Skip to content

ஸூரா ஸூரத்துத் தவ்பா - Page: 5

At-Tawbah

(at-Tawbah)

௪௧

اِنْفِرُوْا خِفَافًا وَّثِقَالًا وَّجَاهِدُوْا بِاَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ فِيْ سَبِيْلِ اللّٰهِ ۗذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ٤١

infirū
ٱنفِرُوا۟
புறப்படுங்கள்
khifāfan
خِفَافًا
இலகுவானவர்களாக
wathiqālan
وَثِقَالًا
இன்னும் கனமானவர்களாக
wajāhidū
وَجَٰهِدُوا۟
இன்னும் போரிடுங்கள்
bi-amwālikum
بِأَمْوَٰلِكُمْ
உங்கள் செல்வங்களாலும்
wa-anfusikum
وَأَنفُسِكُمْ
உங்கள் உயிர்களாலும்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
dhālikum
ذَٰلِكُمْ
இதுவே
khayrun
خَيْرٌ
மிகச் சிறந்தது
lakum
لَّكُمْ
உங்களுக்கு
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
taʿlamūna
تَعْلَمُونَ
நீங்கள் அறிபவர்களாக
நீங்கள் சொற்ப ஆயுதமுடையவர்களாக இருந்தாலும் சரி, முழு ஆயுதபாணிகளாக இருந்தாலும் சரி, நீங்கள் (கால்நடையாகவோ குதிரை மீதேறியோ) புறப்பட்டு, அல்லாஹ்வுடைய பாதையில் உங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரியுங்கள். நீங்கள் அறிவுடையவர்களாய் இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௪௧)
Tafseer
௪௨

لَوْ كَانَ عَرَضًا قَرِيْبًا وَّسَفَرًا قَاصِدًا لَّاتَّبَعُوْكَ وَلٰكِنْۢ بَعُدَتْ عَلَيْهِمُ الشُّقَّةُۗ وَسَيَحْلِفُوْنَ بِاللّٰهِ لَوِ اسْتَطَعْنَا لَخَرَجْنَا مَعَكُمْۚ يُهْلِكُوْنَ اَنْفُسَهُمْۚ وَاللّٰهُ يَعْلَمُ اِنَّهُمْ لَكٰذِبُوْنَ ࣖ ٤٢

law kāna
لَوْ كَانَ
இருந்திருந்தால்
ʿaraḍan
عَرَضًا
பொருளாக
qarīban
قَرِيبًا
அருகில் உள்ளது
wasafaran
وَسَفَرًا
இன்னும் பயணமாக
qāṣidan
قَاصِدًا
சமீபமானது
la-ittabaʿūka
لَّٱتَّبَعُوكَ
பின்பற்றியிருப்பார்கள்/உம்மை
walākin
وَلَٰكِنۢ
எனினும்
baʿudat
بَعُدَتْ
தூரமாகி விட்டது
ʿalayhimu
عَلَيْهِمُ
அவர்கள் மீது
l-shuqatu
ٱلشُّقَّةُۚ
எல்லை
wasayaḥlifūna bil-lahi
وَسَيَحْلِفُونَ بِٱللَّهِ
இன்னும் சத்தியம் செய்கிறார்கள்/அல்லாஹ்வின் மீது
lawi is'taṭaʿnā
لَوِ ٱسْتَطَعْنَا
நாங்கள் ஆற்றல் பெற்றிருந்தால்
lakharajnā
لَخَرَجْنَا
வெளியேறிஇருப்போம்
maʿakum
مَعَكُمْ
உங்களுடன்
yuh'likūna
يُهْلِكُونَ
அழிக்கின்றனர்
anfusahum
أَنفُسَهُمْ
தங்களையே
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
அறிவான்
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
lakādhibūna
لَكَٰذِبُونَ
பொய்யர்கள்தான்
(நபியே!) எளிதில் ஏதும் பொருள் கிடைக்கக்கூடியதாயிருந்து (நீங்கள் சென்ற இடம்) சமீபத்திலும் இருந்திருந்தால் நிச்சயமாக அவர்கள் உங்களைப் பின்பற்றி வந்தே இருப்பார்கள். எனினும் (நீங்கள் சென்ற இடம் அவர்களுக்கு) வெகு தூரமாகி பெரும் சிரமமாகத் தோன்றியது. (ஆதலால்தான் அவர்கள் உங்களைப் பின்பற்றி வரவில்லை. ஆகவே, நீங்கள் அவர்களை நோக்கி "நீங்கள் ஏன் வரவில்லை" எனக் கேட்பீராயின் அதற்கவர்கள்) "எங்களுக்குச் சாத்தியப்பட்டிருந்தால் நிச்சயமாக நாங்கள் உங்களுடன் வந்திருப்போம்" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்(து கூறு)வார்கள். (இவ்வாறு பொய் சத்தியம் செய்யும்) அவர்கள் தங்களையே அழித்துக் கொள்கின்றனர். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௪௨)
Tafseer
௪௩

