Skip to content

ஸூரா ஸூரத்து யூனுஸ் - Page: 2

Yunus

(al-Yūnus)

௧௧

۞ وَلَوْ يُعَجِّلُ اللّٰهُ لِلنَّاسِ الشَّرَّ اسْتِعْجَالَهُمْ بِالْخَيْرِ لَقُضِيَ اِلَيْهِمْ اَجَلُهُمْۗ فَنَذَرُ الَّذِيْنَ لَا يَرْجُوْنَ لِقَاۤءَنَا فِيْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ ١١

walaw yuʿajjilu
وَلَوْ يُعَجِّلُ
அவசரப்படுத்தினால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்(வும்)
lilnnāsi
لِلنَّاسِ
மனிதர்களுக்கு
l-shara
ٱلشَّرَّ
தீங்கை
is'tiʿ'jālahum
ٱسْتِعْجَالَهُم
அவர்கள் அவசரப்படுவதுபோல்
bil-khayri
بِٱلْخَيْرِ
நன்மையை
laquḍiya
لَقُضِىَ
முடிக்கப்பட்டிருக்கும்
ilayhim
إِلَيْهِمْ
அவர்களுக்கு
ajaluhum
أَجَلُهُمْۖ
தவணைக் காலம்/ அவர்களுடைய
fanadharu
فَنَذَرُ
ஆகவே விட்டுவிடுகிறோம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
lā yarjūna
لَا يَرْجُونَ
ஆதரவு வைக்க மாட்டார்கள்
liqāanā
لِقَآءَنَا
நம் சந்திப்பை
fī ṭugh'yānihim
فِى طُغْيَٰنِهِمْ
வழிகேட்டில்/ அவர்களுடைய
yaʿmahūna
يَعْمَهُونَ
கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக
நன்மையை அடைய (மனிதர்கள்) அவசரப்படுவதைப் போல் அல்லாஹ்வும் (குற்றம் செய்த) மனிதர்களுக்குத் தீங்கிழைக்க அவசரப்பட்டால் (இதுவரையில்) நிச்சயமாக அவர்களுடைய காலம் முடிவு பெற்றேயிருக்கும். எனினும், (மறுமையில்) நம்மைச் சந்திக்க வேண்டியதிருக்கின்றது என்பதை (ஒரு சிறிதும்) நம்பாதவர்களையும் அவர்களுடைய வழிகேட்டிலேயே தட்டழிந்து கெட்டலையும்படி (இம்மையில் சிறிது காலம்) நாம் விட்டு வைக்கிறோம். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௧)
Tafseer
௧௨

وَاِذَا مَسَّ الْاِنْسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنْۢبِهٖٓ اَوْ قَاعِدًا اَوْ قَاۤىِٕمًا ۚفَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهٗ مَرَّ كَاَنْ لَّمْ يَدْعُنَآ اِلٰى ضُرٍّ مَّسَّهٗۗ كَذٰلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِيْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ ١٢

wa-idhā massa
وَإِذَا مَسَّ
தீண்டினால்
l-insāna
ٱلْإِنسَٰنَ
மனிதனை
l-ḍuru
ٱلضُّرُّ
துன்பம்
daʿānā
دَعَانَا
பிரார்த்திக்கிறான் நம்மிடம்
lijanbihi
لِجَنۢبِهِۦٓ
அவன் தன் விலாவின் மீது
aw
أَوْ
அல்லது
qāʿidan
قَاعِدًا
உட்கார்ந்தவனாக
aw
أَوْ
அல்லது
qāiman
قَآئِمًا
நின்றவனாக
falammā kashafnā
فَلَمَّا كَشَفْنَا
நாம் நீக்கிவிட்டபோது
ʿanhu
عَنْهُ
அவனை விட்டு
ḍurrahu
ضُرَّهُۥ
அவனுடைய துன்பத்தை
marra
مَرَّ
செல்கின்றான்
ka-an lam yadʿunā
كَأَن لَّمْ يَدْعُنَآ
அவன் நம்மை அழைக்காதது போன்று
ilā ḍurrin
إِلَىٰ ضُرٍّ
துன்பத்திற்கு
massahu
مَّسَّهُۥۚ
தீண்டியது/அவனை
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறு
zuyyina
زُيِّنَ
அலங்கரிக்கப்பட்டன
lil'mus'rifīna
لِلْمُسْرِفِينَ
வரம்பு மீறிகளுக்கு
مَا
எவை
kānū
كَانُوا۟
இருந்தனர்
yaʿmalūna
يَعْمَلُونَ
செய்கின்றனர்
மனிதனுக்கு யாதொரு தீங்கேற்பட்டால் (அதனை நீக்கும்படி) அவன் தன்னுடைய (படுத்த) படுக்கையிலும், (உட்கார்ந்த) இருப்பிலும், (நின்ற) நிலையிலும் நம்மிடமே பிரார்த்திக்கிறான். ஆனால், அவனுடைய துன்பத்தை நாம் நீக்கிவிட்டாலோ அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கும்படி நம்மிடம் பிரார்த்தனையே செய்யாதவனைப் போல் (புறக்கணித்துச்) சென்றுவிடுகிறான். வரம்பு மீறும் (இவர்களுக்கு) இவர்கள் செய்யும் காரியங்கள் இவ்வாறு அழகாக்கப்பட்டு விட்டன. ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௨)
Tafseer
௧௩

