Skip to content

ஸூரா ஸூரத்துத் தவ்பா - Page: 7

At-Tawbah

(at-Tawbah)

௬௧

وَمِنْهُمُ الَّذِيْنَ يُؤْذُوْنَ النَّبِيَّ وَيَقُوْلُوْنَ هُوَ اُذُنٌ ۗقُلْ اُذُنُ خَيْرٍ لَّكُمْ يُؤْمِنُ بِاللّٰهِ وَيُؤْمِنُ لِلْمُؤْمِنِيْنَ وَرَحْمَةٌ لِّلَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْۗ وَالَّذِيْنَ يُؤْذُوْنَ رَسُوْلَ اللّٰهِ لَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ٦١

wamin'humu
وَمِنْهُمُ
அவர்களில்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yu'dhūna
يُؤْذُونَ
இகழ்கிறார்கள், குறை கூறுகிறார்கள்
l-nabiya
ٱلنَّبِىَّ
நபியை
wayaqūlūna
وَيَقُولُونَ
கூறுகின்றனர்
huwa
هُوَ
அவர்
udhunun
أُذُنٌۚ
ஒரு காது
qul
قُلْ
கூறுவீராக
udhunu
أُذُنُ
காது
khayrin lakum
خَيْرٍ لَّكُمْ
நல்லது/உங்களுக்கு
yu'minu
يُؤْمِنُ
நம்பிக்கைகொள்கிறார்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wayu'minu
وَيُؤْمِنُ
இன்னும் ஏற்றுக் கொள்கிறார்
lil'mu'minīna
لِلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களை
waraḥmatun
وَرَحْمَةٌ
இன்னும் கருணை
lilladhīna
لِّلَّذِينَ
எவர்களுக்கு
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
minkum
مِنكُمْۚ
உங்களில்
wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
yu'dhūna
يُؤْذُونَ
இகழ்கின்றனர்
rasūla
رَسُولَ
தூதரை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
alīmun
أَلِيمٌ
துன்புறுத்தக்கூடியது
("இந்த நபியிடம் எவர் எதைக் கூறியபோதிலும் அதற்குச்) செவி கொடுக்கக் கூடியவராக அவர் இருக்கின்றார்" என்று கூறி (நமது) நபியைத் துன்புறுத்துபவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(அவ்வாறு அவர்) செவி கொடுப்பது உங்களுக்கே நன்று. அவர் அல்லாஹ்வையும் நம்புகிறார்; நம்பிக்கையாளர்களையும் நம்புகிறார். அன்றி, உங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் மீது மிகக் கருணை உடையவராகவும் இருக்கின்றார்." ஆகவே, (உங்களில்) எவர்கள் (இவ்வாறு கூறி) அல்லாஹ்வுடைய தூதரைத் துன்புறுத்துகிறார்களோ அவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௬௧)
Tafseer
௬௨

يَحْلِفُوْنَ بِاللّٰهِ لَكُمْ لِيُرْضُوْكُمْ وَاللّٰهُ وَرَسُوْلُهٗٓ اَحَقُّ اَنْ يُّرْضُوْهُ اِنْ كَانُوْا مُؤْمِنِيْنَ ٦٢

yaḥlifūna
يَحْلِفُونَ
சத்தியம் செய்கின்றனர்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ் மீது
lakum
لَكُمْ
உங்களுக்காக
liyur'ḍūkum
لِيُرْضُوكُمْ
அவர்கள் திருப்தி படுத்துவதற்காக உங்களை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
warasūluhu
وَرَسُولُهُۥٓ
இன்னும் அவனுடைய தூதர்
aḥaqqu
أَحَقُّ
மிகவும் தகுதியுடையவர்கள்
an yur'ḍūhu
أَن يُرْضُوهُ
அவர்கள் திருப்தி படுத்துவதற்கு/அவனை
in kānū
إِن كَانُوا۟
அவர்கள் இருந்தால்
mu'minīna
مُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
(நம்பிக்கையாளர்களே!) உங்களைத் திருப்திப்படுத்து வதற்காக உங்கள் முன்னிலையில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். அவர்கள் மெய்யாகவே நம்பிக்கை யாளர்களாயிருந்தால், அவர்கள் திருப்திப்படுத்த அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான் மிகவும் தகுதியுடையவர்கள் (என்பதை அறிந்துகொள்வர்.) ([௯] ஸூரத்துத் தவ்பா: ௬௨)
Tafseer
௬௩