عَفَا اللّٰهُ عَنْكَۚ لِمَ اَذِنْتَ لَهُمْ حَتّٰى يَتَبَيَّنَ لَكَ الَّذِيْنَ صَدَقُوْا وَتَعْلَمَ الْكٰذِبِيْنَ ٤٣

ʿafā
عَفَا
மன்னிப்பான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿanka
عَنكَ
உம்மை
lima adhinta
لِمَ أَذِنتَ
ஏன்அனுமதியளித்தீர்?
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ḥattā
حَتَّىٰ
வரை
yatabayyana
يَتَبَيَّنَ
தெளிவாகி
laka
لَكَ
உமக்கு
alladhīna ṣadaqū
ٱلَّذِينَ صَدَقُوا۟
உண்மை உரைத்தவர்கள்
wataʿlama
وَتَعْلَمَ
இன்னும் நீர் அறிகின்ற
l-kādhibīna
ٱلْكَٰذِبِينَ
பொய்யர்களை
(நபியே!) அல்லாஹ் உங்களை மன்னித்தருள்வானாக! (அவர்கள் உங்களுடன் போருக்கு வராது தங்கிவிட உங்களிடம் அனுமதி கோரிய சமயத்தில்) நீங்கள் ஏன் அவர்களுக்கு அனுமதியளித்தீர்கள்? (அனுமதி அளிக்காது இருந்திருந்தால்) அவர்களில் உண்மை சொல்பவர்கள் யார் என்பதையும் பொய் சொல்பவர்கள் யார் என்பதையும் நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௪௩)
Tafseer
௪௪

لَا يَسْتَأْذِنُكَ الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ اَنْ يُّجَاهِدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْۗ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِالْمُتَّقِيْنَ ٤٤

lā yastadhinuka
لَا يَسْتَـْٔذِنُكَ
அனுமதி கோர மாட்டார்(கள்)/உம்மிடம்
alladhīna yu'minūna
ٱلَّذِينَ يُؤْمِنُونَ
எவர்கள்/நம்பிக்கை கொள்வார்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wal-yawmi l-ākhiri
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
இன்னும் இறுதி நாளை
an yujāhidū
أَن يُجَٰهِدُوا۟
அவர்கள் போரிடுவதிலிருந்து
bi-amwālihim
بِأَمْوَٰلِهِمْ
தங்கள் செல்வங்களால்
wa-anfusihim
وَأَنفُسِهِمْۗ
இன்னும் தங்கள் உயிர்களால்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
bil-mutaqīna
بِٱلْمُتَّقِينَ
அஞ்சுபவர்களை
அல்லாஹ்வையும் இறுதிநாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரியாமலிருக்க உங்களிடம் அனுமதி கோரவே மாட்டார்கள். இறையச்சம் உடைய(இ)வர்களை அல்லாஹ் நன்கறிவான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௪௪)
Tafseer
௪௫