وَلَقَدْ اَهْلَكْنَا الْقُرُوْنَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوْاۙ وَجَاۤءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ وَمَا كَانُوْا لِيُؤْمِنُوْا ۗ كَذٰلِكَ نَجْزِى الْقَوْمَ الْمُجْرِمِيْنَ ١٣

walaqad ahlaknā
وَلَقَدْ أَهْلَكْنَا
திட்டமாக அழித்துவிட்டோம்
l-qurūna
ٱلْقُرُونَ
தலைமுறைகளை
min qablikum
مِن قَبْلِكُمْ
உங்களுக்கு முன்னிருந்த
lammā ẓalamū
لَمَّا ظَلَمُوا۟ۙ
அவர்கள் அநியாயம் செய்தபோது
wajāathum
وَجَآءَتْهُمْ
இன்னும் வந்தனர்/அவர்களிடம்
rusuluhum
رُسُلُهُم
தூதர்கள்/ அவர்களுடைய
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளை கொண்டு
wamā kānū liyu'minū
وَمَا كَانُوا۟ لِيُؤْمِنُوا۟ۚ
அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறே
najzī
نَجْزِى
நாம் கூலி கொடுப்போம்
l-qawma
ٱلْقَوْمَ
மக்களுக்கு
l-muj'rimīna
ٱلْمُجْرِمِينَ
குற்றம்புரிகின்றவர்கள்
(மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ வகுப்பினரை அவர்கள் செய்துகொண்டிருந்த அநியாயத்தின் காரணமாக நிச்சயமாக நாம் அழித்துவிட்டோம். அவர்களிடம் அனுப்பப்பட்ட (நம்முடைய) தூதர்கள் தெளிவான அத்தாட்சி களையே கொண்டு வந்தனர். எனினும் (அவற்றை) அவர்கள் நம்பவேயில்லை. குற்றம் செய்யும் மற்ற மக்களுக்கு இவ்வாறே நாம் கூலி கொடு(த்துத் தண்டி)ப்போம். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௩)
Tafseer
௧௪

ثُمَّ جَعَلْنٰكُمْ خَلٰۤىِٕفَ فِى الْاَرْضِ مِنْۢ بَعْدِهِمْ لِنَنْظُرَ كَيْفَ تَعْمَلُوْنَ ١٤

thumma
ثُمَّ
பிறகு
jaʿalnākum
جَعَلْنَٰكُمْ
ஆக்கினோம்/ உங்களை
khalāifa
خَلَٰٓئِفَ
பிரதிநிதிகளாக
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
min baʿdihim
مِنۢ بَعْدِهِمْ
அவர்களுக்குப் பின்னர்
linanẓura
لِنَنظُرَ
நாம் கவனிப்பதற்காக
kayfa
كَيْفَ
எப்படி
taʿmalūna
تَعْمَلُونَ
நீங்கள் செய்கிறீர்கள்
அவர்களுக்குப் பின்னர் நாம் உங்களை (அவர்களுடைய) பூமிக்கு அதிபதிகளாக்கி, நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்று கவனித்துக் கொண்டு வருகின்றோம். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௪)
Tafseer
௧௫

وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيَاتُنَا بَيِّنٰتٍۙ قَالَ الَّذِيْنَ لَا يَرْجُوْنَ لِقَاۤءَنَا ائْتِ بِقُرْاٰنٍ غَيْرِ هٰذَآ اَوْ بَدِّلْهُ ۗ قُلْ مَا يَكُوْنُ لِيْٓ اَنْ اُبَدِّلَهٗ مِنْ تِلْقَاۤئِ نَفْسِيْ ۚاِنْ اَتَّبِعُ اِلَّا مَا يُوْحٰٓى اِلَيَّ ۚ اِنِّيْٓ اَخَافُ اِنْ عَصَيْتُ رَبِّيْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ ١٥

wa-idhā tut'lā
وَإِذَا تُتْلَىٰ
ஓதப்பட்டால்
ʿalayhim
عَلَيْهِمْ
இவர்கள் மீது
āyātunā
ءَايَاتُنَا
வசனங்கள்/நம்
bayyinātin
بَيِّنَٰتٍۙ
தெளிவான(வை)
qāla
قَالَ
கூறுகின்றனர்
alladhīna lā yarjūna
ٱلَّذِينَ لَا يَرْجُونَ
எவர்கள்/ஆதரவு வைக்கமாட்டார்கள்
liqāanā
لِقَآءَنَا
நம் சந்திப்பை
i'ti
ٱئْتِ
வாரீர்
biqur'ānin
بِقُرْءَانٍ
ஒரு குர்ஆனைக் கொண்டு
ghayri hādhā
غَيْرِ هَٰذَآ
அல்லாத/இது
aw
أَوْ
அல்லது
baddil'hu
بَدِّلْهُۚ
மாற்றுவீராக/அதை
qul
قُلْ
கூறுவீராக
mā yakūnu lī
مَا يَكُونُ لِىٓ
முடியாது/என்னால்
an ubaddilahu
أَنْ أُبَدِّلَهُۥ
நான்மாற்றுவது/அதை
min til'qāi
مِن تِلْقَآئِ
புறத்திலிருந்து
nafsī
نَفْسِىٓۖ
என்
in attabiʿu
إِنْ أَتَّبِعُ
பின்பற்ற மாட்டேன்
illā
إِلَّا
தவிர
mā yūḥā
مَا يُوحَىٰٓ
எது/வஹீ அறிவிக்கப்படுகிறது
ilayya
إِلَىَّۖ
எனக்கு
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
பயப்படுகிறேன்
in ʿaṣaytu
إِنْ عَصَيْتُ
நான் மாறுசெய்தால்
rabbī
رَبِّى
என் இறைவனுக்கு
ʿadhāba
عَذَابَ
வேதனையை
yawmin
يَوْمٍ
நாளின்
ʿaẓīmin
عَظِيمٍ
மகத்தான
(முன்னர் அழிந்து விட்டவர்களின் இடத்தில் அமர்த்தப்பட்ட) இவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (மறுமையில்) நம்மைச் சந்திப்பதை நம்பாத இவர்கள் (உங்களை நோக்கி) "இது அல்லாத வேறொரு குர்ஆனை நீங்கள் கொண்டு வாருங்கள்; அல்லது (எங்கள் இஷ்டப்படி) இதனை மாற்றிவிடுங்கள்" என்று கூறுகின்றனர். (அதற்கு அவர்களை நோக்கி "உங்கள் விருப்பத்திற்காக) நானே (என் இஷ்டப்படி) இதனை மாற்றிவிட எனக்கு எவ்வித சக்தியுமில்லை. வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்படுபவைகளை அன்றி, (வேறொன்றையும்) நான் பின்பற்றுவதற்கில்லை. என்னுடைய இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான நாளுடைய வேதனைக்கு (ஆளாக வேண்டியதேற்படும் என்று) நிச்சயமாக நான் பயப்படுகிறேன்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௫)
Tafseer
௧௬

قُلْ لَّوْ شَاۤءَ اللّٰهُ مَا تَلَوْتُهٗ عَلَيْكُمْ وَلَآ اَدْرٰىكُمْ بِهٖ ۖفَقَدْ لَبِثْتُ فِيْكُمْ عُمُرًا مِّنْ قَبْلِهٖۗ اَفَلَا تَعْقِلُوْنَ ١٦

