குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௦௧
Qur'an Surah At-Tawbah Verse 101
ஸூரத்துத் தவ்பா [௯]: ௧௦௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمِمَّنْ حَوْلَكُمْ مِّنَ الْاَعْرَابِ مُنٰفِقُوْنَ ۗوَمِنْ اَهْلِ الْمَدِيْنَةِ مَرَدُوْا عَلَى النِّفَاقِۗ لَا تَعْلَمُهُمْۗ نَحْنُ نَعْلَمُهُمْۗ سَنُعَذِّبُهُمْ مَّرَّتَيْنِ ثُمَّ يُرَدُّوْنَ اِلٰى عَذَابٍ عَظِيْمٍ ۚ (التوبة : ٩)
- wamimman
- وَمِمَّنْ
- And among those
- இன்னும் எவர்களில்
- ḥawlakum
- حَوْلَكُم
- around you
- உங்களைச் சூழவுள்ள
- mina l-aʿrābi
- مِّنَ ٱلْأَعْرَابِ
- of the bedouins
- கிராம அரபிகளில்
- munāfiqūna
- مُنَٰفِقُونَۖ
- (are) hypocrites
- நயவஞ்சகர்கள்
- wamin ahli
- وَمِنْ أَهْلِ
- and (also) from people
- இன்னும் வாசிகளில்
- l-madīnati
- ٱلْمَدِينَةِۖ
- (of) the Madinah
- மதீனா
- maradū
- مَرَدُوا۟
- They persist
- அவர்கள் ஊறி விட்டனர்
- ʿalā
- عَلَى
- in
- மீது
- l-nifāqi
- ٱلنِّفَاقِ
- the hypocrisy
- நயவஞ்சகம்
- lā taʿlamuhum
- لَا تَعْلَمُهُمْۖ
- not you know them
- அறியமாட்டீர்/அவர்களை
- naḥnu naʿlamuhum
- نَحْنُ نَعْلَمُهُمْۚ
- We [We] know them
- நாம்/அறிவோம்/அவர்களை
- sanuʿadhibuhum
- سَنُعَذِّبُهُم
- We will punish them
- வேதனை செய்வோம்/அவர்களை
- marratayni
- مَّرَّتَيْنِ
- twice
- இருமுறை
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- yuraddūna
- يُرَدُّونَ
- they will be returned
- திருப்பப்படுவார்கள்
- ilā
- إِلَىٰ
- to
- பக்கம்
- ʿadhābin
- عَذَابٍ
- a punishment
- வேதனையின்
- ʿaẓīmin
- عَظِيمٍ
- great
- பெரிய
Transliteration:
Wa mimmann hawlakum minal A'raabi munaafiqoona wa min ahlil Madeenati maradoo 'alan nifaaq, laa ta'lamuhum nahnu na'lamuhum; sanu'azzibuhum marrataini summa yuraddoona ilaa 'azaabin 'azeem(QS. at-Tawbah:101)
English Sahih International:
And among those around you of the bedouins are hypocrites, and [also] from the people of Madinah. They have persisted in hypocrisy. You, [O Muhammad], do not know them, [but] We know them. We will punish them twice [in this world]; then they will be returned to a great punishment. (QS. At-Tawbah, Ayah ௧௦௧)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே!) உங்களைச் சூழவுள்ள (கிராமங்களில் வசிக்கும்) கிராமத்து அரபிகளில் பல நயவஞ்சகர்கள் இருக்கின்றனர். (அதிலும்) மதீனாவிலுள்ள பலர் வஞ்சகத்திலேயே ஊறிக் கிடக்கின்றனர். (நபியே!) நீங்கள் அவர்களை அறியமாட்டீர்கள்; நாம் அவர்களை நன்கு அறிவோம். அதிசீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை (கடினமாக) வேதனை செய்வோம். முடிவில் மகத்தான வேதனையின் பக்கம் அவர்கள் விரட்டப்படுவார்கள். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௧௦௧)
Jan Trust Foundation
உங்களைச் சுற்றியுள்ள கிராமப்புறத்தவர்களில் நயவஞ்சகர்களும் இருக்கிறார்கள்; இன்னும் மதீனாவில் உள்ளவர்களிலும் நயவஞ்சகத்தில் நிலைபெற்றுவிட்டவர்களும் இருக்கிறார்கள் - (நபியே!) அவர்களை நீர் அறிய மாட்டீர், நாம் அவர்களை நன்கறிவோம்; வெகுசீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை வேதனை செய்வோம் - பின்னர் அவர்கள் கடுமையான வேதனையின்பால் தள்ளப்படுவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்களைச் சூழவுள்ள கிராம அரபிகளிலும் இன்னும் மதீனாவாசிகளிலும் நயவஞ்சகர்கள் உள்ளனர். அவர்கள் நயவஞ்சகத்தின் மீது ஊறிவிட்டனர். (நபியே! நீர்) அவர்களை அறியமாட்டீர்; நாம் அவர்களை அறிவோம். அவர்களை இருமுறை வேதனை செய்வோம். பிறகு, பெரிய வேதனையின் பக்கம் (அவர்கள்) திருப்பப்படுவார்கள்.