Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௮௩

Qur'an Surah At-Tawbah Verse 83

ஸூரத்துத் தவ்பா [௯]: ௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِنْ رَّجَعَكَ اللّٰهُ اِلٰى طَاۤىِٕفَةٍ مِّنْهُمْ فَاسْتَأْذَنُوْكَ لِلْخُرُوْجِ فَقُلْ لَّنْ تَخْرُجُوْا مَعِيَ اَبَدًا وَّلَنْ تُقَاتِلُوْا مَعِيَ عَدُوًّاۗ اِنَّكُمْ رَضِيْتُمْ بِالْقُعُوْدِ اَوَّلَ مَرَّةٍۗ فَاقْعُدُوْا مَعَ الْخَالِفِيْنَ (التوبة : ٩)

fa-in rajaʿaka
فَإِن رَّجَعَكَ
Then if Allah returns you
திருப்பினால்/உம்மை
l-lahu
ٱللَّهُ
Allah returns you
அல்லாஹ்
ilā ṭāifatin
إِلَىٰ طَآئِفَةٍ
to a group
ஒரு கூட்டத்திடம்
min'hum
مِّنْهُمْ
of them
அவர்களில்
fa-is'tadhanūka
فَٱسْتَـْٔذَنُوكَ
and they ask you permission
அனுமதி கோரினால்/உம்மிடம்
lil'khurūji
لِلْخُرُوجِ
to go out
வெளியேறுவதற்கு
faqul
فَقُل
then say
கூறுவீராக
lan takhrujū
لَّن تَخْرُجُوا۟
"Never will you come out
அறவே புறப்படாதீர்கள்
maʿiya
مَعِىَ
with me
என்னுடன்
abadan
أَبَدًا
ever
ஒருபோதும்
walan tuqātilū
وَلَن تُقَٰتِلُوا۟
and never will you fight
இன்னும் அறவே போரிடாதீர்கள்
maʿiya
مَعِىَ
with me
என்னுடன்
ʿaduwwan
عَدُوًّاۖ
any enemy
ஒரு எதிரியிடம்
innakum
إِنَّكُمْ
Indeed, you
நிச்சயமாக நீங்கள்
raḍītum
رَضِيتُم
were satisfied
விரும்பினீர்கள்
bil-quʿūdi
بِٱلْقُعُودِ
with sitting
உட்கார்ந்து விடுவதை
awwala marratin
أَوَّلَ مَرَّةٍ
(the) first time
முதல் முறை
fa-uq'ʿudū
فَٱقْعُدُوا۟
so sit
ஆகவே உட்கார்ந்து விடுங்கள்
maʿa l-khālifīna
مَعَ ٱلْخَٰلِفِينَ
with those who stay behind"
பின் தங்கி விடுபவர்களுடன்

Transliteration:

Fa ir raja'akal laahu ilaa taaa'ifatim minhum fastaaa zanooka lilkhurooji faqul lan takhrujoo ma'iya abadanw a lan tuqaatiloo ma'iya 'aduwwan innakum radeetum bilqu'oodi awwala marratin faq'udoo ma'al khaalifeen (QS. at-Tawbah:83)

English Sahih International:

If Allah should return you to a faction of them [after the expedition] and then they ask your permission to go out [to battle], say, "You will not go out with me, ever, and you will never fight with me an enemy. Indeed, you were satisfied with sitting [at home] the first time, so sit [now] with those who stay behind." (QS. At-Tawbah, Ayah ௮௩)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் (போரில் வெற்றி பெற்றவராக) அவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் திரும்ப வரும்படி அல்லாஹ் செய்து (உங்களது வெற்றியையும், நீங்கள் கொண்டு வந்த பொருள்களையும் அவர்கள் கண்டு, உங்களுடன் மற்றொரு போருக்குப்) புறப்பட உங்களிடம் அனுமதி கோரினால் (அவர்களை நோக்கி) "நீங்கள் (போருக்கு) ஒருக்காலத்திலும் என்னுடன் புறப்படவேண்டாம். என்னுடன் சேர்ந்து எந்த எதிரியுடனும் நீங்கள் போர்புரிய வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக நீங்கள் முதன் முறையில் (வீட்டில்) தங்கிவிடுவதையே விரும்பினீர்கள். ஆதலால் (இப்பொழுதும்) நீங்கள் (வீட்டில்) தங்கிவிடுபவர்களுடன் இருந்து விடுங்கள்" என்று நபியே! நீங்கள் கூறுங்கள். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௮௩)

Jan Trust Foundation

(நபியே!) உம்மை அல்லாஹ் அவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் திரும்பி வருமாறு செய்து (உம் வெற்றியையும், பொருட்களையும் பார்த்துவிட்டு மறு யுத்தத்திற்குப்) புறப்பட்டு வர உம்மிடம் அனுமதி கோரினால், நீர் அவர்களிடம் “நீங்கள் ஒருக்காலும் என்னுடன் புறப்படாதீர்கள்; இன்னும் என்னுடன் சேர்ந்து எந்த விரோதியுடனும் நீங்கள் போர் செய்யாதீர்கள். ஏனெனில் நீங்கள் முதன் முறையில் (போருக்குப் புறப்படாமல் தன் வீடுகளில்) உட்கார்ந்திருப்பதைத் தான் பொருத்த மெனக்கொண்டீர்கள் - எனவே (இப்பொழுதும் தம் இல்லங்களில்) தங்கியவர்களுடனேயே இருந்து விடுங்கள்” என்று கூறுவீராக!.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அல்லாஹ் உம்மை (வெற்றி பெற்றவராக) அவர்களில் ஒரு கூட்டத்திடம் திருப்பி, (அடுத்த போரில் உம்முடன்) அவர்கள் வெளியேறுவதற்கு உம்மிடம் அனுமதி கோரினால், (நீர்) கூறுவீராக: “ஒருபோதும் என்னுடன் அறவே புறப்படாதீர்கள். என்னுடன் சேர்ந்து (எந்த) ஒரு எதிரியிடமும் அறவே போரிடாதீர்கள். நிச்சயமாக நீங்கள் முதல் முறை (வீட்டில்) உட்கார்ந்து விடுவதை விரும்பினீர்கள். ஆகவே, (இப்போதும்) பின் தங்கிவிடுபவர்களுடன் உட்கார்ந்து விடுங்கள்.”