குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௧௬
Qur'an Surah Yunus Verse 16
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ لَّوْ شَاۤءَ اللّٰهُ مَا تَلَوْتُهٗ عَلَيْكُمْ وَلَآ اَدْرٰىكُمْ بِهٖ ۖفَقَدْ لَبِثْتُ فِيْكُمْ عُمُرًا مِّنْ قَبْلِهٖۗ اَفَلَا تَعْقِلُوْنَ (يونس : ١٠)
- qul
- قُل
- Say
- கூறுவீராக
- law shāa
- لَّوْ شَآءَ
- "If (had) willed
- நாடியிருந்தால்
- l-lahu mā talawtuhu
- ٱللَّهُ مَا تَلَوْتُهُۥ
- Allah not I (would) have recited it
- அல்லாஹ்/நான் ஓதியிருக்கவும் மாட்டேன் /இதை
- ʿalaykum
- عَلَيْكُمْ
- to you
- உங்கள் மீது
- walā adrākum
- وَلَآ أَدْرَىٰكُم
- and not He (would) have made it known to you
- இன்னும் அவன் அறிவித்திருக்கவும் மாட்டான்/உங்களுக்கு
- bihi
- بِهِۦۖ
- He (would) have made it known to you
- இதை
- faqad labith'tu
- فَقَدْ لَبِثْتُ
- Verily I have stayed
- திட்டமாக வசித்துள்ளேன்
- fīkum
- فِيكُمْ
- among you
- உங்களுடன்
- ʿumuran
- عُمُرًا
- a lifetime
- ஒரு (நீண்ட) காலம்
- min qablihi
- مِّن قَبْلِهِۦٓۚ
- before it before it
- இதற்கு முன்னர்
- afalā taʿqilūna
- أَفَلَا تَعْقِلُونَ
- Then will not you use reason?"
- நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
Transliteration:
Qul law shaaa'al laahu maa talawtuhoo 'alaikum wa laaa adraakum bihee faqad labistu feekum 'umuram min qablih; afalaa ta'qiloon(QS. al-Yūnus:16)
English Sahih International:
Say, "If Allah had willed, I would not have recited it to you, nor would He have made it known to you, for I had remained among you a lifetime before it. Then will you not reason?" (QS. Yunus, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "(உங்களுக்கு நான் இதனை ஓதிக் காண்பிக்கக் கூடாதென்று) அல்லாஹ் எண்ணியிருந்தால், நான் இதனை உங்களுக்கு ஓதிக் காண்பித்திருக்கவும் மாட்டேன். அவன் உங்களுக்கு இதனை அறிவித்திருக்கவும் மாட்டான். நிச்சயமாக நான் இதற்கு முன்னரும் நீண்ட காலம் உங்களுடன் வசித்துள்ளேன் (அல்லவா? நான் பொய் சொல்பவன் அல்ல என்பதை நீங்கள் நன்கறிந்திருக்கிறீர்கள். இவ்வளவு கூட) நீங்கள் அறிந்துகொள்ள முடியாதா? (ஸூரத்து யூனுஸ், வசனம் ௧௬)
Jan Trust Foundation
“(இதை நான் உங்களுக்கு ஓதிக் காட்டக்கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால், இதனை நான் உங்களிடம் ஓதிக் காண்பித்திருக்க மாட்டேன்; மேலும் அதைப் பற்றி உங்களுக்கு அவன் அறிவித்திருக்கமாட்டான்; நிச்சயமாக நான் இதற்கு முன்னர் உங்களிடையே நீண்ட காலம் வசித்திருக்கிறேன் - இதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா?” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(மேலும்) கூறுவீராக! “அல்லாஹ் நாடியிருந்தால், நான் இதை உங்கள் மீது ஓதியிருக்கவும் மாட்டேன்; இன்னும் அவன் உங்களுக்கு இதை அறிவித்திருக்கவும் மாட்டான். இதற்கு முன்னர் ஒரு (நீண்ட) காலம் உங்களுடன் வசித்துள்ளேன். நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?”