Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௮

Qur'an Surah At-Tawbah Verse 8

ஸூரத்துத் தவ்பா [௯]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَيْفَ وَاِنْ يَّظْهَرُوْا عَلَيْكُمْ لَا يَرْقُبُوْا فِيْكُمْ اِلًّا وَّلَا ذِمَّةً ۗيُرْضُوْنَكُمْ بِاَفْوَاهِهِمْ وَتَأْبٰى قُلُوْبُهُمْۚ وَاَكْثَرُهُمْ فٰسِقُوْنَۚ (التوبة : ٩)

kayfa
كَيْفَ
How
எவ்வாறு?
wa-in yaẓharū
وَإِن يَظْهَرُوا۟
while, if they gain dominance
அவர்கள் வெற்றி கொண்டால்
ʿalaykum
عَلَيْكُمْ
over you
உங்களை
lā yarqubū
لَا يَرْقُبُوا۟
they do not regard (the ties) they do not regard (the ties)
பொருட்படுத்த மாட்டார்கள்
fīkum illan
فِيكُمْ إِلًّا
with you (of) kinship
உங்களுடன்/உறவை
walā dhimmatan
وَلَا ذِمَّةًۚ
and not covenant of protection?
இன்னும் ஒப்பந்தத்தை
yur'ḍūnakum
يُرْضُونَكُم
They satisfy you
திருப்திபடுத்துகின்றனர்/உங்களை
bi-afwāhihim
بِأَفْوَٰهِهِمْ
with their mouths
தங்கள் வாய்களால்
watabā
وَتَأْبَىٰ
but refuse
மறுக்கின்றன
qulūbuhum
قُلُوبُهُمْ
their hearts
அவர்களுடைய உள்ளங்கள்
wa-aktharuhum fāsiqūna
وَأَكْثَرُهُمْ فَٰسِقُونَ
and most of them (are) defiantly disobedient
அவர்களில் அதிகமானோர்/பாவிகள்

Transliteration:

Kaifa wa iny-yazharoo 'alaikum laa yarquboo feekum illanw wa laa zimmah; yurdoo nakum biafwaahihim wa taabaa quloobuhum wa aksaruhum faasiqoon (QS. at-Tawbah:8)

English Sahih International:

How [can there be a treaty] while, if they gain dominance over you, they do not observe concerning you any pact of kinship or covenant of protection? They satisfy you with their mouths, but their hearts refuse [compliance], and most of them are defiantly disobedient. (QS. At-Tawbah, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

(எனினும் அவர்களின் உடன்படிக்கையையும்) எவ்வாறு (நம்ப முடியும்)? அவர்கள் உங்களை வெற்றி கொண்டாலோ (நீங்கள் அவர்களுக்கு) உறவினர்கள் என்பதையும் (உங்களுக்கும் அவர்களுக்கும் இடையிலுள்ள) உடன்படிக்கையையும் பொருட் படுத்துவதேயில்லை. தங்கள் வார்த்தைகளைக் கொண்டு (மட்டும்) உங்களைத் திருப்திபடுத்துகின்றனர்; ஆனால், அவர்களுடைய உள்ளங்களோ (உங்களிடமிருந்து) விலகிக்கொள்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் பாவிகளாகவே இருக்கின்றனர். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௮)

Jan Trust Foundation

(எனினும் அவர்களுடன்) எப்படி (உடன்படிக்கை இருக்க முடியும்?) உங்கள் மேல் அவர்கள் வெற்றி கொண்டால் உங்களிடையே உள்ள உறவின் முறையையும், (உங்களிடையே இருக்கும்) உடன்படிக்கையையும் அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை; அவர்கள் தம் வாய்(மொழி)களைக் கொண்டு(தான்) உங்களைத் திருப்திபடுத்துகிறார்கள்; ஆனால் அவர்களின் உள்ளங்கள் (அதனை) மறுக்கின்றன - அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவ்வாறு (அவர்களை நம்ப முடியும்)? அவர்கள் உங்களை வெற்றி கொண்டால் உங்களுடன் (தங்களுக்குள்ள) உறவையும் ஒப்பந்தத்தையும் பொருட்படுத்தமாட்டார்கள். தங்கள் வாய் (வார்த்தை)களால் உங்களைத் திருப்திபடுத்துகின்றனர்; அவர்களுடைய உள்ளங்கள் (உங்களை) மறுக்கின்றன. (வெறுக்கின்றன). அவர்களில் அதிகமானோர் பாவிகள் ஆவர்.