اِنَّمَا يَسْتَأْذِنُكَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَارْتَابَتْ قُلُوْبُهُمْ فَهُمْ فِيْ رَيْبِهِمْ يَتَرَدَّدُوْنَ ٤٥

innamā
إِنَّمَا
எல்லாம்
yastadhinuka
يَسْتَـْٔذِنُكَ
அனுமதி கோருவார்(கள்)/உம்மிடம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wal-yawmi l-ākhiri
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
இன்னும் இறுதி நாளை
wa-ir'tābat
وَٱرْتَابَتْ
இன்னும் சந்தேகித்தன
qulūbuhum
قُلُوبُهُمْ
உள்ளங்கள்/அவர்களுடைய
fahum
فَهُمْ
எனவே, அவர்கள்
fī raybihim
فِى رَيْبِهِمْ
தங்கள் சந்தேகத்தில்
yataraddadūna
يَتَرَدَّدُونَ
தடுமாறுகின்றனர்
(போருக்கு வராதிருக்க) உங்களிடம் அனுமதி கோருவதெல்லாம், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உண்மை யாகவே நம்பிக்கை கொள்ளாதவர்கள்தாம். அவர்களுடைய உள்ளங்கள் சந்தேகத்தில் ஆழ்ந்து விட்டன. ஆகவே, அவர்கள் தங்கள் சந்தேகத்திலேயே சிக்கித் தடுமாறுகின்றனர். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௪௫)
Tafseer
௪௬

۞ وَلَوْ اَرَادُوا الْخُرُوْجَ لَاَعَدُّوْا لَهٗ عُدَّةً وَّلٰكِنْ كَرِهَ اللّٰهُ انْۢبِعَاثَهُمْ فَثَبَّطَهُمْ وَقِيْلَ اقْعُدُوْا مَعَ الْقٰعِدِيْنَ ٤٦

walaw arādū
وَلَوْ أَرَادُوا۟
அவர்கள் நாடியிருந்தால்
l-khurūja
ٱلْخُرُوجَ
வெளியேறுவதை
la-aʿaddū
لَأَعَدُّوا۟
ஏற்பாடு செய்திருப்பார்கள்
lahu
لَهُۥ
அதற்கு
ʿuddatan
عُدَّةً
ஒரு தயாரிப்பை
walākin
وَلَٰكِن
எனினும்
kariha
كَرِهَ
வெறுத்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
inbiʿāthahum
ٱنۢبِعَاثَهُمْ
அவர்கள் புறப்படுவதை
fathabbaṭahum
فَثَبَّطَهُمْ
ஆகவே தடுத்து விட்டான்/அவர்களை
waqīla
وَقِيلَ
இன்னும் கூறப்பட்டது
uq'ʿudū
ٱقْعُدُوا۟
தங்கி விடுங்கள்
maʿa
مَعَ
உடன்
l-qāʿidīna
ٱلْقَٰعِدِينَ
தங்குபவர்கள்
அவர்கள் (உங்களுடன் போருக்கு) புறப்பட (உண்மை யாகவே) எண்ணியிருந்தால் அதற்கு வேண்டிய தயாரிப்புகளை (முன்னதாகவே) அவர்கள் செய்திருப்பார்கள். எனினும் (உங்களுடன்) அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து அவர்கள் புறப்படாது தடை செய்துவிட்டான். ஆகவே (முதியோர் சிறியோர் பெண்கள் போன்ற, போருக்கு வரமுடியாது வீட்டில்) தங்குபவர்களுடன் நீங்களும் தங்கிவிடுங்கள் என்று (அவர்களுக்குக்) கூறப்பட்டு விட்டது (போலும்.) ([௯] ஸூரத்துத் தவ்பா: ௪௬)
Tafseer
௪௭