اَلَمْ يَعْلَمُوْٓا اَنَّهٗ مَنْ يُّحَادِدِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاَنَّ لَهٗ نَارَ جَهَنَّمَ خَالِدًا فِيْهَاۗ ذٰلِكَ الْخِزْيُ الْعَظِيْمُ ٦٣

alam yaʿlamū
أَلَمْ يَعْلَمُوٓا۟
அவர்கள் அறியவில்லையா?
annahu
أَنَّهُۥ
நிச்சயமாக செய்தி
man
مَن
எவர்
yuḥādidi
يُحَادِدِ
முரண்படுவார்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு
warasūlahu
وَرَسُولَهُۥ
இன்னும் அவனுடைய தூதருக்கு
fa-anna
فَأَنَّ
நிச்சயமாக
lahu
لَهُۥ
அவருக்கு
nāra
نَارَ
நெருப்பு
jahannama
جَهَنَّمَ
நரகத்தின்
khālidan
خَٰلِدًا
நிரந்தரமானவர்
fīhā
فِيهَاۚ
அதில்
dhālika
ذَٰلِكَ
இதுதான்
l-khiz'yu
ٱلْخِزْىُ
இழிவு, கேவலம்
l-ʿaẓīmu
ٱلْعَظِيمُ
பெரிய
எவன் உண்மையாகவே அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றானோ அவனுக்கு நிச்சயமாக நரகத்தின் நெருப்புதான் கிடைக்கும். அதில் அவன் (என்றென்றும்) தங்கி விடுவான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லையா? இதுதான் மகத்தான இழிவாகும். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௬௩)
Tafseer
௬௪

يَحْذَرُ الْمُنٰفِقُوْنَ اَنْ تُنَزَّلَ عَلَيْهِمْ سُوْرَةٌ تُنَبِّئُهُمْ بِمَا فِيْ قُلُوْبِهِمْۗ قُلِ اسْتَهْزِءُوْاۚ اِنَّ اللّٰهَ مُخْرِجٌ مَّا تَحْذَرُوْنَ ٦٤

yaḥdharu
يَحْذَرُ
பயப்படுகின்றனர்
l-munāfiqūna
ٱلْمُنَٰفِقُونَ
நயவஞ்சகர்கள்
an tunazzala
أَن تُنَزَّلَ
இறக்கப்பட்டு
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
sūratun
سُورَةٌ
ஓர் அத்தியாயம்
tunabbi-uhum
تُنَبِّئُهُم
அறிவித்துவிடுவதை/அவர்களுக்கு
bimā
بِمَا
எவற்றை
fī qulūbihim
فِى قُلُوبِهِمْۚ
தங்கள் உள்ளங்களில்
quli
قُلِ
கூறுவீராக
is'tahziū
ٱسْتَهْزِءُوٓا۟
பரிகசித்துக் கொள்ளுங்கள்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
mukh'rijun
مُخْرِجٌ
வெளியாக்குபவன்
مَّا
எதை
taḥdharūna
تَحْذَرُونَ
பயப்படுகிறீர்கள்
நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தியாயம் அருளப்பட்டு அது தங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை வெளிப்படுத்திவிடுமோ என்று பயப்படுகி(ன்றவர்களைப் போல் நயவஞ்சகர்கள் நடித்து பரிகசிக்கின்)றனர். (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் பரிகசித்துக்கொண்டே இருங்கள். ஆயினும், நீங்கள் பயப்படுவதை நிச்சயமாக அல்லாஹ் வெளியாக்கியே தீருவான்." ([௯] ஸூரத்துத் தவ்பா: ௬௪)
Tafseer
௬௫

