குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௬௮
Qur'an Surah At-Tawbah Verse 68
ஸூரத்துத் தவ்பா [௯]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَعَدَ اللّٰهُ الْمُنٰفِقِيْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْكُفَّارَ نَارَ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَاۗ هِيَ حَسْبُهُمْ ۚوَلَعَنَهُمُ اللّٰهُ ۚوَلَهُمْ عَذَابٌ مُّقِيْمٌۙ (التوبة : ٩)
- waʿada
- وَعَدَ
- Allah has promised
- வாக்களித்தான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah has promised
- அல்லாஹ்
- l-munāfiqīna
- ٱلْمُنَٰفِقِينَ
- the hypocrite men
- நயவஞ்சக ஆண்களுக்கு
- wal-munāfiqāti
- وَٱلْمُنَٰفِقَٰتِ
- and the hypocrite women
- இன்னும் நயவஞ்சக பெண்களுக்கு
- wal-kufāra
- وَٱلْكُفَّارَ
- and the disbelievers
- இன்னும் நிராகரிப்பாளர்களுக்கு
- nāra
- نَارَ
- Fire
- நெருப்பை
- jahannama
- جَهَنَّمَ
- (of the) Hell
- நரகத்தின்
- khālidīna
- خَٰلِدِينَ
- they (will) abide forever
- நிரந்தரமானவர்கள்
- fīhā
- فِيهَاۚ
- in it
- அதில்
- hiya
- هِىَ
- It (is)
- அதுவே
- ḥasbuhum
- حَسْبُهُمْۚ
- sufficient for them
- அவர்களுக்கு போதும்
- walaʿanahumu
- وَلَعَنَهُمُ
- And Allah has cursed them
- இன்னும் சபித்தான்/அவர்களை
- l-lahu
- ٱللَّهُۖ
- And Allah has cursed them
- அல்லாஹ்
- walahum
- وَلَهُمْ
- and for them
- இன்னும் அவர்களுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- (is) a punishment
- வேதனை
- muqīmun
- مُّقِيمٌ
- enduring
- நிலையானது
Transliteration:
Wa'adal laahul munafiqeena wal munaafiqaati wal kuffaara naara jahannnamma khaalideena feehaa; hiya hasbuhum; wa la'annahumul laahu wa lahum 'azaabum muqeem(QS. at-Tawbah:68)
English Sahih International:
Allah has promised the hypocrite men and hypocrite women and the disbelievers the fire of Hell, wherein they will abide eternally. It is sufficient for them. And Allah has cursed them, and for them is an enduring punishment. (QS. At-Tawbah, Ayah ௬௮)
Abdul Hameed Baqavi:
நயவஞ்சகரான ஆண்களுக்கும் பெண்களுக்கும் (அவ்வாறே மற்ற) நிராகரிப்பவர்களுக்கும் நரக நெருப்பையே அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கி விடுவார்கள். அதுவே அவர்களுக்குப் போதுமா(ன கூலியா)கும். அன்றி, அல்லாஹ் அவர்களை சபித்தும் இருக்கின்றான். மேலும், அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு. (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௬௮)
Jan Trust Foundation
நயவஞ்சகர்களான ஆடவருக்கும், நயவஞ்சகர்களான பெண்டிருக்கும், காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான்; அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள்; அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்; இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் - அவர்களுக்கு நிரந்தரமான வேதனையுமுண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நயவஞ்சக ஆண்களுக்கும் நயவஞ்சக பெண்களுக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் நரகத்தின் நெருப்பை அல்லாஹ் வாக்களித்தான். அதில் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். அதுவே அவர்களுக்குப் போது(மான கூலியாகு)ம். அல்லாஹ் அவர்களைச் சபித்தான். அவர்களுக்கு (அங்கு) நிலையான வேதனையுண்டு.