குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௩௬
Qur'an Surah At-Tawbah Verse 36
ஸூரத்துத் தவ்பா [௯]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِيْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَآ اَرْبَعَةٌ حُرُمٌ ۗذٰلِكَ الدِّيْنُ الْقَيِّمُ ەۙ فَلَا تَظْلِمُوْا فِيْهِنَّ اَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِيْنَ كَاۤفَّةً كَمَا يُقَاتِلُوْنَكُمْ كَاۤفَّةً ۗوَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ (التوبة : ٩)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- ʿiddata
- عِدَّةَ
- (the) number
- எண்ணிக்கை
- l-shuhūri
- ٱلشُّهُورِ
- (of) the months
- மாதங்களின்
- ʿinda l-lahi
- عِندَ ٱللَّهِ
- with Allah
- அல்லாஹ்விடம்
- ith'nā ʿashara
- ٱثْنَا عَشَرَ
- (is) twelve (is) twelve
- பனிரெண்டு
- shahran
- شَهْرًا
- months
- மாதங்களாகும்
- fī kitābi
- فِى كِتَٰبِ
- in (the) ordinance
- புத்தகத்தில், விதியில்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- yawma
- يَوْمَ
- (from the) Day
- நாள்
- khalaqa
- خَلَقَ
- He created
- படைத்தான்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- the heavens
- வானங்களை
- wal-arḍa
- وَٱلْأَرْضَ
- and the earth
- இன்னும் பூமியை
- min'hā
- مِنْهَآ
- of them
- அவற்றில்
- arbaʿatun
- أَرْبَعَةٌ
- four
- நான்கு
- ḥurumun
- حُرُمٌۚ
- (are) sacred
- புனிதமானவை
- dhālika l-dīnu
- ذَٰلِكَ ٱلدِّينُ
- That (is) the religion
- இது/மார்க்கம்
- l-qayimu
- ٱلْقَيِّمُۚ
- the upright
- நேரானது
- falā taẓlimū
- فَلَا تَظْلِمُوا۟
- so (do) not wrong
- ஆகவே அநீதி இழைக்காதீர்கள்
- fīhinna
- فِيهِنَّ
- therein
- அவற்றில்
- anfusakum
- أَنفُسَكُمْۚ
- yourselves
- உங்களுக்கு
- waqātilū
- وَقَٰتِلُوا۟
- And fight
- போர் புரியுங்கள்
- l-mush'rikīna
- ٱلْمُشْرِكِينَ
- the polytheists
- இணைவைப்பவர்கள்
- kāffatan
- كَآفَّةً
- all together
- ஒன்றிணைந்து
- kamā
- كَمَا
- as
- போன்று
- yuqātilūnakum
- يُقَٰتِلُونَكُمْ
- they fight you
- போர் புரிகின்றனர்/உங்களிடம்
- kāffatan
- كَآفَّةًۚ
- all together
- ஒன்றிணைந்து
- wa-iʿ'lamū
- وَٱعْلَمُوٓا۟
- And know
- அறிந்து கொள்ளுங்கள்
- anna l-laha
- أَنَّ ٱللَّهَ
- that Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- maʿa l-mutaqīna
- مَعَ ٱلْمُتَّقِينَ
- (is) with the righteous
- அஞ்சுபவர்களுடன்
Transliteration:
Inna 'iddatash shuhoori 'indal laahis naa 'ashara shahran fee Kitaabil laahi yawma khalaqas samaawaati wal arda minhaaa arba'atun hurum; zaalikad deenul qaiyim; falaa tazlimoo feehinna anfusakum; wa qaatilul mushrikeena kaaaf fattan kamaa yuqaati loonakum kaaaffah; wa'lamooo annal laaha ma'al muttaqeen(QS. at-Tawbah:36)
English Sahih International:
Indeed, the number of months with Allah is twelve [lunar] months in the register of Allah [from] the day He created the heavens and the earth; of these, four are sacred. That is the correct religion [i.e., way], so do not wrong yourselves during them. And fight against the disbelievers collectively as they fight against you collectively. And know that Allah is with the righteous [who fear Him]. (QS. At-Tawbah, Ayah ௩௬)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டுக்கு) பன்னிரண்டுதான். (இவ்வாறே) வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு (மாதங்கள்) சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே, இவற்றில் நீங்கள் (போர் புரிந்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம். எனினும், இணைவைத்து வணங்குபவர்களில் எவரேனும் (அம்மாதங்களில்) உங்களுடன் போர் புரிந்தால் அவ்வாறே நீங்களும் அவர்கள் அனைவருடனும் (அம்மாதங்களிலும்) போர் புரியுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் இறை அச்சமுடையவர்களுடன் இருக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௩௬)
Jan Trust Foundation
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அல்லாஹ்விடம், வானங்களையும், பூமியையும் படைத்த நாளில் அல்லாஹ்வின் புத்தகத்தில் மாதங்களின் எண்ணிக்கை பனிரெண்டு மாதங்களாகும். அவற்றில் புனிதமான நான்கு (மாதங்கள்) உண்டு. இதுதான் நேரான மார்க்க மாகும். ஆகவே, அவற்றில் (அம்மாதங்களில் பாவம் செய்து) உங்களுக்கு அநீதி இழைக்காதீர்கள். நீங்கள் ஒன்றிணைந்து இணைவைப்பவர்களிடம் போர் புரியுங்கள் அவர்கள் ஒன்றிணைந்து உங்களிடம் போர் புரிவதுபோன்று. நிச்சயமாக, அல்லாஹ் (அவனை) அஞ்சுபவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.