَا لَنَا مِنْ مَّحِيْصٍ ࣖ ٢١

wabarazū
وَبَرَزُوا۟
வெளிப்படுவார்கள்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கு முன்
jamīʿan
جَمِيعًا
அனைவரும்
faqāla
فَقَالَ
கூறுவார்(கள்)
l-ḍuʿafāu
ٱلضُّعَفَٰٓؤُا۟
பலவீனர்கள்
lilladhīna
لِلَّذِينَ
எவர்களுக்கு
is'takbarū
ٱسْتَكْبَرُوٓا۟
பெருமையடித்தனர்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
kunnā
كُنَّا
இருந்தோம்
lakum
لَكُمْ
உங்களை
tabaʿan
تَبَعًا
பின்பற்றுபவர்களாக
fahal antum
فَهَلْ أَنتُم
ஆகவே ?/நீங்கள்
mugh'nūna
مُّغْنُونَ
தடுப்பீர்கள்
ʿannā
عَنَّا
எங்களை விட்டு
min ʿadhābi
مِنْ عَذَابِ
வேதனையிலிருந்து
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
min shayin
مِن شَىْءٍۚ
எதையும்
qālū
قَالُوا۟
கூறினர்
law hadānā
لَوْ هَدَىٰنَا
வழிகாட்டினால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lahadaynākum
لَهَدَيْنَٰكُمْۖ
வழிகாட்டுவோம் உங்களுக்கு
sawāon
سَوَآءٌ
சமமே
ʿalaynā
عَلَيْنَآ
நம் மீது
ajaziʿ'nā
أَجَزِعْنَآ
நாம் பதட்டப்பட்டால் என்ன?
am
أَمْ
அல்லது
ṣabarnā
صَبَرْنَا
சகித்தோம்
mā lanā
مَا لَنَا
இல்லை/நமக்கு
min
مِن
அறவே
maḥīṣin
مَّحِيصٍ
தப்புமிடம்
(மறுமையில் பாவிகள்) அனைவரும் வெளிப்பட்டு அல்லாஹ்வின் முன் நிற்கும் சமயத்தில் (இவ்வுலகில்) பலவீன மானவர்கள் என்று கருதப்பட்டவர்கள், (பலசாளிகளென) பெருமை யடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி "நிச்சயமாக நாங்கள் உங்களையே பின்பற்றி நடந்தோம். ஆகவே, அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து ஒரு சிறிதளவேனும் எங்களுக்கு நீங்கள் தடுத்து விட வேண்டாமா?" என்று கூறுவார்கள். அதற்கு அவர்கள் (வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள) அல்லாஹ் எங்களுக்கு யாதொரு வழி வைத்திருந்தால் (அதனை) நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம். (தப்ப வழி இல்லை. எங்கள் வேதனையைப் பற்றி) நாங்கள் பதைபதைத்துத் துடிதுடிப்பதும் அல்லது (அதனைச்) சகித்துக் கொண்டு பொறுத்திருப்பதும் ஒன்றாகவே இருக்கின்றது. (இவ்வேதனையிலிருந்து) தப்ப எங்களுக்கு யாதொரு வழியும் இல்லையே!" என்று புலம்புவார்கள். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௨௧)
Tafseer
௨௨

وَقَالَ الشَّيْطٰنُ لَمَّا قُضِيَ الْاَمْرُ اِنَّ اللّٰهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَقِّ وَوَعَدْتُّكُمْ فَاَخْلَفْتُكُمْۗ وَمَا كَانَ لِيَ عَلَيْكُمْ مِّنْ سُلْطٰنٍ اِلَّآ اَنْ دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِيْ ۚفَلَا تَلُوْمُوْنِيْ وَلُوْمُوْٓا اَنْفُسَكُمْۗ مَآ اَنَا۠ بِمُصْرِخِكُمْ وَمَآ اَنْتُمْ بِمُصْرِخِيَّۗ اِنِّيْ كَفَرْتُ بِمَآ اَشْرَكْتُمُوْنِ مِنْ قَبْلُ ۗاِنَّ الظّٰلِمِيْنَ لَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ٢٢

