குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௦௬
Qur'an Surah At-Tawbah Verse 106
ஸூரத்துத் தவ்பா [௯]: ௧௦௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاٰخَرُوْنَ مُرْجَوْنَ لِاَمْرِ اللّٰهِ اِمَّا يُعَذِّبُهُمْ وَاِمَّا يَتُوْبُ عَلَيْهِمْۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ (التوبة : ٩)
- waākharūna
- وَءَاخَرُونَ
- And others
- இன்னும் மற்றவர்கள்
- mur'jawna
- مُرْجَوْنَ
- deferred
- தள்ளிவைக்கப் பட்டவர்கள்
- li-amri
- لِأَمْرِ
- for the Command of Allah
- உத்தரவிற்காக
- l-lahi immā
- ٱللَّهِ إِمَّا
- for the Command of Allah whether
- அல்லாஹ்வின்/ஒன்று
- yuʿadhibuhum
- يُعَذِّبُهُمْ
- He will punish them
- தண்டிப்பான்/அவர்களை
- wa-immā yatūbu
- وَإِمَّا يَتُوبُ
- or He will turn (in mercy)
- ஒன்று/மன்னிப்பான்
- ʿalayhim
- عَلَيْهِمْۗ
- to them
- அவர்களை
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌ
- (is) All-Knower
- நன்கறிந்தவன்
- ḥakīmun
- حَكِيمٌ
- All-Wise
- மகா ஞானவான்
Transliteration:
Wa aakharoona murjawna li amril laahi imaa yu'az zibuhum wa immaa yatoobu 'alaihim; wallaahu 'Aleemun Hakeem(QS. at-Tawbah:106)
English Sahih International:
And [there are] others deferred until the command of Allah – whether He will punish them or whether He will forgive them. And Allah is Knowing and Wise. (QS. At-Tawbah, Ayah ௧௦௬)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து(த் தீர்ப்புக்காக) நிறுத்தப்பட்டுள்ள வேறு சிலரும் இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னித்துவிடலாம். அல்லாஹ் (அவர்களுடைய செயல்களை) நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௧௦௬)
Jan Trust Foundation
அல்லாஹ்வின் உத்தரவை எதிர்ப்பார்க்கப்படுகின்ற மற்றும் சிலரும் இருக்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னிக்கலாம். அல்லாஹ் அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், அல்லாஹ்வின் உத்தரவிற்காக தள்ளிவைக்கப்பட்ட மற்றவர்கள் ஒன்று, அல்லாஹ் அவர்களை தண்டிப்பான். அல்லது அவர்களை மன்னிப்பான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான்.