qul
قُل
கூறுவீராக
law shāa
لَّوْ شَآءَ
நாடியிருந்தால்
l-lahu mā talawtuhu
ٱللَّهُ مَا تَلَوْتُهُۥ
அல்லாஹ்/நான் ஓதியிருக்கவும் மாட்டேன் /இதை
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
walā adrākum
وَلَآ أَدْرَىٰكُم
இன்னும் அவன் அறிவித்திருக்கவும் மாட்டான்/உங்களுக்கு
bihi
بِهِۦۖ
இதை
faqad labith'tu
فَقَدْ لَبِثْتُ
திட்டமாக வசித்துள்ளேன்
fīkum
فِيكُمْ
உங்களுடன்
ʿumuran
عُمُرًا
ஒரு (நீண்ட) காலம்
min qablihi
مِّن قَبْلِهِۦٓۚ
இதற்கு முன்னர்
afalā taʿqilūna
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "(உங்களுக்கு நான் இதனை ஓதிக் காண்பிக்கக் கூடாதென்று) அல்லாஹ் எண்ணியிருந்தால், நான் இதனை உங்களுக்கு ஓதிக் காண்பித்திருக்கவும் மாட்டேன். அவன் உங்களுக்கு இதனை அறிவித்திருக்கவும் மாட்டான். நிச்சயமாக நான் இதற்கு முன்னரும் நீண்ட காலம் உங்களுடன் வசித்துள்ளேன் (அல்லவா? நான் பொய் சொல்பவன் அல்ல என்பதை நீங்கள் நன்கறிந்திருக்கிறீர்கள். இவ்வளவு கூட) நீங்கள் அறிந்துகொள்ள முடியாதா? ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௬)
Tafseer
௧௭

فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰيٰتِهٖۗ اِنَّهٗ لَا يُفْلِحُ الْمُجْرِمُوْنَ ١٧

faman
فَمَنْ
யார்?
aẓlamu
أَظْلَمُ
பெரும் அநியாயக்காரன்
mimmani
مِمَّنِ
எவனைவிட
if'tarā
ٱفْتَرَىٰ
இட்டுக்கட்டினான்
ʿalā
عَلَى
மீது
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
kadhiban
كَذِبًا
பொய்யை
aw
أَوْ
அல்லது
kadhaba
كَذَّبَ
பொய்ப்பித்தான்
biāyātihi
بِـَٔايَٰتِهِۦٓۚ
அவனுடைய வசனங்களை
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக
lā yuf'liḥu
لَا يُفْلِحُ
வெற்றி பெறமாட்டார்(கள்)
l-muj'rimūna
ٱلْمُجْرِمُونَ
குற்றவாளிகள்
அல்லாஹ்வின் மீது பொய் சொல்பவனை விட அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குபவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக (இத்தகைய) குற்றவாளிகள் வெற்றி அடையவே மாட்டார்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௭)
Tafseer
௧௮

وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُوْلُوْنَ هٰٓؤُلَاۤءِ شُفَعَاۤؤُنَا عِنْدَ اللّٰهِ ۗقُلْ اَتُنَبِّـُٔوْنَ اللّٰهَ بِمَا لَا يَعْلَمُ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِۗ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ ١٨

wayaʿbudūna
وَيَعْبُدُونَ
இன்னும் அவர்கள் வணங்குகிறார்கள்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
mā lā
مَا لَا
எதை/தீங்கிழைக்காது
yaḍurruhum
يَضُرُّهُمْ
எதை/தீங்கிழைக்காது தங்களுக்கு
walā yanfaʿuhum
وَلَا يَنفَعُهُمْ
இன்னும் பலனளிக்காது/தங்களுக்கு
wayaqūlūna
وَيَقُولُونَ
இன்னும் கூறுகின்றனர்
hāulāi
هَٰٓؤُلَآءِ
இவை
shufaʿāunā
شُفَعَٰٓؤُنَا
சிபாரிசாளர்கள் எங்கள்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِۚ
அல்லாஹ்விடம்
qul
قُلْ
கூறுவீராக
atunabbiūna
أَتُنَبِّـُٔونَ
அறிவிக்கிறீர்களா?
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு
bimā
بِمَا
எதை
lā yaʿlamu
لَا يَعْلَمُ
அறிய மாட்டான்
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
walā fī l-arḍi
وَلَا فِى ٱلْأَرْضِۚ
இன்னும் பூமியில்
sub'ḥānahu
سُبْحَٰنَهُۥ
அவன் மிகப் பரிசுத்தமானவன்
wataʿālā
وَتَعَٰلَىٰ
இன்னும் உயர்ந்து விட்டான்
ʿammā
عَمَّا
எவற்றைவிட்டு
yush'rikūna
يُشْرِكُونَ
இணைவைக்கிறார்கள்
(இணை வைப்பவர்கள்) தங்களுக்கு யாதொரு நன்மையும் தீமையும் செய்ய முடியாத அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதுடன் "இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை" என்றும் கூறுகின்றனர். (ஆகவே, நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாதவை (உள்ளனவா? அவை)களை (இவைகள் மூலம்) நீங்கள் அவனுக்கு அறிவிக்கிறீர்களா? (அவனோ அனைத்தையும் நன்கறிந்தவன்;) அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணை வைப்பவைகளைவிட மிக உயர்ந்தவன்" என்று கூறுங்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௮)
Tafseer
௧௯

