குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௨௯
Qur'an Surah At-Tawbah Verse 129
ஸூரத்துத் தவ்பா [௯]: ௧௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللّٰهُ لَآ اِلٰهَ اِلَّا هُوَ ۗ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ ࣖ (التوبة : ٩)
- fa-in tawallaw
- فَإِن تَوَلَّوْا۟
- But if they turn away
- அவர்கள் திரும்பினால்
- faqul
- فَقُلْ
- then say
- கூறுவீராக
- ḥasbiya l-lahu
- حَسْبِىَ ٱللَّهُ
- "Sufficient for me (is) Allah
- அல்லாஹ் எனக்குப் போதுமானவன்
- lā ilāha
- لَآ إِلَٰهَ
- (There is) no god
- அறவே இல்லை/வணக்கத்திற்குரியவன்
- illā huwa
- إِلَّا هُوَۖ
- except Him
- தவிர/அவனை
- ʿalayhi
- عَلَيْهِ
- On Him
- அவன் மீதே
- tawakkaltu
- تَوَكَّلْتُۖ
- I put my trust
- நான் நம்பிக்கை வைத்து விட்டேன்
- wahuwa rabbu
- وَهُوَ رَبُّ
- And He (is the) Lord
- அவன் அதிபதி
- l-ʿarshi
- ٱلْعَرْشِ
- (of) the Throne
- அர்ஷின்
- l-ʿaẓīmi
- ٱلْعَظِيمِ
- the Great"
- மகத்தானது
Transliteration:
Fa in tawallaw faqul lhasbiyal laahu laaa ilaaha illaa Huwa 'alaihi tawakkkaltu wa Huwa Rabbul 'Arshil 'Azeem(QS. at-Tawbah:129)
English Sahih International:
But if they turn away, [O Muhammad], say, "Sufficient for me is Allah; there is no deity except Him. On Him I have relied, and He is the Lord of the Great Throne." (QS. At-Tawbah, Ayah ௧௨௯)
Abdul Hameed Baqavi:
(நபியே இதற்குப்) பின்னரும் அவர்கள் (உங்களைப் பின்பற்றாது) விலகிக் கொண்டால் (அவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்:) "அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; அவனைத் தவிர வேறு இறைவனில்லை; (என் காரியங்கள் அனைத்தையும்) அவனிடமே நான் நம்பிக்கை வைத்து (ஒப்படைத்து) விட்டேன்; அவன்தான் மகத்தான "அர்ஷின்" அதிபதி. (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௧௨௯)
Jan Trust Foundation
(நபியே! இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறுவீராக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே) கூறுவீராக! அவர்கள் (உம்மை விட்டு விலகி) திரும்பினால் “எனக்குப் போதுமானவன் அல்லாஹ்தான்; அவனைத் தவிர அறவே வணக்கத்திற்குரிய (வேறு இறை)வன் இல்லை; அவன் மீதே நான் நம்பிக்கை வைத்துவிட்டேன்; அவன் மகத்தான ‘அர்ஷின்’ அதிபதி.”