waqāla
وَقَالَ
கூறுவான்
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
lammā quḍiya
لَمَّا قُضِىَ
முடிக்கப்பட்டபோது
l-amru
ٱلْأَمْرُ
காரியம்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
waʿadakum
وَعَدَكُمْ
வாக்களித்தான் உங்களுக்கு
waʿda l-ḥaqi
وَعْدَ ٱلْحَقِّ
வாக்கை/ உண்மையானது
wawaʿadttukum
وَوَعَدتُّكُمْ
நான் வாக்களித்தேன்/உங்களுக்கு
fa-akhlaftukum
فَأَخْلَفْتُكُمْۖ
நான் வஞ்சித்தேன்/உங்களை
wamā kāna
وَمَا كَانَ
இல்லை
liya
لِىَ
எனக்கு
ʿalaykum min
عَلَيْكُم مِّن
அறவே/உங்கள் மீது
sul'ṭānin
سُلْطَٰنٍ
அதிகாரம்
illā an daʿawtukum
إِلَّآ أَن دَعَوْتُكُمْ
எனினும்/உங்களை அழைத்தேன்
fa-is'tajabtum
فَٱسْتَجَبْتُمْ
பதில் தந்தீர்கள்
لِىۖ
எனக்கு
falā talūmūnī
فَلَا تَلُومُونِى
ஆகவே, என்னை நிந்திக்காதீர்கள்
walūmū
وَلُومُوٓا۟
நிந்தியுங்கள்
anfusakum
أَنفُسَكُمۖ
உங்களையே
mā anā
مَّآ أَنَا۠
நான் இல்லை
bimuṣ'rikhikum
بِمُصْرِخِكُمْ
உங்களுக்கு உதவுபவனாக
wamā antum
وَمَآ أَنتُم
இல்லை/நீங்கள்
bimuṣ'rikhiyya
بِمُصْرِخِىَّۖ
உதவுபவர்களாக/எனக்கு
innī
إِنِّى
நிச்சயமாக நான்
kafartu
كَفَرْتُ
நிராகரித்தேன்
bimā ashraktumūni
بِمَآ أَشْرَكْتُمُونِ
நீங்கள் இணை ஆக்கியதை/ என்னை
min qablu
مِن قَبْلُۗ
முன்னரே
inna
إِنَّ
நிச்சயமாக
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அணியாயக்காரர்கள்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
alīmun
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது
(இக்குற்றவாளிகளைப் பற்றி) தீர்ப்புக் கூறப்பட்டதும் பின்னர், ஷைத்தான் (இவர்களை நோக்கி) "நிச்சயமாக அல்லாஹ் (இவ்வேதனைத் தருவதாக) உங்களுக்கு மெய்யாகவே வாக்களித்திருந்தான். (அவ்வாறே கொடுத்தும் விட்டான்.) நானும் உங்களுக்கு (ப் பொய்யாக) வாக்களித்தேன்; எனினும், நான் உங்களை வஞ்சித்து விட்டேன்; "நான் உங்களை அழைத்தேன்; நீங்கள் என்னைப் பின்பற்றினீர்கள்" என்பதைத் தவிர, உங்களை நான் நிர்ப்பந்திப்பதற்கு எனக்கு யாதொரு அதிகாரமும் இல்லாமலே இருந்தது. ஆதலால், நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள்; உங்களை நீங்கள் நிந்தித்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு யாதொரு உதவியும் செய்ய முடியாது. நீங்களும் எனக்கு யாதொரு உதவியும் செய்ய முடியாது. இதற்கு முன்னர் நீங்கள் என்னை (அல்லாஹ்வுக்கு) இணை ஆக்கிக் கொண்டிருந்ததையும் நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன். நிச்சயமாக (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு என்று கூறுவான். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௨௨)
Tafseer
௨௩

وَاُدْخِلَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْۗ تَحِيَّتُهُمْ فِيْهَا سَلٰمٌ ٢٣

wa-ud'khila
وَأُدْخِلَ
புகுத்தப்படுவார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தனர்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
jannātin
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்களாக
fīhā
فِيهَا
அதில்
bi-idh'ni
بِإِذْنِ
அனுமதிப்படி
rabbihim
رَبِّهِمْۖ
தங்கள் இறைவன்
taḥiyyatuhum
تَحِيَّتُهُمْ
அவர்களின் முகமன்
fīhā
فِيهَا
அதில்
salāmun
سَلَٰمٌ
ஸலாம்
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ அவர்கள் சுவனபதிகளில் புகுத்தப்படுவார்கள். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். தங்கள் இறைவனின் கட்டளைப்படி அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். அவர்களில் (ஒருவர் மற்றொருவரை நோக்கி "உங்களுக்கு தொடர்ந்து) ஈடேற்றம் உண்டாவதாகுக!" என்று முகமன் கூறுவார்கள். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௨௩)
Tafseer
௨௪

اَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللّٰهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ اَصْلُهَا ثَابِتٌ وَّفَرْعُهَا فِى السَّمَاۤءِۙ ٢٤

alam tara
أَلَمْ تَرَ
நீர் கவனிக்கவில்லையா?
kayfa
كَيْفَ
எவ்வாறு?
ḍaraba
ضَرَبَ
விவரித்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mathalan
مَثَلًا
ஓர் உதாரணத்தை
kalimatan
كَلِمَةً
ஒரு வாக்கியத்திற்கு
ṭayyibatan
طَيِّبَةً
நல்லது
kashajaratin
كَشَجَرَةٍ
ஒரு மரத்திற்கு ஒப்பாக
ṭayyibatin aṣluhā
طَيِّبَةٍ أَصْلُهَا
நல்லது/அதன் வேர்
thābitun
ثَابِتٌ
உறுதியானது
wafarʿuhā
وَفَرْعُهَا
இன்னும் அதன் கிளை
fī l-samāi
فِى ٱلسَّمَآءِ
வானத்தில்
(நபியே! "தவ்ஹீத் கலிமா" என்னும்) நல்ல வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு (மிக்க மேலான) உதாரணத்தைக் கூறுகிறான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? (அவ்வாக்கியம்) வானளாவிய கிளைகளையும் (பூமியில்) ஆழப்பாய்ந்த வேரையும் உடைய ஒரு நல்ல மரத்திற்கு ஒப்பாக இருக்கிறது. ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௨௪)
Tafseer
௨௫

تُؤْتِيْٓ اُكُلَهَا كُلَّ حِيْنٍ ۢبِاِذْنِ رَبِّهَاۗ وَيَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ ٢٥

tu'tī
تُؤْتِىٓ
கொடுக்கிறது
ukulahā
أُكُلَهَا
தன் கனிகளை
kulla ḥīnin
كُلَّ حِينٍۭ
எல்லாக் காலத்திலும்
bi-idh'ni
بِإِذْنِ
அனுமதி கொண்டு
rabbihā
رَبِّهَاۗ
தன் இறைவனின்
wayaḍribu
وَيَضْرِبُ
இன்னும் விவரிக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-amthāla
ٱلْأَمْثَالَ
உதாரணங்களை
lilnnāsi
لِلنَّاسِ
மனிதர்களுக்கு
laʿallahum yatadhakkarūna
لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
அது (பருவ காலத்தில் மட்டுமன்றி இறைவனின் அருளைக் கொண்டு எக்காலத்திலும் கனிகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு, அவர்களுக்கு (இதனை) அல்லாஹ் உதாரணம் ஆக்குகிறான். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௨௫)
Tafseer
௨௬

وَمَثَلُ كَلِمَةٍ خَبِيْثَةٍ كَشَجَرَةٍ خَبِيْثَةِ ِۨاجْتُثَّتْ مِنْ فَوْقِ الْاَرْضِ مَا لَهَا مِنْ قَرَارٍ ٢٦

wamathalu
وَمَثَلُ
இன்னும் உதாரணம்
kalimatin
كَلِمَةٍ
வாசகத்திற்கு
khabīthatin
خَبِيثَةٍ
கெட்டது
kashajaratin
كَشَجَرَةٍ
மரத்திற்கு ஒப்பாகும்
khabīthatin
خَبِيثَةٍ
கெட்டது
uj'tuthat
ٱجْتُثَّتْ
அறுபட்டது
min
مِن
இருந்து
fawqi
فَوْقِ
மேல்
l-arḍi
ٱلْأَرْضِ
பூமியின்
mā lahā
مَا لَهَا
இல்லை/அதற்கு
min
مِن
அறவே
qarārin
قَرَارٍ
எந்த உறுதி
(நிராகரிப்பவர்களின் குஃப்ரு, ஷிர்க்கான) கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம்: பூமியில் இருந்த வேர்கள் அறுபட்டு (உறுதியின்றி) நிற்கும் (பட்டுப்போன ஒரு) கெட்ட மரத்திற்கு ஒப்பாகும்; அது நிலைத்திருக்காது. ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௨௬)
Tafseer
௨௭

