Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௪௩

Qur'an Surah At-Tawbah Verse 43

ஸூரத்துத் தவ்பா [௯]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

عَفَا اللّٰهُ عَنْكَۚ لِمَ اَذِنْتَ لَهُمْ حَتّٰى يَتَبَيَّنَ لَكَ الَّذِيْنَ صَدَقُوْا وَتَعْلَمَ الْكٰذِبِيْنَ (التوبة : ٩)

ʿafā
عَفَا
(May) Allah forgive
மன்னிப்பான்
l-lahu
ٱللَّهُ
(May) Allah forgive
அல்லாஹ்
ʿanka
عَنكَ
you!
உம்மை
lima adhinta
لِمَ أَذِنتَ
Why (did) you grant leave
ஏன்அனுமதியளித்தீர்?
lahum
لَهُمْ
to them
அவர்களுக்கு
ḥattā
حَتَّىٰ
until
வரை
yatabayyana
يَتَبَيَّنَ
(became) evident
தெளிவாகி
laka
لَكَ
to you
உமக்கு
alladhīna ṣadaqū
ٱلَّذِينَ صَدَقُوا۟
those who were truthful
உண்மை உரைத்தவர்கள்
wataʿlama
وَتَعْلَمَ
and you knew
இன்னும் நீர் அறிகின்ற
l-kādhibīna
ٱلْكَٰذِبِينَ
the liars?
பொய்யர்களை

Transliteration:

'Afal laahu 'anka lima azinta lahum hattaa yatabai yana lakal lazeena sadaqoo wa ta'lamal kaazibeen (QS. at-Tawbah:43)

English Sahih International:

Allah has pardoned you, [O Muhammad, but] why did you give them permission [to remain behind]? [You should not have] until it was evident to you who were truthful and you knew [who were] the liars. (QS. At-Tawbah, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அல்லாஹ் உங்களை மன்னித்தருள்வானாக! (அவர்கள் உங்களுடன் போருக்கு வராது தங்கிவிட உங்களிடம் அனுமதி கோரிய சமயத்தில்) நீங்கள் ஏன் அவர்களுக்கு அனுமதியளித்தீர்கள்? (அனுமதி அளிக்காது இருந்திருந்தால்) அவர்களில் உண்மை சொல்பவர்கள் யார் என்பதையும் பொய் சொல்பவர்கள் யார் என்பதையும் நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௪௩)

Jan Trust Foundation

(நபியே!) அல்லாஹ் உம்மை மன்னித் தருள்வானாக! அவர்களில் உண்மை சொன்னவர்கள் யார், பொய்யர்கள் யார் என்பதை நீர் தெளிவாக அறிவதற்குமுன் ஏன் அவர்களுக்கு (போருக்கு புறப்படாதிருக்க) அனுமதியளித்தீர்?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் உம்மை மன்னிப்பான்! (அவர்களில்) உண்மை உரைத்தவர்கள் (எவர்கள் என்று) உமக்குத் தெளிவாகி, பொய்யர்களை(யும் அவர்கள் யாரென்று) நீர் அறிகின்ற வரை ஏன் அவர்களுக்கு அனுமதியளித்தீர்?