وَلَىِٕنْ سَاَلْتَهُمْ لَيَقُوْلُنَّ اِنَّمَا كُنَّا نَخُوْضُ وَنَلْعَبُۗ قُلْ اَبِاللّٰهِ وَاٰيٰتِهٖ وَرَسُوْلِهٖ كُنْتُمْ تَسْتَهْزِءُوْنَ ٦٥

wala-in
وَلَئِن
sa-altahum
سَأَلْتَهُمْ
நீர் கேட்டால்/அவர்களை
layaqūlunna
لَيَقُولُنَّ
நிச்சயம் கூறுவார்கள்
innamā
إِنَّمَا
எல்லாம்
kunnā
كُنَّا
நாங்கள் இருந்தோம்
nakhūḍu
نَخُوضُ
மூழ்குபவர்களாக
wanalʿabu
وَنَلْعَبُۚ
இன்னும் விளையாடுபவர்களாக
qul
قُلْ
கூறுவீராக
abil-lahi
أَبِٱللَّهِ
அல்லாஹ்வையா?
waāyātihi
وَءَايَٰتِهِۦ
இன்னும் அவனுடைய வசனங்களை
warasūlihi
وَرَسُولِهِۦ
இன்னும் அவனுடயை தூதரை
kuntum
كُنتُمْ
இருந்தீர்கள்
tastahziūna
تَسْتَهْزِءُونَ
பரிகசிக்கிறீர்கள்
(இதனைப் பற்றி) நீங்கள் அவர்களைக் கேட்பீராயின் "விளையாட்டுக்காக நாங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தோம்" என்று அவர்கள் கூறுவார்கள். அதற்கு (நபியே! அவர்களை நோக்கி) "அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா நீங்கள் பரிகசிக்கின்றீர்கள்?" என்று நீங்கள் கேளுங்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௬௫)
Tafseer
௬௬

لَا تَعْتَذِرُوْا قَدْ كَفَرْتُمْ بَعْدَ اِيْمَانِكُمْ ۗ اِنْ نَّعْفُ عَنْ طَاۤىِٕفَةٍ مِّنْكُمْ نُعَذِّبْ طَاۤىِٕفَةً ۢ بِاَنَّهُمْ كَانُوْا مُجْرِمِيْنَ ࣖ ٦٦

lā taʿtadhirū
لَا تَعْتَذِرُوا۟
புகல் கூறாதீர்கள்
qad kafartum
قَدْ كَفَرْتُم
நிராகரித்து விட்டீர்கள்
baʿda īmānikum
بَعْدَ إِيمَٰنِكُمْۚ
பின்னர்/நீங்கள் நம்பிக்கை கொண்டதற்கு
in naʿfu
إِن نَّعْفُ
நாம் மன்னித்தால்
ʿan ṭāifatin
عَن طَآئِفَةٍ
ஒரு கூட்டத்தை
minkum
مِّنكُمْ
உங்களில்
nuʿadhib
نُعَذِّبْ
வேதனை செய்வோம்
ṭāifatan
طَآئِفَةًۢ
ஒரு கூட்டத்தை
bi-annahum
بِأَنَّهُمْ
காரணம்/நிச்சயமாக அவர்கள்
kānū
كَانُوا۟
இருந்தனர்
muj'rimīna
مُجْرِمِينَ
குற்றவாளிகளாக
நீங்கள் (செய்யும் விஷமத்தனமான பரிகாசத்திற்கு) வீண் புகல் கூற வேண்டாம். நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் நிச்சயமாக (அதனை) நிராகரித்துவிட்டீர்கள். ஆகவே, உங்களில் ஒரு கூட்டத்தினரை நாம் மன்னித்த போதிலும் மற்றொரு கூட்டத்தினர் நிச்சயமாக குற்றவாளிகளாகவே இருப்பதனால், நாம் அவர்களை வேதனை செய்தே தீருவோம் (என்றும் நபியே! நீங்கள் கூறுங்கள்.) ([௯] ஸூரத்துத் தவ்பா: ௬௬)
Tafseer
௬௭