وَمَا كَانَ النَّاسُ اِلَّآ اُمَّةً وَّاحِدَةً فَاخْتَلَفُوْاۗ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ فِيْمَا فِيْهِ يَخْتَلِفُوْنَ ١٩

wamā kāna
وَمَا كَانَ
இருக்கவில்லை
l-nāsu
ٱلنَّاسُ
மனிதர்கள்
illā
إِلَّآ
தவிர
ummatan
أُمَّةً
ஒரு சமுதாயமாக
wāḥidatan
وَٰحِدَةً
ஒரே
fa-ikh'talafū
فَٱخْتَلَفُوا۟ۚ
பிறகு மாறுபட்டனர்
walawlā
وَلَوْلَا
இருக்கவில்லையெனில்
kalimatun
كَلِمَةٌ
சொல்
sabaqat
سَبَقَتْ
முந்தியது
min rabbika
مِن رَّبِّكَ
உம் இறைவனின்
laquḍiya
لَقُضِىَ
தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்
baynahum
بَيْنَهُمْ
அவர்களுக்கிடையில் எவற்றில்
fīmā
فِيمَا
அவற்றில்
fīhi
فِيهِ
மாறுபடுகின்றனர்
yakhtalifūna
يَخْتَلِفُونَ
Err
மனிதர்கள் அனைவரும் (ஆரம்பத்தில் ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே வகுப்பினராக இருந்தனர். பின்னரே (தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக பல வகுப்பினராகப்) பிரிந்து விட்டனர். (செயலுக்குரிய கூலி மறுமையில்தான் முழுமையாகக் கொடுக்கப்படும் என்று நபியே!) உங்களது இறைவனின் வாக்கு ஏற்கனவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்கள் மாறுபாடு செய்து கொண்டிருந்த விஷயத்தில் அவர்களுடைய காரியம் (இதுவரையில்) முடிவு பெற்றே இருக்கும்! ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௯)
Tafseer
௨௦

وَيَقُوْلُوْنَ لَوْلَآ اُنْزِلَ عَلَيْهِ اٰيَةٌ مِّنْ رَّبِّهٖۚ فَقُلْ اِنَّمَا الْغَيْبُ لِلّٰهِ فَانْتَظِرُوْاۚ اِنِّيْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِيْنَ ࣖ ٢٠

wayaqūlūna
وَيَقُولُونَ
இன்னும் அவர்கள் கூறுகின்றனர்
lawlā unzila
لَوْلَآ أُنزِلَ
இறக்கப்பட்டிருக்க வேண்டாமா?
ʿalayhi
عَلَيْهِ
அவர் மீது
āyatun
ءَايَةٌ
ஓர் அத்தாட்சி
min
مِّن
இருந்து
rabbihi
رَّبِّهِۦۖ
அவருடைய இறைவன்
faqul
فَقُلْ
ஆகவே, கூறுவீராக
innamā
إِنَّمَا
எல்லாம்
l-ghaybu
ٱلْغَيْبُ
மறைவானவை
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்குரியன
fa-intaẓirū
فَٱنتَظِرُوٓا۟
ஆகவே எதிர் பார்த்திருங்கள்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
maʿakum
مَعَكُم
உங்களுடன்
mina l-muntaẓirīna
مِّنَ ٱلْمُنتَظِرِينَ
எதிர்பார்ப்பவர்களில்
(தவிர "நாம் விரும்புகிறவாறு) ஏதாவது ஓர் அத்தாட்சி (இறைவனின் நபியாகிய) அவர் மீது அவருடைய இறைவனால் அருளப்பட வேண்டாமா?" என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(நீங்கள் விரும்புகிறவாறு அத்தாட்சியை இறக்கி வைக்காத காரணம் உங்களுக்கு மறைவானது.) மறைவான விஷயங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே. (ஆகவே, அதனை நீங்கள் அறிய விரும்பினால்) நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் (உங்களுடைய விஷமக் கூற்றினால் உங்களுக்கு என்ன கேடு வருகின்றதென்பதை) உங்களுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்." ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௨௦)
Tafseer