Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௮௧

Qur'an Surah At-Tawbah Verse 81

ஸூரத்துத் தவ்பா [௯]: ௮௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَرِحَ الْمُخَلَّفُوْنَ بِمَقْعَدِهِمْ خِلٰفَ رَسُوْلِ اللّٰهِ وَكَرِهُوْٓا اَنْ يُّجَاهِدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِيْ سَبِيْلِ اللّٰهِ وَقَالُوْا لَا تَنْفِرُوْا فِى الْحَرِّۗ قُلْ نَارُ جَهَنَّمَ اَشَدُّ حَرًّاۗ لَوْ كَانُوْا يَفْقَهُوْنَ (التوبة : ٩)

fariḥa
فَرِحَ
Rejoice
மகிழ்ச்சியடைந்தனர்
l-mukhalafūna
ٱلْمُخَلَّفُونَ
those who remained behind
பின்தங்கியவர்கள்
bimaqʿadihim
بِمَقْعَدِهِمْ
in their staying
தாங்கள் தங்கியதைப் பற்றி
khilāfa rasūli
خِلَٰفَ رَسُولِ
behind (the) Messenger
மாறாக/தூதருக்கு
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
wakarihū
وَكَرِهُوٓا۟
and they disliked
இன்னும் வெறுத்தனர்
an yujāhidū
أَن يُجَٰهِدُوا۟
to strive
அவர்கள் போரிடுவதை
bi-amwālihim
بِأَمْوَٰلِهِمْ
with their wealth
தங்கள் செல்வங்களால்
wa-anfusihim
وَأَنفُسِهِمْ
and their lives
இன்னும் தங்கள் உயிர்களால்
fī sabīli
فِى سَبِيلِ
in (the) way
பாதையில்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
waqālū
وَقَالُوا۟
and they said
கூறினர்
lā tanfirū
لَا تَنفِرُوا۟
"(Do) not go forth
புறப்படாதீர்கள்
fī l-ḥari
فِى ٱلْحَرِّۗ
in the heat"
வெயிலில்
qul
قُلْ
Say
கூறுவீராக
nāru jahannama
نَارُ جَهَنَّمَ
"(The) Fire (of) Hell
நெருப்பு/நரகத்தின்
ashaddu
أَشَدُّ
(is) more intense
மிகக் கடுமையானது
ḥarran
حَرًّاۚ
(in) heat"
வெப்பத்தால்
law kānū
لَّوْ كَانُوا۟
If (only) they could
அவர்கள் இருக்க வேண்டுமே!
yafqahūna
يَفْقَهُونَ
understand
சிந்தித்து விளங்குபவர்களாக

Transliteration:

Farihal mukhallafoona bimaq'adihim khilaafa Rasoolil laahi wa karihooo ai yujaahidoo bi amwaalihim wa anfusihim fee sabeelil laahi wa qaaloo la tanfiroo fil harr; qul Naaru jahannama ashaddu harraa; law kaanoo yafqahoon (QS. at-Tawbah:81)

English Sahih International:

Those who remained behind rejoiced in their staying [at home] after [the departure of] the Messenger of Allah and disliked to strive with their wealth and their lives in the cause of Allah and said, "Do not go forth in the heat." Say, "The fire of Hell is more intense in heat" – if they would but understand. (QS. At-Tawbah, Ayah ௮௧)

Abdul Hameed Baqavi:

(போருக்குச் செல்லாது) பின் தங்கிவிட்டவர்கள், அல்லாஹ்வின் தூதரு(டைய கட்டளை)க்கு மாறாக(த் தங்கள் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி சந்தோஷமடைகின்றனர். அன்றி, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களையும், உயிர்களையும் தியாகம் செய்து போர் செய்வதை வெறுத்து (மற்றவர்களை நோக்கி) "இந்த வெப்பகாலத்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்" என்றும் கூறுகின்றனர். (அதற்கு நபியே! அவர்களை நோக்கி) "நரகத்தின் நெருப்பு (இதைவிட) கொடிய உஷ்ணமானது" என்று நீங்கள் கூறுங்கள். (இதனை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௮௧)

Jan Trust Foundation

(தபூக் போரில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விரோதமாக(த் தம் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றனர்; அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருட்களையும், உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிவதையும் வெறுத்து (மற்றவர்களை நோக்கி); “இந்த வெப்ப (கால)த்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்” என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் “நரக நெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (இதை) அவர்கள் விளங்கியிருந்தால் (பின் தங்கியிருக்க மாட்டார்கள்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பின் தங்கியவர்கள், அல்லாஹ்வின் தூதருக்கு மாறாக(த் தங்கள் வீடுகளில்) தாங்கள் தங்கியதைப் பற்றி மகிழ்சியடைந்தனர். அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களாலும், தங்கள் உயிர்களாலும் போரிடுவதை வெறுத்தனர். (மற்றவர்களுக்கு) “வெயிலில் (போருக்குப்) புறப்படாதீர்கள்” என்று கூறினர். (நபியே!) “நரகத்தின் நெருப்பு வெப்பத்தால் மிகக் கடுமையானது” என்று கூறுவீராக. (இதை) அவர்கள் சிந்தித்து விளங்குபவர்களாக இருக்க வேண்டுமே!