اَلْمُنٰفِقُوْنَ وَالْمُنٰفِقٰتُ بَعْضُهُمْ مِّنْۢ بَعْضٍۘ يَأْمُرُوْنَ بِالْمُنْكَرِ وَيَنْهَوْنَ عَنِ الْمَعْرُوْفِ وَيَقْبِضُوْنَ اَيْدِيَهُمْۗ نَسُوا اللّٰهَ فَنَسِيَهُمْ ۗ اِنَّ الْمُنٰفِقِيْنَ هُمُ الْفٰسِقُوْنَ ٦٧

al-munāfiqūna
ٱلْمُنَٰفِقُونَ
நயவஞ்சக ஆண்கள்
wal-munāfiqātu
وَٱلْمُنَٰفِقَٰتُ
இன்னும் நயவஞ்சக பெண்கள்
baʿḍuhum
بَعْضُهُم
அவர்களில் சிலர்
min baʿḍin
مِّنۢ بَعْضٍۚ
சிலரைச் சேர்ந்தவர்கள்
yamurūna
يَأْمُرُونَ
ஏவுகின்றனர்
bil-munkari
بِٱلْمُنكَرِ
தீமையை
wayanhawna
وَيَنْهَوْنَ
இன்னும் தடுக்கின்றனர்
ʿani l-maʿrūfi
عَنِ ٱلْمَعْرُوفِ
நன்மையை விட்டு
wayaqbiḍūna
وَيَقْبِضُونَ
இன்னும் மூடிக் கொள்கின்றனர்
aydiyahum
أَيْدِيَهُمْۚ
தங்கள் கரங்களை
nasū
نَسُوا۟
மறந்தார்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
fanasiyahum
فَنَسِيَهُمْۗ
ஆகவே மறந்தான்/அவர்களை
inna
إِنَّ
நிச்சயமாக
l-munāfiqīna humu
ٱلْمُنَٰفِقِينَ هُمُ
நயவஞ்சகர்கள்தான்
l-fāsiqūna
ٱلْفَٰسِقُونَ
பாவிகள்
ஆணாயினும் பெண்ணாயினும் நயவஞ்சகர்கள் அனைவரும் ஒரே இனத்தவரே! அவர்கள் (அனைவருமே) பாவமான காரியங்களைச் செய்யும்படித் தூண்டுவார்கள்; நன்மையான காரியங்களைத் தடை செய்வார்கள். (செலவு செய்ய அவசியமான சமயங்களில்) தங்கள் கைகளை மூடிக் கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆதலால், அல்லாஹ்வும் அவர்களை மறந்து விட்டான். நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள்தான் (சதி செய்யும்) கொடிய பாவிகள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௬௭)
Tafseer
௬௮

وَعَدَ اللّٰهُ الْمُنٰفِقِيْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْكُفَّارَ نَارَ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَاۗ هِيَ حَسْبُهُمْ ۚوَلَعَنَهُمُ اللّٰهُ ۚوَلَهُمْ عَذَابٌ مُّقِيْمٌۙ ٦٨