لَوْ خَرَجُوْا فِيْكُمْ مَّا زَادُوْكُمْ اِلَّا خَبَالًا وَّلَاَوْضَعُوْا خِلٰلَكُمْ يَبْغُوْنَكُمُ الْفِتْنَةَۚ وَفِيْكُمْ سَمّٰعُوْنَ لَهُمْۗ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِالظّٰلِمِيْنَ ٤٧

law kharajū
لَوْ خَرَجُوا۟
அவர்கள் வெளியேறி இருந்தால்
fīkum
فِيكُم
உங்களுடன்
مَّا
அதிகப்படுத்தி இருக்க மாட்டார்கள்
zādūkum
زَادُوكُمْ
அதிகப்படுத்தி இருக்க மாட்டார்கள் உங்களுக்கு
illā
إِلَّا
தவிர
khabālan
خَبَالًا
தீமையை
wala-awḍaʿū
وَلَأَوْضَعُوا۟
இன்னும் விரைந்திருப்பார்கள்
khilālakum
خِلَٰلَكُمْ
உங்களுக்கிடையில்
yabghūnakumu
يَبْغُونَكُمُ
தேடுவார்கள்/உங்களுக்கு
l-fit'nata
ٱلْفِتْنَةَ
குழப்பத்தை
wafīkum
وَفِيكُمْ
இன்னும் உங்களுடன்
sammāʿūna
سَمَّٰعُونَ
ஒற்றர்கள்
lahum
لَهُمْۗ
அவர்களுக்கு
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
bil-ẓālimīna
بِٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை
அவர்கள் உங்களுடன் வந்திருந்தால் ஒழுங்கீனத்தைத் தவிர (வேறு எதனையும்) உங்களுக்கு அதிகரிக்கச் செய்திருக்க மாட்டார்கள். விஷமத்தைக் கருதி உங்கள் மத்தியில் அலங்கோலத்தையும் உண்டுபண்ணி இருப்பார்கள். அவர்களுடைய ஒற்றர்களும் உங்களுடன் இருக்கின்றனர். ஆனால், அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்காரர்களை நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௪௭)
Tafseer
௪௮

لَقَدِ ابْتَغَوُا الْفِتْنَةَ مِنْ قَبْلُ وَقَلَّبُوْا لَكَ الْاُمُوْرَ حَتّٰى جَاۤءَ الْحَقُّ وَظَهَرَ اَمْرُ اللّٰهِ وَهُمْ كٰرِهُوْنَ ٤٨

laqadi ib'taghawū
لَقَدِ ٱبْتَغَوُا۟
தேடியுள்ளனர்
l-fit'nata
ٱلْفِتْنَةَ
குழப்பத்தை
min qablu
مِن قَبْلُ
முன்னர்
waqallabū laka
وَقَلَّبُوا۟ لَكَ
இன்னும் புரட்டினர்/உமக்கு
l-umūra
ٱلْأُمُورَ
காரியங்களை
ḥattā
حَتَّىٰ
இறுதியாக
jāa l-ḥaqu
جَآءَ ٱلْحَقُّ
வந்தது/சத்தியம்
waẓahara
وَظَهَرَ
இன்னும் வென்றது
amru
أَمْرُ
கட்டளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wahum
وَهُمْ
அவர்கள் இருந்தும்
kārihūna
كَٰرِهُونَ
வெறுப்பவர்களாக
(உங்களுக்கு) வெற்றி கிடைக்கும் வரையில் இதற்கு முன்னரும் அவர்கள் விஷமம் செய்யக் கருதி உங்கள் காரியங்களை (தலைகீழாய்)ப் புரட்டிக்கொண்டே இருந்தனர். (உங்களுடைய வெற்றியை) அவர்கள் வெறுத்தபோதிலும் அல்லாஹ்வுடைய கட்டளையே வெற்றியடைந்தது. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௪௮)
Tafseer
௪௯

وَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ ائْذَنْ لِّيْ وَلَا تَفْتِنِّيْۗ اَلَا فِى الْفِتْنَةِ سَقَطُوْاۗ وَاِنَّ جَهَنَّمَ لَمُحِيْطَةٌ ۢ بِالْكٰفِرِيْنَ ٤٩

wamin'hum
وَمِنْهُم
அவர்களில்
man
مَّن
எவர்
yaqūlu
يَقُولُ
கூறுகிறார்
i'dhan
ٱئْذَن
அனுமதி தருவீராக
لِّى
எனக்கு
walā taftinnī
وَلَا تَفْتِنِّىٓۚ
சோதிக்காதீர்/என்னை
alā
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
fī l-fit'nati
فِى ٱلْفِتْنَةِ
சோதனையில்
saqaṭū
سَقَطُوا۟ۗ
விழுந்தனர்
wa-inna jahannama
وَإِنَّ جَهَنَّمَ
நிச்சயமாக நரகம்
lamuḥīṭatun
لَمُحِيطَةٌۢ
சூழ்ந்தே உள்ளது
bil-kāfirīna
بِٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களை
(நபியே! "போருக்கு அழைத்து) நீங்கள் என்னைச் சோதனைக்குள்ளாக்காமலே (வீட்டில் நான் தங்கியிருக்க) எனக்கு அனுமதி தாருங்கள்" என்று கோருபவர்களும் அவர்களில் சிலர் இருக்கின்றனர். (எனினும் இவ்வாறு கோரும்) அவர்கள் (கஷ்டமான பல) சோதனைகளிலேயே மூழ்கிக் கிடக்கவில்லையா? நிராகரிப்பவர்களை நிச்சயமாக நரகம் சூழ்ந்து கொண்டிருக்கிறது. ([௯] ஸூரத்துத் தவ்பா: ௪௯)
Tafseer
௫௦

اِنْ تُصِبْكَ حَسَنَةٌ تَسُؤْهُمْۚ وَاِنْ تُصِبْكَ مُصِيْبَةٌ يَّقُوْلُوْا قَدْ اَخَذْنَآ اَمْرَنَا مِنْ قَبْلُ وَيَتَوَلَّوْا وَّهُمْ فَرِحُوْنَ ٥٠

in tuṣib'ka
إِن تُصِبْكَ
அடைந்தால்/உம்மை
ḥasanatun
حَسَنَةٌ
ஒரு நன்மை
tasu'hum
تَسُؤْهُمْۖ
துக்கப்படுத்துகிறது/அவர்களை
wa-in tuṣib'ka
وَإِن تُصِبْكَ
இன்னும் அடைந்தால்/உம்மை
muṣībatun
مُصِيبَةٌ
ஒரு சோதனை
yaqūlū
يَقُولُوا۟
கூறுகின்றனர்
qad akhadhnā
قَدْ أَخَذْنَآ
எடுத்துக் கொண்டோம்
amranā
أَمْرَنَا
எங்கள் காரியத்தை
min qablu
مِن قَبْلُ
முன்னரே
wayatawallaw
وَيَتَوَلَّوا۟
திரும்புகின்றனர்
wahum
وَّهُمْ
அவர்கள்
fariḥūna
فَرِحُونَ
மகிழ்ச்சியடைந்தவர்களாக
(நபியே!) உங்களுக்கு யாதொரு நன்மையேற்படின் (அது) அவர்களுக்குத் துன்பத்தைத் தருகின்றது. உங்களுக்கு யாதொரு தீங்கேற்பட்டாலோ "நிச்சயமாக நாங்கள் எங்களுடைய காரியத்தில் (உங்களைச் சம்பந்தப்படுத்தாது) ஏற்கனவே எச்சரிக்கையாய் இருந்து கொண்டோம்" என்று கூறி மிக்க மகிழ்ச்சியுடன் (உங்களை விட்டு) விலகிச் செல்கின்றனர். ([௯] ஸூரத்துத் தவ்பா: ௫௦)
Tafseer