Skip to content

ஸூரா ஸூரத்து யூனுஸ் - Page: 5

Yunus

(al-Yūnus)

௪௧

وَاِنْ كَذَّبُوْكَ فَقُلْ لِّيْ عَمَلِيْ وَلَكُمْ عَمَلُكُمْۚ اَنْتُمْ بَرِيْۤـُٔوْنَ مِمَّآ اَعْمَلُ وَاَنَا۠ بَرِيْۤءٌ مِّمَّا تَعْمَلُوْنَ ٤١

wa-in kadhabūka
وَإِن كَذَّبُوكَ
அவர்கள் உம்மை பொய்ப்பித்தால்
faqul
فَقُل
கூறுவீராக
لِّى
எனக்கு
ʿamalī
عَمَلِى
என் செயல்
walakum
وَلَكُمْ
இன்னும் உங்களுக்கு
ʿamalukum
عَمَلُكُمْۖ
உங்கள் செயல்
antum
أَنتُم
நீங்கள்
barīūna
بَرِيٓـُٔونَ
நீங்கியவர்கள்
mimmā
مِمَّآ
எதிலிருந்து
aʿmalu
أَعْمَلُ
செய்கிறேன்
wa-anā
وَأَنَا۠
இன்னும் நான்
barīon
بَرِىٓءٌ
நீங்கியவன்
mimmā
مِّمَّا
எதிலிருந்து
taʿmalūna
تَعْمَلُونَ
நீங்கள் செய்கிறீர்கள்
(நபியே!) உங்களை பொய்யரென அவர்கள் கூறினால் (நீங்கள் அவர்களை நோக்கி "நன்மையோ தீமையோ) என் செய்கை(யின் பலன்) எனக்குரியது; (அவ்வாறே) உங்கள் செய்கை(யின் பலன்) உங்களுக்குரியது. என் செய்கையி(ன் பலனி)லிருந்து நீங்கள் விடுபட்டவர்கள்; உங்கள் செய்கையி(ன் பலனி)லிருந்து நான் விடுபட்டவன்" என்று கூறுங்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௪௧)
Tafseer
௪௨

وَمِنْهُمْ مَّنْ يَّسْتَمِعُوْنَ اِلَيْكَۗ اَفَاَنْتَ تُسْمِعُ الصُّمَّ وَلَوْ كَانُوْا لَا يَعْقِلُوْنَ ٤٢

wamin'hum
وَمِنْهُم
அவர்களில்
man
مَّن
எவர்
yastamiʿūna
يَسْتَمِعُونَ
செவிமடுக்கிறார்கள்
ilayka
إِلَيْكَۚ
உம் பக்கம்
afa-anta tus'miʿu
أَفَأَنتَ تُسْمِعُ
நீர் கேட்கவைப்பீரா?
l-ṣuma
ٱلصُّمَّ
செவிடர்களை
walaw kānū
وَلَوْ كَانُوا۟
அவர்கள்இருந்தாலும்
lā yaʿqilūna
لَا يَعْقِلُونَ
சிந்தித்து புரிய மாட்டார்கள்
அவர்களில், உங்களுடைய வார்த்தையைக் கேட்போ(ரைப் போல் பாவனை செய்வோ)ரும் இருக்கின்றனர். (அதனால் அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டார்கள் என்று நீங்கள் எண்ணிவிட்டீர்களா?) ஒன்றையுமே (செவியுற்று) அறிந்துகொள்ள முடியாத முழுச் செவிடர்களை செவி கேட்கும்படிச் செய்ய உங்களால் முடியுமா? ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௪௨)
Tafseer
௪௩