waʿada
وَعَدَ
வாக்களித்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-munāfiqīna
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சக ஆண்களுக்கு
wal-munāfiqāti
وَٱلْمُنَٰفِقَٰتِ
இன்னும் நயவஞ்சக பெண்களுக்கு
wal-kufāra
وَٱلْكُفَّارَ
இன்னும் நிராகரிப்பாளர்களுக்கு
nāra
نَارَ
நெருப்பை
jahannama
جَهَنَّمَ
நரகத்தின்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَاۚ
அதில்
hiya
هِىَ
அதுவே
ḥasbuhum
حَسْبُهُمْۚ
அவர்களுக்கு போதும்
walaʿanahumu
وَلَعَنَهُمُ
இன்னும் சபித்தான்/அவர்களை
l-lahu
ٱللَّهُۖ
அல்லாஹ்
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
muqīmun
مُّقِيمٌ
நிலையானது
நயவஞ்சகரான ஆண்களுக்கும் பெண்களுக்கும் (அவ்வாறே மற்ற) நிராகரிப்பவர்களுக்கும் நரக நெருப்பையே அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கி விடுவார்கள். அதுவே அவர்களுக்குப் போதுமா(ன கூலியா)கும். அன்றி, அல்லாஹ் அவர்களை சபித்தும் இருக்கின்றான். மேலும், அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௬௮)
Tafseer
௬௯

كَالَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ كَانُوْٓا اَشَدَّ مِنْكُمْ قُوَّةً وَّاَكْثَرَ اَمْوَالًا وَّاَوْلَادًاۗ فَاسْتَمْتَعُوْا بِخَلَاقِهِمْ فَاسْتَمْتَعْتُمْ بِخَلَاقِكُمْ كَمَا اسْتَمْتَعَ الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ بِخَلَاقِهِمْ وَخُضْتُمْ كَالَّذِيْ خَاضُوْاۗ اُولٰۤىِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ ۚوَاُولٰۤىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ٦٩

ka-alladhīna
كَٱلَّذِينَ
எவர்களைப்போன்றே
min qablikum
مِن قَبْلِكُمْ
உங்களுக்கு முன்னர்
kānū
كَانُوٓا۟
இருந்தனர்
ashadda
أَشَدَّ
கடுமையானவர்களாக
minkum
مِنكُمْ
உங்களை விட
quwwatan
قُوَّةً
பலத்தால்
wa-akthara
وَأَكْثَرَ
இன்னும் அதிகமானவர்களாக
amwālan
أَمْوَٰلًا
செல்வங்களால்
wa-awlādan
وَأَوْلَٰدًا
இன்னும் சந்ததிகளால்
fa-is'tamtaʿū
فَٱسْتَمْتَعُوا۟
சுகமடைந்தார்கள்
bikhalāqihim
بِخَلَٰقِهِمْ
தங்கள் பங்கைக் கொண்டு
fa-is'tamtaʿtum
فَٱسْتَمْتَعْتُم
நீங்கள் சுகமடைந்தீர்கள்
bikhalāqikum
بِخَلَٰقِكُمْ
உங்கள் பங்கைக் கொண்டு
kamā
كَمَا
போன்று
is'tamtaʿa
ٱسْتَمْتَعَ
சுகமடைந்தார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
min qablikum
مِن قَبْلِكُم
உங்களுக்கு முன்னர்
bikhalāqihim
بِخَلَٰقِهِمْ
தங்கள் பங்கைக் கொண்டு
wakhuḍ'tum
وَخُضْتُمْ
மூழ்கினீர்கள்
ka-alladhī
كَٱلَّذِى
எது போன்று
khāḍū ulāika
خَاضُوٓا۟ۚ أُو۟لَٰٓئِكَ
மூழ்கினர்/அவர்கள்
ḥabiṭat
حَبِطَتْ
அழிந்தன
aʿmāluhum
أَعْمَٰلُهُمْ
அவர்களுடைய செயல்கள்
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
இம்மையில்
wal-ākhirati
وَٱلْءَاخِرَةِۖ
இன்னும் மறுமையில்
wa-ulāika humu
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-khāsirūna
ٱلْخَٰسِرُونَ
நஷ்டவாளிகள்
(நயவஞ்சகர்களே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்ளிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கின்றது. அவர்கள் உங்களைவிட பலசாலிகளாகவும், (உங்களை விட) அதிக பொருளுடையவர்களாகவும், அதிக சந்ததியுடையவர்களாகவும் இருந்து (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த இப்பாக்கியங்களைக் கொண்டு சுகமடைந்தார்கள். உங்களுக்கு முன்னிருந்த இவர்கள் தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு (இவ்வுலகில்) சுகமடைந்தவாறே, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு சுகமடைந்து விட்டீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக் கிடந்தவாறே நீங்களும் மூழ்கிவிட்டீர்கள். இம்மையிலும் மறுமையிலும் அவர்களுடைய (நற்)செயல்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. (அதனால்) அவர்கள் பெரும் நஷ்டமடைந்து விட்டார்கள். (அவ்வாறே நீங்களும் நஷ்டமடைவீர்கள்.) ([௯] ஸூரத்துத் தவ்பா: ௬௯)
Tafseer
௭௦