يُثَبِّتُ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا بِالْقَوْلِ الثَّابِتِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِۚ وَيُضِلُّ اللّٰهُ الظّٰلِمِيْنَۗ وَيَفْعَلُ اللّٰهُ مَا يَشَاۤءُ ࣖ ٢٧

yuthabbitu
يُثَبِّتُ
உறுதிப்படுத்துகிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
alladhīna
ٱلَّذِينَ
எவர்களை
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
bil-qawli
بِٱلْقَوْلِ
சொல்லைக் கொண்டு
l-thābiti
ٱلثَّابِتِ
உறுதியானது
fī l-ḥayati
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்வில்
l-dun'yā
ٱلدُّنْيَا
உலக(ம்)
wafī l-ākhirati
وَفِى ٱلْءَاخِرَةِۖ
இன்னும் மறுமையில்
wayuḍillu
وَيُضِلُّ
வழிகெடுக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَۚ
அநியாயக்காரர்கள்
wayafʿalu
وَيَفْعَلُ
இன்னும் செய்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mā yashāu
مَا يَشَآءُ
தான் நாடுவதை
மெய்யாகவே எவர்கள் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை மறுமையிலும், இம்மையிலும் ("கலிமா தையிப்" என்னும்) உறுதிமிக்க இந்த வார்த்தையைக் கொண்டு அல்லாஹ் அவர்களை உறுதிப்படுத்துகிறான். அநியாயக்காரர்களை (அவர்களுடைய பாவத்தின் காரணமாக) தவறான வழியில் அல்லாஹ் விட்டு விடுகிறான்; அல்லாஹ் நாடியதைச் செய்கிறான். (அதனைத் தடை செய்ய எவராலும் முடியாது.) ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௨௭)
Tafseer
௨௮

۞ اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ بَدَّلُوْا نِعْمَتَ اللّٰهِ كُفْرًا وَّاَحَلُّوْا قَوْمَهُمْ دَارَ الْبَوَارِۙ ٢٨

alam tara
أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
ilā
إِلَى
பக்கம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
baddalū
بَدَّلُوا۟
மாற்றினார்கள்
niʿ'mata
نِعْمَتَ
அருளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
kuf'ran
كُفْرًا
நிராகரிப்பால்
wa-aḥallū
وَأَحَلُّوا۟
இன்னும் தங்க வைத்தார்கள்
qawmahum
قَوْمَهُمْ
தங்கள் சமுதாயத்தை
dāra l-bawāri
دَارَ ٱلْبَوَارِ
அழிவு இல்லத்தில்
(நபியே!) அல்லாஹ்வின் அருளை நிராகரிப்பைக் கொண்டு மாற்றி, தங்கள் மக்களையும் அழிவுக்கிடங்கில் இறக்கி விட்டவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௨௮)
Tafseer
௨௯

جَهَنَّمَ ۚيَصْلَوْنَهَاۗ وَبِئْسَ الْقَرَارُ ٢٩

jahannama yaṣlawnahā
جَهَنَّمَ يَصْلَوْنَهَاۖ
நரகம்/ அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள்
wabi'sa
وَبِئْسَ
மிகக் கெட்டது
l-qarāru
ٱلْقَرَارُ
தங்குமிடத்தால்
அவர்கள் நரகத்தைத்தான் வந்தடைவார்கள்; அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது. ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௨௯)
Tafseer
௩௦

وَجَعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا لِّيُضِلُّوْا عَنْ سَبِيْلِهٖۗ قُلْ تَمَتَّعُوْا فَاِنَّ مَصِيْرَكُمْ اِلَى النَّارِ ٣٠

wajaʿalū
وَجَعَلُوا۟
இன்னும் ஏற்படுத்தினர்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
andādan
أَندَادًا
இணைகளை
liyuḍillū
لِّيُضِلُّوا۟
அவர்கள் வழிகெடுப்பதற்காக
ʿan sabīlihi
عَن سَبِيلِهِۦۗ
அவனுடைய பாதையிலிருந்து
qul
قُلْ
கூறுவீராக
tamattaʿū
تَمَتَّعُوا۟
சுகமனுபவியுங்கள்
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
maṣīrakum
مَصِيرَكُمْ
உங்கள் மீட்சி
ilā
إِلَى
பக்கம்
l-nāri
ٱلنَّارِ
நரகத்தின்
அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) திருப்பி விடும் பொருட்டு (பல பொய்த் தெய்வங்களை) அவனுக்கு இணையாக்குகின்றனர். (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "(இவ்வுலகில் சிறிது காலம்) நீங்கள் சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். (முடிவில்) நிச்சயமாக நீங்கள் சேருமிடம் நரகம்தான். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௩௦)
Tafseer