Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௫௪

Qur'an Surah At-Tawbah Verse 54

ஸூரத்துத் தவ்பா [௯]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا مَنَعَهُمْ اَنْ تُقْبَلَ مِنْهُمْ نَفَقٰتُهُمْ اِلَّآ اَنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَبِرَسُوْلِهٖ وَلَا يَأْتُوْنَ الصَّلٰوةَ اِلَّا وَهُمْ كُسَالٰى وَلَا يُنْفِقُوْنَ اِلَّا وَهُمْ كٰرِهُوْنَ (التوبة : ٩)

wamā manaʿahum
وَمَا مَنَعَهُمْ
And not prevents them
தடையாக இருக்கவில்லை/அவர்களுக்கு
an tuq'bala
أَن تُقْبَلَ
that is accepted
அங்கீகரிக்கப்படுவதற்கு
min'hum
مِنْهُمْ
from them
அவர்களிடமிருந்து
nafaqātuhum
نَفَقَٰتُهُمْ
their contributions
அவர்களுடைய தர்மங்கள்
illā
إِلَّآ
except
தவிர
annahum
أَنَّهُمْ
that they
நிச்சயமாக அவர்கள்
kafarū
كَفَرُوا۟
disbelieve
நிராகரித்தனர்
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
wabirasūlihi
وَبِرَسُولِهِۦ
and in His Messenger
இன்னும் அவனுடைய தூதரை
walā yatūna
وَلَا يَأْتُونَ
and not they come
இன்னும் வரமாட்டார்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
(to) the prayer
தொழுகைக்கு
illā wahum
إِلَّا وَهُمْ
except while they
தவிர/அவர்கள் இருந்தே
kusālā
كُسَالَىٰ
(are) lazy
சோம்பேறிகளாக
walā yunfiqūna
وَلَا يُنفِقُونَ
and not they spend
தர்மம் புரிய மாட்டார்கள்
illā
إِلَّا
except
தவிர
wahum
وَهُمْ
while they
அவர்கள் இருந்தே
kārihūna
كَٰرِهُونَ
(are) unwilling
வெறுத்தவர்களாக

Transliteration:

Wa maa mana'ahum an tuqbala minhum nafaqaatuhum illaaa annnahum kafaroo billaahi wa bi Rasoolihee wa laa yaatoonas Salaata illaa wa hum kusaalaa wa laa yunfiqoona illaa wa hum kaarihoon (QS. at-Tawbah:54)

English Sahih International:

And what prevents their expenditures from being accepted from them but that they have disbelieved in Allah and in His Messenger and that they come not to prayer except while they are lazy and that they do not spend except while they are unwilling. (QS. At-Tawbah, Ayah ௫௪)

Abdul Hameed Baqavi:

அவர்கள் செய்யும் தானம் அங்கீகரிக்கப்படமாட்டாது என்று (இறைவன்) தடுத்திருப்பதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்ததுதான். அன்றி, அவர்கள் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுவதில்லை; வெறுப்புடனே அன்றி அவர்கள் தானம் செய்வதுமில்லை. (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௫௪)

Jan Trust Foundation

அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தனர்; அவர்கள் சோம்பேறிகளாக இருந்தே தவிர தொழுகைக்கு வரமாட்டார்கள்; அவர்கள் வெறுத்தவர்களாக இருந்தே தவிர (அவர்கள்) தர்மம் புரிய மாட்டார்கள் ஆகிய இவற்றைத் தவிர அவர்களுடைய தர்மங்கள் அவர்களிடமிருந்து அங்கீகரிக்கப்படுவதற்கு (வேறு எதுவும்) அவர்களுக்குத் தடையாக இருக்கவில்லை.