குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௬௬
Qur'an Surah At-Tawbah Verse 66
ஸூரத்துத் தவ்பா [௯]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَا تَعْتَذِرُوْا قَدْ كَفَرْتُمْ بَعْدَ اِيْمَانِكُمْ ۗ اِنْ نَّعْفُ عَنْ طَاۤىِٕفَةٍ مِّنْكُمْ نُعَذِّبْ طَاۤىِٕفَةً ۢ بِاَنَّهُمْ كَانُوْا مُجْرِمِيْنَ ࣖ (التوبة : ٩)
- lā taʿtadhirū
- لَا تَعْتَذِرُوا۟
- (Do) not make excuse;
- புகல் கூறாதீர்கள்
- qad kafartum
- قَدْ كَفَرْتُم
- verily you have disbelieved
- நிராகரித்து விட்டீர்கள்
- baʿda īmānikum
- بَعْدَ إِيمَٰنِكُمْۚ
- after your belief
- பின்னர்/நீங்கள் நம்பிக்கை கொண்டதற்கு
- in naʿfu
- إِن نَّعْفُ
- If We pardon
- நாம் மன்னித்தால்
- ʿan ṭāifatin
- عَن طَآئِفَةٍ
- [on] a party
- ஒரு கூட்டத்தை
- minkum
- مِّنكُمْ
- of you
- உங்களில்
- nuʿadhib
- نُعَذِّبْ
- We will punish
- வேதனை செய்வோம்
- ṭāifatan
- طَآئِفَةًۢ
- a party
- ஒரு கூட்டத்தை
- bi-annahum
- بِأَنَّهُمْ
- because they
- காரணம்/நிச்சயமாக அவர்கள்
- kānū
- كَانُوا۟
- were
- இருந்தனர்
- muj'rimīna
- مُجْرِمِينَ
- criminals
- குற்றவாளிகளாக
Transliteration:
Laa ta'taziroo qad kafartum ba'da eemaanikum; in na'fu 'an taaa'ifatim minkum nu'az zib taaa'ifatam bi annahum kaanoo mujrimeen(QS. at-Tawbah:66)
English Sahih International:
Make no excuse; you have disbelieved [i.e., rejected faith] after your belief. If We pardon one faction of you – We will punish another faction because they were criminals. (QS. At-Tawbah, Ayah ௬௬)
Abdul Hameed Baqavi:
நீங்கள் (செய்யும் விஷமத்தனமான பரிகாசத்திற்கு) வீண் புகல் கூற வேண்டாம். நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் நிச்சயமாக (அதனை) நிராகரித்துவிட்டீர்கள். ஆகவே, உங்களில் ஒரு கூட்டத்தினரை நாம் மன்னித்த போதிலும் மற்றொரு கூட்டத்தினர் நிச்சயமாக குற்றவாளிகளாகவே இருப்பதனால், நாம் அவர்களை வேதனை செய்தே தீருவோம் (என்றும் நபியே! நீங்கள் கூறுங்கள்.) (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௬௬)
Jan Trust Foundation
புகல் கூற வேண்டாம், நீங்கள் ஈமான் கொண்டபின் நிச்சயமாக நிராகரிப்போராய் விட்டீர்கள், நாம் உங்களில் ஒரு கூட்டத்தாரை மன்னித்தபோதிலும், மற்றொரு கூட்டத்தாரை அவர்கள் குற்றவாளிகளாகவே இருப்பதால் நாம் வேதனை செய்வோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் (செய்யும் விஷமத்தனத்திற்கு) புகல் கூறாதீர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் நிராகரித்து விட்டீர்கள். உங்களில் ஒரு கூட்டத்தை நாம் மன்னித்தால் (மற்ற) ஒரு கூட்டத்தை நிச்சயமாக அவர்கள் குற்றவாளிகளாக இருந்த காரணத்தால், வேதனை செய்வோம்.