وَمِنْهُمْ مَّنْ يَّنْظُرُ اِلَيْكَۗ اَفَاَنْتَ تَهْدِى الْعُمْيَ وَلَوْ كَانُوْا لَا يُبْصِرُوْنَ ٤٣

wamin'hum
وَمِنْهُم
இன்னும் அவர்களில்
man yanẓuru
مَّن يَنظُرُ
எவர்/பார்க்கிறார்
ilayka
إِلَيْكَۚ
உம் பக்கம்
afa-anta
أَفَأَنتَ
நீர்
tahdī
تَهْدِى
நேர்வழிசெலுத்துவீரா?
l-ʿum'ya
ٱلْعُمْىَ
குருடர்களை
walaw kānū lā yub'ṣirūna
وَلَوْ كَانُوا۟ لَا يُبْصِرُونَ
அவர்கள் இருந்தாலும்/பார்க்க மாட்டார்கள்
உங்களைப் பார்ப்பவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். (அதனால் அவர்கள் உங்களை அறிந்து கொண்டார்கள் என எண்ணி விட்டீர்களா?) யாதொன்றையும் பார்க்க முடியாத பிறவிக் குருடர்களைப் பார்க்கும்படிச் செய்ய உங்களால் முடியுமா? ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௪௩)
Tafseer
௪௪

اِنَّ اللّٰهَ لَا يَظْلِمُ النَّاسَ شَيْـًٔا وَّلٰكِنَّ النَّاسَ اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ ٤٤

inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
lā yaẓlimu
لَا يَظْلِمُ
அநீதியிழைக்க மாட்டான்
l-nāsa
ٱلنَّاسَ
மனிதர்களுக்கு
shayan
شَيْـًٔا
ஒரு சிறிதும்
walākinna
وَلَٰكِنَّ
எனினும்
l-nāsa
ٱلنَّاسَ
மனிதர்கள்
anfusahum
أَنفُسَهُمْ
தங்களுக்கே
yaẓlimūna
يَظْلِمُونَ
அநீதியிழைக்கின்றனர்
நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு அறவே தீங்கிழைப்பது இல்லை. எனினும், மனிதர்கள் (தீய செயல்களைச் செய்து) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௪௪)
Tafseer
௪௫

وَيَوْمَ يَحْشُرُهُمْ كَاَنْ لَّمْ يَلْبَثُوْٓا اِلَّا سَاعَةً مِّنَ النَّهَارِ يَتَعَارَفُوْنَ بَيْنَهُمْۗ قَدْ خَسِرَ الَّذِيْنَ كَذَّبُوْا بِلِقَاۤءِ اللّٰهِ وَمَا كَانُوْا مُهْتَدِيْنَ ٤٥

wayawma
وَيَوْمَ
நாளில்
yaḥshuruhum
يَحْشُرُهُمْ
ஒன்று சேர்ப்பான் அவர்களை
ka-an
كَأَن
போன்று
lam yalbathū
لَّمْ يَلْبَثُوٓا۟
அவர்கள் தங்கவில்லை
illā sāʿatan
إِلَّا سَاعَةً
தவிர/ஒரு நேரம்
mina l-nahāri
مِّنَ ٱلنَّهَارِ
பகலில்
yataʿārafūna
يَتَعَارَفُونَ
அறிந்துகொள்வார்கள்
baynahum
بَيْنَهُمْۚ
தங்களுக்குள்
qad khasira
قَدْ خَسِرَ
திட்டமாக நஷ்டமடைந்தார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kadhabū
كَذَّبُوا۟
பொய்ப்பித்தார்கள்
biliqāi
بِلِقَآءِ
சந்திப்பை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wamā kānū
وَمَا كَانُوا۟
அவர்கள் இருக்கவில்லை
muh'tadīna
مُهْتَدِينَ
நேர்வழி பெற்றவர்களாக
(விசாரணைக்காக) அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில் ஒரு பகலில் சொற்ப நேரத்தைத் தவிர (இவ்வுலகில்) தாங்கள் தங்கவில்லை என்று அவர்கள் எண்ணுவதுடன், தங்களுக்குள் ஒருவரையொருவர் அறிந்தும் கொள்வார்கள். (ஆனால், ஒருவருக் கொருவர் உதவி செய்ய முன்வரார்.) அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யாக்கியவர்கள் நிச்சயமாக (அந்த நாளில்) நஷ்டமடைந்தே இருப்பார்கள். (அந்நஷ்டத்திலிருந்து மீள) வழி காணாதவர்களாகவும் இருப்பார்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௪௫)
Tafseer
௪௬

وَاِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِيْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّيَنَّكَ فَاِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ اللّٰهُ شَهِيْدٌ عَلٰى مَا يَفْعَلُوْنَ ٤٦

wa-immā nuriyannaka
وَإِمَّا نُرِيَنَّكَ
நிச்சயம் காண்பிப்போம்/உமக்கு
baʿḍa alladhī
بَعْضَ ٱلَّذِى
சிலவற்றை/எதை
naʿiduhum
نَعِدُهُمْ
வாக்களிக்கிறோம் அவர்களுக்கு
aw
أَوْ
அல்லது
natawaffayannaka
نَتَوَفَّيَنَّكَ
கைப்பற்றிக் கொள்வோம்/உம்மை
fa-ilaynā
فَإِلَيْنَا
நம் பக்கமே
marjiʿuhum
مَرْجِعُهُمْ
மீளுமிடம்/அவர்களுடைய
thumma
ثُمَّ
பிறகு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
shahīdun
شَهِيدٌ
சாட்சியாக இருப்பான்
ʿalā mā yafʿalūna
عَلَىٰ مَا يَفْعَلُونَ
அவர்கள் செய்தவற்றிற்கு
(நபியே!) நாம் அவர்களுக்கு வாக்களித்திருக்கும் (வேதனைகளில்) சிலவற்றை (உங்களுடைய வாழ்க்கை காலத்திலேயே) நீங்கள் பார்க்கும்படிச் செய்வோம்; அல்லது அவை வருவதற்கு முன்னர்) நாம் உங்களைக் கைப்பற்றிக் கொள்வோம். எவ்வாறாயினும் அவர்கள் நம்மிடம்தான் வர வேண்டியதிருக்கிறது. அல்லாஹ் அவர்கள் செய்பவற்றைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றான். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௪௬)
Tafseer
௪௭

وَلِكُلِّ اُمَّةٍ رَّسُوْلٌ ۚفَاِذَا جَاۤءَ رَسُوْلُهُمْ قُضِيَ بَيْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُوْنَ ٤٧

walikulli
وَلِكُلِّ
ஒவ்வொருவருக்கும்
ummatin
أُمَّةٍ
ஒரு சமுதாயம்
rasūlun
رَّسُولٌۖ
ஒரு தூதர்
fa-idhā
فَإِذَا
போது
jāa
جَآءَ
வரும்
rasūluhum
رَسُولُهُمْ
தூதர்/அவர்களுடைய
quḍiya
قُضِىَ
தீர்ப்பளிக்கப்படும்
baynahum
بَيْنَهُم
அவர்களுக்கிடையில்
bil-qis'ṭi
بِٱلْقِسْطِ
நீதமாக
wahum
وَهُمْ
இன்னும் அவர்கள்
lā yuẓ'lamūna
لَا يُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
ஒவ்வொரு வகுப்பினருக்கும் ஒரு தூதர் (நம்மால்) அனுப்பப்பட்டார்கள். அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வந்த சமயத்தில் (அவரைப் பின்பற்றியவர்களை பாதுகாத்தும், பொய்யாக்கியவர்களை அழித்தும்) அவர்களுக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களுக்கு (அணுவளவும்) அநியாயம் செய்யப்படவில்லை. ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௪௭)
Tafseer
௪௮

وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ٤٨

wayaqūlūna
وَيَقُولُونَ
அவர்கள் கேட்கின்றனர்
matā
مَتَىٰ
எப்போது
hādhā
هَٰذَا
இந்த
l-waʿdu
ٱلْوَعْدُ
வாக்கு
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
"நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (நீங்கள் பயமுறுத்தும்) வேதனை எப்பொழுது (வரும்)?" என்று அவர்கள் கேட்கின்றனர். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௪௮)
Tafseer
௪௯

قُلْ لَّآ اَمْلِكُ لِنَفْسِيْ ضَرًّا وَّلَا نَفْعًا اِلَّا مَا شَاۤءَ اللّٰهُ ۗ لِكُلِّ اُمَّةٍ اَجَلٌ ۚاِذَا جَاۤءَ اَجَلُهُمْ فَلَا يَسْتَأْخِرُوْنَ سَاعَةً وَّلَا يَسْتَقْدِمُوْنَ ٤٩

qul
قُل
கூறுவீராக
lā amliku
لَّآ أَمْلِكُ
உரிமை பெறமாட்டேன்
linafsī
لِنَفْسِى
எனக்கு
ḍarran
ضَرًّا
தீமைக்கோ
walā nafʿan
وَلَا نَفْعًا
இன்னும் நன்மைக்கோ
illā
إِلَّا
தவிர
مَا
எதை
shāa
شَآءَ
நாடினான்
l-lahu
ٱللَّهُۗ
அல்லாஹ்
likulli
لِكُلِّ
ஒவ்வொரு
ummatin
أُمَّةٍ
வகுப்பார்
ajalun
أَجَلٌۚ
தவணை
idhā jāa
إِذَا جَآءَ
வந்தால்
ajaluhum
أَجَلُهُمْ
தவணை/அவர்களுடைய
falā yastakhirūna
فَلَا يَسْتَـْٔخِرُونَ
பிந்தமாட்டார்கள்
sāʿatan
سَاعَةًۖ
ஒரு சிறிது நேரம்
walā yastaqdimūna
وَلَا يَسْتَقْدِمُونَ
இன்னும் முந்த மாட்டார்கள்
(அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ் நாடியதையன்றி யாதொரு நன்மையோ தீமையோ நான் எனக்கே தேடிக்கொள்ள சக்தியற்றவன். ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் ஒரு நாழிகையும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்." அத்தவணையில் அவர்கள் காரியம் முடிவு பெற்றுவிடும். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௪௯)
Tafseer
௫௦

قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَتٰىكُمْ عَذَابُهٗ بَيَاتًا اَوْ نَهَارًا مَّاذَا يَسْتَعْجِلُ مِنْهُ الْمُجْرِمُوْنَ ٥٠

qul
قُلْ
கூறுவீராக
ara-aytum
أَرَءَيْتُمْ
அறிவிப்பீர்களாக
in atākum
إِنْ أَتَىٰكُمْ
வந்தால்/உங்களுக்கு
ʿadhābuhu
عَذَابُهُۥ
வேதனை/ அவனுடைய
bayātan
بَيَٰتًا
இரவில்
aw
أَوْ
அல்லது
nahāran
نَهَارًا
பகலில்
mādhā
مَّاذَا
எதை
yastaʿjilu
يَسْتَعْجِلُ
அவசரமாக தேடுகின்றனர்
min'hu
مِنْهُ
அதிலிருந்து
l-muj'rimūna
ٱلْمُجْرِمُونَ
குற்றவாளிகள்
(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "அவனுடைய வேதனை இரவிலோ பகலிலோ (எந்நேரத்திலாயினும்) உங்களிடம் வரும் பட்சத்தில் (அதனை நீங்கள் தடுத்துவிட முடியுமா என்பதைக்) கவனித்தீர்களா? (நபியே!) எதற்காக இக்குற்றவாளிகள் (வேதனை எப்பொழுது வரும்... எப்பொழுது வரும்... என்று கேட்டு) அவசரப்படுகின்றனர்?" ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௫௦)
Tafseer