اَلَمْ يَأْتِهِمْ نَبَاُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ەۙ وَقَوْمِ اِبْرٰهِيْمَ وَاَصْحٰبِ مَدْيَنَ وَالْمُؤْتَفِكٰتِۗ اَتَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِۚ فَمَا كَانَ اللّٰهُ لِيَظْلِمَهُمْ وَلٰكِنْ كَانُوْٓا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ ٧٠

alam yatihim
أَلَمْ يَأْتِهِمْ
வரவில்லையா/அவர்களுக்கு
naba-u
نَبَأُ
செய்தி, சரித்திரம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
min qablihim
مِن قَبْلِهِمْ
இவர்களுக்கு முன்னர்
qawmi
قَوْمِ
சமுதாயம்
nūḥin
نُوحٍ
நூஹூடைய
waʿādin
وَعَادٍ
இன்னும் ஆது
wathamūda
وَثَمُودَ
இன்னும் ஸமூது
waqawmi
وَقَوْمِ
இன்னும் சமுதாயம்
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
இப்றாஹீம்
wa-aṣḥābi madyana
وَأَصْحَٰبِ مَدْيَنَ
இன்னும் மத்யன் வாசிகள்
wal-mu'tafikāti
وَٱلْمُؤْتَفِكَٰتِۚ
தலைகீழாக புரட்டப்பட்ட ஊர்கள்
atathum
أَتَتْهُمْ
அவர்கள் வந்தார்கள்
rusuluhum
رُسُلُهُم
அவர்களுடைய தூதர்கள்
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِۖ
அத்தாட்சிகளைக் கொண்டு
famā kāna
فَمَا كَانَ
இருக்கவில்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
liyaẓlimahum
لِيَظْلِمَهُمْ
அவர்களுக்கு அநீதியிழைப்பவனாக
walākin kānū
وَلَٰكِن كَانُوٓا۟
எனினும்/இருந்தனர்
anfusahum
أَنفُسَهُمْ
தங்களுக்கே
yaẓlimūna
يَظْلِمُونَ
அநீதியிழைப்பவர்களாக
இவர்களுக்கு முன்னிருந்த நூஹ் (நபி) உடைய மக்களின் சரித்திரமும், ஆத், ஸமூத் (என்பவர்களின்) சரித்திரமும், இப்ராஹீம் (நபி) உடைய மக்களின் சரித்திரமும், மத்யன் (என்னும்) ஊராரின் சரித்திரமும், தலைகீழாகப் புரண்டுபோன ஊர்களின் சரித்திரங்களும் அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? (நம்மால் அனுப்பப்பட்ட) அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைத்தான் அவர்களிடம் கொண்டு வந்தார்கள். (அவ்வாறிருந்தும் அந்த தூதர்களை அவர்கள் நிராகரித்ததன் காரணமாக அவர்கள் அனைவரும் அழிந்துவிட்டனர். இதில்) அல்லாஹ் அவர்களுக்கு (யாதொரு) தீங்கும் இழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்(டு அழிந்து விட்)டனர். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௭௦)
Tafseer