Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௩௪

Qur'an Surah At-Tawbah Verse 34

ஸூரத்துத் தவ்பா [௯]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ يٰٓاَيُّهَا الَّذِينَ اٰمَنُوْٓا اِنَّ كَثِيْرًا مِّنَ الْاَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَأْكُلُوْنَ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ ۗوَالَّذِيْنَ يَكْنِزُوْنَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُوْنَهَا فِيْ سَبِيْلِ اللّٰهِ ۙفَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْمٍۙ (التوبة : ٩)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
O you who believe! O you who believe! O you who believe!
நம்பிக்கையாளர்களே!
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
kathīran
كَثِيرًا
many
அதிகமானோர்
mina
مِّنَ
of
இருந்து
l-aḥbāri wal-ruh'bāni
ٱلْأَحْبَارِ وَٱلرُّهْبَانِ
the rabbis and the monks
யூத, கிறித்துவ அறிஞர்கள்/இன்னும் துறவிகள்
layakulūna
لَيَأْكُلُونَ
surely eat
புசிக்கின்றனர், அனுபவிக்கின்றனர்
amwāla
أَمْوَٰلَ
(the) wealth
செல்வங்களை
l-nāsi
ٱلنَّاسِ
(of) the people
மக்களின்
bil-bāṭili
بِٱلْبَٰطِلِ
in falsehood
தவறாக
wayaṣuddūna
وَيَصُدُّونَ
and hinder
இன்னும் தடுக்கின்றனர்
ʿan sabīli
عَن سَبِيلِ
from (the) way
பாதையை விட்டு
l-lahi
ٱللَّهِۗ
(of) Allah
அல்லாஹ்வின்
wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
எவர்கள்
yaknizūna
يَكْنِزُونَ
hoard
சேமிக்கின்றனர்
l-dhahaba
ٱلذَّهَبَ
the gold
தங்கத்தை
wal-fiḍata
وَٱلْفِضَّةَ
and the silver
இன்னும் வெள்ளியை
walā yunfiqūnahā
وَلَا يُنفِقُونَهَا
and (do) not spend it
தர்மம் செய்யமாட்டார்கள்/அவற்றை
fī sabīli
فِى سَبِيلِ
in (the) way
பாதையில்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
fabashir'hum
فَبَشِّرْهُم
[so] give them tidings
நற்செய்தி கூறுவீராக அவர்களுக்கு
biʿadhābin
بِعَذَابٍ
of a punishment
வேதனையைக் கொண்டு
alīmin
أَلِيمٍ
painful
துன்புறுத்தக் கூடியது

Transliteration:

Yaaa aiyuhal lazeena aamanooo inna kaseeramminal ahbaari warruhbaani la yaakuloona amwaalan naasi bil baatili wa yasuddoona 'an sabeelil laah; wallazeena yaknizoonaz zahaba wal fiddata wa laayunfiqoonahaa fee sabeelil laahi fabashshirhum bi'azaabin aleem (QS. at-Tawbah:34)

English Sahih International:

O you who have believed, indeed many of the scholars and the monks devour the wealth of people unjustly and avert [them] from the way of Allah. And those who hoard gold and silver and spend it not in the way of Allah – give them tidings of a painful punishment. (QS. At-Tawbah, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் பலர் மக்களின் பொருள்களைத் தப்பான முறையில் விழுங்கி வருவதுடன் அல்லாஹ்வுடைய பாதையில் (மக்கள்) செல்வதையும் தடை செய்கின்றனர். ஆகவே, (இவர்களுக்கும் இன்னும் எவர்கள்) தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு, அதனை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாதிருக்கின்றனரோ அவர்களுக்கும் (நபியே!) நீங்கள் துன்புறுத்தும் வேதனையை நற்செய்தியாகக் கூறுங்கள். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௩௪)

Jan Trust Foundation

ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும்,சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக யூத, கிறித்துவ அறிஞர்கள் இன்னும் துறவிகளில் இருந்து அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறாக அனுபவிக்கின்றனர். அல்லாஹ்வின் பாதையைவிட்டு தடுக்கின்றனர். எவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்து, அவற்றை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்ய மாட்டார்களோ, அவர்களுக்கு துன்புறுத்தக்கூடிய வேதனையைக் கொண்டு நற்செய்தி கூறுவீராக.